Purattasi month Saturday fasting features and methods

புரட்டாசி மாத சனி கிழமை சிறப்பும் விரத முறையும்

Sri venkatajalapathi

புரட்டாசி மாத சனி கிழமை விரதம் பெருமாளுக்காக எடுக்கப்படும் விரதமாகும் . திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமத்தில் இந்த பூமியில் அவதரித்தார் .அவர் தங்கிய இடமான திருமலையில் வெங்கடாஜலபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் .

புரட்டாசி சனி கிழமை விரதம் இருக்க விரும்புவோர் காலையில் குளித்துவிட்டு பெருமாள் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து அதனுடன் துளசி சேர்த்து ஸ்வாமியை வணங்கவேண்டும் ,பின்பு அந்த நீரை சிறிது அருந்தவேண்டும் . மதியம் எளிமையான உணவை உட்கொள்ளவேண்டும் மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்கிவிட்டு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றவேண்டும். வசதிபடைத்தவர்கள் கடைசி சனியன்று சக்கரைப்பொங்கல் அல்லது புளியோதரை செய்து தானம் செய்யலாம் .

இக்காலங்களில் நாம் விஷ்ணு சகஸ்ரநாமம் ,வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் ,நாலயரத்திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை படிக்க வேண்டும் .
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சபம் பெருகும் ,திருமண தடை ,கிரக தோஷம் விலகும் , சனி தோஷ பாதிப்பு குறையும் .
நன்றி -தினமலர் .

5 Comments

Leave a Reply