ஆதி கேசவ பெருமாள் கோயில் – வடமதுரை
ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில் . இக்கோயிலானது ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது . மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ராஜசிம்மன் சிலையானது நம்மை வரவேற்கிறது , ஆனால் பல்லவர்கள் தொடர்பு பற்றி இக்கோயில் கல்வெட்டுகளில் இல்லை
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பலிபீடம் மற்றும் மூன்று அடுக்கு கோபுரத்தை கொண்ட கருட சன்னதியை நாம் காணலாம் . சற்று வலது வலது புறத்தில் மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . கருட சன்னதிக்கு முன் நிறைய வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது , அதில் நிறைய சிலைகளை வடித்துள்ளார்கள். அவ் மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரு மண்டபத்தை அடையலாம் . அவ் மண்டபத்தில் இராமாயண கதைகளை மிக அழகாக சுதை சிற்பமாக வடித்துள்ளார்கள் . ராமன் , லக்ஷ்மணன் மற்றும் லவா குசா இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் பத்து தலை ராவணன் போர்கள் ஆகியவற்றை அழகாக செதுக்கியுள்ளார்கள்.
மூலவர் ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . இங்குள்ள ராமன் மற்றும் பரதர் உற்சவர்கள் செம்பால் செய்யப்பட்டு ராஜேந்திர சோழனால் கோயிலுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . ஆதலால் இவை 1000 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும் .
Photos :
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-adi-kesava-perumal-temple-vada.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 இருந்து 12 மணி வரை , மாலை 5 மணி இருந்து 8 மணி வரை
செல்லும் வழி:
இக்கோயிலானது சென்னை பெரியபாளையத்தில் இருந்து வேங்கல் திருவள்ளூர் சாலையில் சுமார் 1 km சென்றால் இக்கோயில் அடையலாம் . மற்றும் பெரியபாளையம் சென்றும் இக்கோயிலுக்கு செல்லலாம்.
Location: