ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் -திருவனந்தபுரம்
இறைவன் : மஹாதேவன்
தாயார் : பார்வதி
ஊர் : திருவனந்தபுரம்
மாவட்டம் : திருவனந்தபுரம் ,கேரளா
- 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயில்
- சுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தரும் இடம்
- விநாயகர் ,பார்வதி ,ஹனுமான் ,ஸ்ரீகிருஷ்ணர் ,சாஸ்தா ஆகியோர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
- பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் சுத்தப்படுடுத்தும் வேலையை ஒரு வயதான பெண்மணி செய்து வந்தார் அவர் வேலை செய்த களைப்பு நீங்க இங்குள்ள மரத்தின் கீழ் துடைப்பத்தையும் மண் அள்ளும் சட்டி ஆகியவற்றை மரத்தின் ஓரத்தில் வைத்து உறங்குவார் அவ்வாறு ஒரு நாள் அவர் ஓய்வு எடுத்துவிட்டு அந்த சட்டியை எடுக்க முயன்றார் ஆனால் அதை அவ்விடத்தில் இருந்து எடுக்க முடியவில்லை அவள் ஆச்சரியப்பட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து உடைக்க முயன்றார் அப்போது அதில் இருந்து ரத்தம் வடிந்தது அவள் அந்த அதிசயத்தை கண்டு தன்னை காண அந்த ஆனந்த கூத்தன் சிவனே வந்திருக்கிறார் என்று எண்ணி அப்படியே அவரை கைதொழுது வணங்கினார் . பிறகு இதை கேள்வியுற்ற திருவாங்கூர் மஹாராஜா இங்கு கோயிலை எழுப்பினார் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 4 .00 மணி முதல் 12 .00 மணி வரை
மாலை 5 .00 மணி முதல் 8 .30 மணி வரை
செல்லும் வழி :
இக்கோயிலானது திருவனந்தபுரம் பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் என்ற இடத்தில் overbridge அருகில் உள்ளது. பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவிலும் , பத்மநாப கோயிலில் இருந்து 1 km தொலைவிலும் உள்ளது .
Location: