ஸ்ரீ அக்னீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் – கஞ்சனூர்
இறைவன் :அக்னீஸ்வரர்
தாயார் : கற்பகம்பாள்
தல விருச்சம் : பலா,புரசு
தல தீர்த்தம் :அக்னி தீர்த்தம் ,பராசர தீர்த்தம்
ஊர் : கஞ்சனூர்
மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு
- கும்பகோணத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகும் .
- தேவார பாடல் பெற்ற தலம், தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 36 வது தலமாகும் .
- சிவபெருமான் உயர்ந்த பானத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார் .
- பிரமனுக்கு இத்தலத்தில் இறைவன் திருமணக்காட்சி கொடுத்தார் அதனால் பிரமபுரி என்ற மற்றொரு பெயரும் உண்டு .
- பராசர முனிவருக்கு சித்த பிரமையை நீக்கி அவருக்கு சிவன் தாண்டவ கோலத்தை காட்டி முக்தி கொடுத்தார் ,அதனால் இங்கு உள்ள நடராஜருக்கு “முக்தி தாண்டவ மூர்த்தி “என்ற பெயர் உண்டு .
- கலிக்காமருக்கு திருமணம் நடந்த இடம் இத்தலமாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாரர் அவதார தலம் .
- பஞ்சாட்சர மகிமையை உலகுக்கு எடுத்து காட்டிய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம் . வைணவ குலத்தில் பிறந்த இவர் திருநீறும் ,ருட்ராக்ஷமும் அணிந்து சிவனையே சரணம் என்று இருந்தார் . இவ் ஊரின் மக்களின் சொல்லியவாறு பழுக்க காட்சியை முக்காலியில் அமர்ந்து ‘சிவமே பரம்பொருள் ‘என்று அவர் கூறியதை அவர்கள் வியப்புடன் பார்த்தனர் .இக்காட்சி கோவிலின் உள் சிற்பமாக உள்ளது.
- புல் நந்தி இங்கு சிறப்புடையதாகும்,ஒரு பிராமணர் தான் சுமந்து வந்த புல் கட்டை கிழேபோடும் போது ஒரு கன்று இறந்துவிட்டது உடனே அங்குள்ள பிராமணர்கள் அவரை விலக்கி வைத்தனர் .அவர் என்ன செய்வது என்று அறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார் பின்பு அவர் ஓம்நமசிவாய என்று பஞ்சாச்சரத்தை சொல்லியவாறு சென்றார் ,உடனே ஹரதத்தர் அவரிடம் பஞ்சாச்சரத்தை சொன்னதால் எல்லா பாவங்களும் விலகிவிடும் என்று சொன்னார் ஆனால் அங்குள்ளவர்கள் அதை மறுக்கவே அவர் ஒரு புல் கட்டை நந்தியிடம் போட சொன்னர் அந்த பிராமணரும் புல் கட்டை போட நந்தி அதை உண்ணியது ,அதை கண்ட எல்லோரும் பஞ்சாச்சரத்தின் மகிமையை உணர்ந்தனர் .
- சுக்ராச்சாரியரால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து நீங்க விஷ்னு பகவான் இத்தலத்தில் ஹரதத்தர் என்ற பெயரில் இத்தலத்தில் பிறந்து சிவனை வணங்கி தன் சாபத்தில் இருந்து விடுபட்டார் ,ஆதலால் சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் போக இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் தோஷங்கள் விலகி வாழ்வில் வெற்றி பெறலாம் .
செல்லும் வழி:
மயிலாடுதுறையில் இருந்து 20 km தொலைவிலும் ,கும்பகோணத்தில் இருந்து 19 km தொலைவிலும் உள்ளது ,ஆடுதுறை அருகில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 மாலை 4 .00 -9 .00
Location :
தென்னாடுடைய சிவனே போற்றி ,எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி