ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்-ஆடுதுறை
இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி : பவளக்கொடியம்மை
தல விருச்சகம் : பவள மல்லிகை
தல தீர்த்தம் : சகாயதீர்த்தம் , சூரிய தீர்த்தம்
புராணப்பெயர் : திருதென்குரங்காடுதுறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் இது 31 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 94 வது தேவாரதலமாகும்.
- வாலி ,சுக்ரீவர் ,அனுமன் பூஜித்த தலம் என்பதால் இவ்விடத்துக்கு இவ் திருதென்குரங்காடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது .
- சோழ மன்னன் கண்டராத்திய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி கற்றளியாக கடுவிக்கப்பட்டது இந்த ஆலயம் .தெற்கு வாயிலுக்கு முன்னே ,தெற்கு நோக்கி சென்று பிள்ளையாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால் சுக்கிரீவன் ஆபத்சகாயசுரரை வாங்குவதையும் ,சுக்கிரீஸ்வரை இறைவன் அன்னப்பறவையாகவும் ,அவரது தேவியை பாரிஜாத மரமாகவும் உருவாற்றிய தல வரலாற்று காட்சிகளை சுதை சிற்பமாகவும் வடித்துள்ளார்கள்,
- இங்கு சுயம்பு மூர்த்தியாக இறைவன் காட்சி தருகிறார் .இவரை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது .
- இக்கோயிலை அமைத்த செம்பியன் மாதேவியார் சிவபெருமானை வணங்குவது போல் புடைப்பு சிற்பங்களை கருவறை சுற்றி காணலாம் .
- இக்கோயில் இறைவனை வணங்கினால் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் மேம்படலாம் என்று நம்பப்படுகிறது
- இக்கோயிலில் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன .
- ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5 ,6 ,7 தேதிகளில் சூரியனது ஒளி கதிர்கள் சன்னதியின் வெளியே உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்து கடந்து ஸ்வாமியின் மீது படுகிறது .
- பைரவரும் ,அகத்தியரும் வழிபட்ட கோயிலாகும் ,தெற்கு பிரகாரத்தில் அகத்தியர் நடராஜர் திருவுருவ புடைசிற்பங்களும் இங்கே காணலாம்.நடராஜர் தன் ஆனந்த நடனத்தை இவ்விடத்தில் அகத்தியர் வேண்டுதலுக்கு இறைவன் இணங்கி ஆடிக்காட்டியுளார்
- அனுமன் ஒரு சமயம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து போகும் அளவுக்கு இசைபாடிக்கொண்டிருந்தார் .அவரின் இசையில் மயங்கிய நாரத முனிவர் கிழே உட்கார்ந்து மெய் மறந்து கேட்கலானார் ,பிறகு அவர் அங்கிருந்து புறப்படும் போது தன்னுடைய வீணையை எடுக்கமுடியாமல் பனியால் மூடிவிட்டது . கோபமுற்ற நாரத முனிகள் அனுமனை பார்த்து நீ கற்ற இந்த இசையை மறந்துபோவாயாக என்று சாபம் இட்டார் .மனம் வருந்திய அனுமன் தன்னுடைய அரசன் சுக்ரீவன் வணங்கிய இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி இழந்த தன் இசையை மீட்டார் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-abathsahayeswarar-temple-aduthurai.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .30 – 12 .00 ,மாலை 5 .30 -8 .30
9443463119 , 9442425809
செல்லும் வழி:
சுமார் கும்பகோணத்தில் 14 km தொலைவில் ஆடுதுறை உள்ளது. பேருந்து நிலையத்தில் 1km நடந்தால் கோயிலை அடையலாம் .கும்பகோணம் – மயிலாடுதுறை செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ் இடத்தில் நின்று செல்லும் .
Location: