Sri Adinatha Perumal Temple – Alwarthinagari

ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோயில் – ஆழ்வார்திருநகரி 

Adinatha perumal temple - Alwarthirunagari

மூலவர் -ஆதிநாதன் ,ஆதிப்பிரான் 

தாயார் -ஆதிநாத நாயகி ,திருக்குருகூர் நாயகி.

தல விருட்சம் – உறங்கா புளியமரம்.

தீர்த்தம்- தாமிரபரணி ,பிரம்ம  தீர்த்தம்.

கோலம் –  நின்ற திருக்கோலம்.

சிறப்பு சன்னதி – நம்மாழ்வார் , ஞானப்பிரான் , உறங்கா புளியமரம் ,மதில் மேல் கருடன் 

மற்ற சிறப்புகள் –  சங்கு மண்டபம்  , கல் நாதஸ்வரம் 

விமானம் – கோவிந்த விமானம் 

ஊர் – ஆழ்வார்திருநகரி , திருக்குருகூர் 

மாவட்டம் – தூத்துக்குடி , தமிழ்நாடு 

மங்களாசனம் –  நம்மாழ்வார், நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் மங்களாசனம் செய்துள்ளார் .  

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று,

நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்

குன்றும் போல் மணிமாடம் நீடு திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத்  தெய்வம் நாடுதீரே

நம்மாழ்வார் 

ஆழ்வார்களால் மங்களாசனம்  செய்யப்பட்ட பெருமாள் கோயில்களை திவ்ய தேசங்கள் என்று சொல்வார்கள் . அவ்வாறு அவர்களால் மங்களாசனம்  செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரை ஒட்டி  9 திவ்ய தேசங்கள் உள்ளன . அவைகளை நவ திருப்பதி தலங்கள்  என்று அழைக்கிறார்கள் , அவைகளை நவகிரக தலங்களாக பக்தர்கள் வணங்குகிறார்கள் .  இந்த ஆழ்வார்திருநகரி தலமானது நவதிருப்பதி தலத்தில் 9 வது தலமாகவும் , குரு பகவான் அம்சமாக விளங்கும் தலமாகும் . 

கோயில் அமைப்பு : 

திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.

பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன.இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது.கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன.ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில்  வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

தல பெருமை : 

 இங்கு ஆற்றில் மிதந்து வந்த சங்கு , இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.முனிவர்களுக்கு பெருமாள்  பூமி பிராட்டியுடன்  வராக அவதாரத்தை காட்டிய இடம்.  தாந்தன் என்பவருக்கு  பகவான் மோட்சம் கொடுத்ததால் தாந்த சேத்திரம் என்றும் பெயர் உண்டு.  ஸ்ரீ லக்ஷ்மி, பெருமாளை அடைய இங்கு தவமிருந்து பின்னர் திருமால் லட்சுமியை மாலையாக மார்பில் தரித்துக் கொண்ட  சேத்திரம்.


மூலவர் ஆதிநாதர்: 

 கருவறையில் மூலவராக ஆதிநாதப்பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார். இவர் சுயம்பு மூர்த்தி என்றாலும் உயர்ந்த  திருமேனியாக காட்சிதருகிறார் . நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும் நின்ற கோலத்தில் நிற்கும் பெருமாளின் திருப்பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக ஜதீகம்.

ஞானப்பிரான் சன்னதி:


இரண்யாட்சன் என்னும் அரக்கன் முற்காலத்தில் பூமி உருண்டையை எடுத்து சமுத்திரத்துக்குள் மறைத்து வைத்ததும், அதனை பெருமாள் வராக அவதாரம் எடுத்து கொண்டுவந்த வரலாறும் நாம் அறிந்ததே.இத்தகைய சிறப்பு வாய்ந்த வராக அவதாரத்தை தரிசிக்கும் பொருட்டு இங்கு வாழ்ந்த வைணவ முனிவர்கள் சிலர் இங்கு தவமியற்றினார்கள். அவர்களின் தவத்திற்கு இறங்கி தன் மடியில் பூமாதேவியை இருத்தியபடி வராகராக பெருமாள் காட்சியளித்தார். இந்த வராக மூர்த்தியே ஞானப்பிரானாக இங்கு சேவை சாதிக்கிறார்.

நம்மாழ்வார் சன்னதி : 

இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. எனவே இங்கு நம்மாழ்வார் தனி விமானம், தனி கொடிமரம் கொண்டு தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தருகிறார். இங்கு பிறந்த நம்மாழ்வார் 16 வயது வரை இங்கிருந்த புளியமரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்து, வைணவ கோவில்கள் பலவற்றுக்கும் மங்களாசாசனம் செய்து, இறுதியில் அவர் மோட்சமடைந்த பிறகு அவரின் உடலை  இங்குள்ள புளியமரத்தின் அடியில்  வைக்கப்பட்டு கோயில் அமைக்கப்பட்டுள்ளது . 

நம்மாழ்வார் வரலாறு

காரியார் என்னும் குறுநில மன்னனுக்கும் ,உடைய நங்கைக்கும் மகனாக பிறந்தார் சடகோபர். இவர் பிறந்ததில் இருந்து கண் மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்தார். இதை கண்ட பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்து சடகோபரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது சடகோபர் ஓடி சென்று அங்கு இருந்த புளிய மரத்தடியில் இருந்த பொந்துக்குள்அமர்ந்தார் .அதன்பின் அவரை ஒருவராலும் அசைக்க முடியவில்லை. இப்படியாக 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால் உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். இனிமையான சொற்களால் பாடுவதில் வல்லவர் என்று புகழப்பட்ட மதுரகவி ஆழ்வார்.

அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அந்த திசையில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவி ஒரு புளிய மரத்தடிக்கு வந்ததும் மறைந்துவிட்டது .அந்த மரத்தடியில் ஒரு மகாஞானி இருப்பதை கண்டார் மதுரகவி ஆழ்வார். ஞானமுத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார் அவ்விருவரின் இடையே பாடல் மூலமாக உரையாடல் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் இருந்து சடகோபன் “நம்மாழ்வார்’ என்ற பெயரில் மதுரகவியாழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார் .இதனாலேயே இத்தலம் நவ திருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது .இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. 

உறங்கா புளியமரம் : 

நம்மாழ்வார் 16  ஆண்டுகள் தவம்  செய்த  புளியமரம் 5000 ஆண்டுகள் முற்பட்டது என்று சொல்லப்படுகிறது . ஆதிசேஷனின் அவதாரமாக இப்புளியமரம் கருதப்படுகிறது . இம்மரமானது பூ பூக்கும் ஆனால் காய்க்காது . பொதுவாக புளியமரத்தின் இலைகள் மாலை 6.00 மணிக்கு பின் மூடி ஒன்றாகிவிடும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் எப்போதும் மூடாது என்பதால் உறங்காபுளி என்று சிறப்பிக்கப்படுகிறது.

மதில் மேல் கருடன்:
இத்திருக்கோவிலின் மதில்சுவற்றின் வடகிழக்கு மூலையின் மேல் காட்சி தரும் கருடாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் இப்பகுதியிலுள்ள பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறார். இந்த கருடாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடப்பட்டுள்ளதாம். இவருக்கு ஆடி சுவாதியன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று இவருக்கு அமிர்தகலசம் என்னும் கொழுக்கட்டை படைத்து வழிபடுவதும், தேங்காய் விடலை சமர்ப்பிப்பதும் விசேஷமாக நடைபெறும்.

சங்கு மண்டபம் : 

ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுக்குள் சங்கு மண்டபம் எனப்படும் கல் மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் சங்கு வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரித்து பாய்ந்து வரும் வேளையில் இந்த மண்டபத்தில் இருந்து சங்கு முழங்கும் சத்தம் தானாக கேட்குமாம். அத்தகைய தொழில்நுட்பத்தை கையாண்டு அக்காலத்திலேயே இம்மண்டபத்தை கட்டியுள்ளார்கள். காலப்போக்கில் தற்போது மண்டபம் பழமையாகிவிட்டதால், சங்கு முழக்கம் கேட்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. அதுபோல் இந்த கோயிலில் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் உள்ளது . இது மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது , மற்றும் இக்கல் உடையாமல் இருக்க மூலிகைகள் தடவி செதுக்கியுளார்கள் . 

கோயில் சிறப்புகள் : 

இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் மற்ற கோவில்களை போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபய-வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பு.

நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களும் வருடத்திற்கு ஒருமுறை இந்த ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சிகொடுப்பார்கள். இந்த நிகழ்வு இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . 

 திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அரையர் சேவை பிரசித்தமாக நடைபெறும்.நம்மாழ்வார் பல கோவில்களின் பெருமாள் மீது பாசுரங்கள் பாடியிருக்க, இங்கு அவரின் சிஷ்யரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை போற்றி அவர் மீதே பாசுரங்கள் பாடியுள்ளார்.

இங்கு வேடன் ஒருவனும், வேழம் ஒன்றும், இங்கு வாழ்ந்த நாய் ஒன்றும் இத்தல மகிமையால் முக்தி பெற்றுள்ளது.

முக்கிய திருவிழாக்கள் : 

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த உற்சவத்திற்கு நம்மாழ்வார் சன்னதியில் கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் ஐந்தாம் திருநாளன்று நவதிருப்பதி கோவில்களின் ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளுவார்கள். அன்று இரவு ஒன்பது கருடசேவை விமரிசையாக நடைபெறும். அப்போது நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி ஒன்பது பெருமாள்களையும் மங்களாசானம் செய்வார். உடன் தனிதோளுக்கினியானில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளுவார். அன்று இங்கு ஒரே இடத்திலேயே நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களையும் தரிசிக்கலாம். பத்தாம் நாளான வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர மாசி மாதமும் நம்மாழ்வாருக்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த விழாவின் பத்தாம் நாளும் நம்மாழ்வார் தேரோட்டம் நடைபெறும்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று மதில் மேல் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Temple Photos:

https://alayamtrails.blogspot.com/2023/10/sri-adinatha-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் : 

காலை 7 .00 மணி முதல் நண்பகல் 12 .30 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை 

Contact Number : 04639 272079 , 98944 43900

செல்லும் வழி : 

திருநெல்வேலியில் திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 30 km தொலைவில் உள்ளது . நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. இக்கோயிலுடன் நவதிருப்பதி தலங்கள் அனைத்தையும் பார்க்கலாம் . 

Sri Adinatha Perumal Temple – Alwarthinagari

God- Adinathan, Adipran

Mother – Adinatha Nayaki, Thirukurukur Nayaki.

Thala Vrutsham – Dormant tamarind tree.

Theertha- Tamiraparani, Brahma Theertha.

Kolam – Standing Trikolam.

Special Shrine – Nammalwar, Gnanapran, Uranga Puliyamaram, Garuda on the wall

Other Specialties – Sangu Mandapam, Stone Nathaswaram

Vimana – Govinda Vimana

City – Alwar Thirunagari, Thirukururukur

District – Thoothukudi, Tamil Nadu

Mangalasanam – Nammalwar, Nammalwari Madhurakavi Alwar performed Mangalasanam.

The Perumal temples where the Azhwars performed Mangalasana are called Divya Desams. Out of the 108 Divyadesams performed by them, there are 9 Divyadesams along the banks of the Tamirabarani river in Pandyanath. They are called Nava Tirupati Thalams and devotees worship them as Navagraha Thalams. This Alwarthirunagari Talam is the 9th Talam of Navathirupati Talam and is a Guru Bhagavan aspect.

Temple Structure:

The temple is located at the center of the town. In front of the temple is a stone hall known as Pandal Mandapam. Beyond this stone hall, if you go beyond Mada Veedhi, you will come to the Raja Gopuram. Inside the temple there is an altar and next to it a flagpole. If you go beyond Garudar Sannathi, you will find Adinathan’s Moolavar Sannati.

Garudan structure is slightly different in this temple. Lord Garuda is present in all temples in a bowed posture. Only in this temple is he seen with Abahastha, Nagar and Sangu Chakra in his hands.

Then you can see Sri Ram Sannadi, Senai Mudaliyar Sannadi and Ponneentha Perumal Sannadi. In Utprakara there are Venugopalan shrine, Jnanapiran shrine, Gnanapiran kari, Adinayaki shrine and twelve Azhwar rooms. Next to the irappatu mandapam, this temple known as Urangapuli and Tirupuli is located. Behind this is the Paramapatha Vasal. There is a separate temple dedicated to Sri Nammazhwar in the inner part of the temple. Next to it are Nathamuni Shrine, Yagasala, Twelve Alvar Shrine, Narasimha Shrine, Thiruvenkatamudayan Shrine. Glass hall and Kambar room are located in the outer prakaram of Adinathar shrine. Outside the temple there are Shree Patshiraja shrine, Shree Krishna shrine and Hanuman shrine.

Head pride:

 It is said that the conch floated here in the river, the name Thirukurukur came from worshiping Lord Perumal and got moksha, and it was the first place created when the world was destroyed by a great flood and re-created.

Nammalwar Shrine:

Nammalwar is more special here than Perumal. So here Nammalwar is displayed in a separate sanctum facing south with a separate plane and a separate flagpole. Nammalwar, who was born here, stayed under the tamarind tree until he was 16 years old, performed Mangalasasana in many Vaishnava temples, and finally after his moksha, his body was placed under the tamarind tree here and the temple was erected.

History of Nammalwar:

Satagobar was born as the son of Kariyar, a small land king, and his sister. He was blindfolded, unable to cry or eat since birth. Seeing this, the parents were very distressed and brought Sadakopar to the temple. Then Sadakopar ran and sat in the hut under the tamarind tree there. After that no one could shake him. Thus he was without food for 16 years. But the physical growth did not slow down. At that time, Madhurakavi Alwar had gone on a pilgrimage to the north. Madhurakavi Alvar, who is known for his ability to sing with sweet words.

As he was in Ayodhya, while bowing towards the south direction, he saw a flash of light in that direction. Madhurakavi, who was walking towards that light, disappeared when she came under a tamarind tree. Under that tree, Madhurakavi saw a sage. He placed a stone nearby, thinking of waking up the Satagopar who was in a state of ecstasy with the seal of enlightenment. Sadakopar opened his eyes and there was a conversation between them through song. From this event, Sadagopan called Madurakhavyajvar under the name “Nammajvar”. Madhurakhaviyalvar accepted Nammalwar as his Guru. This is why this place is known as the place of Guru in Nava Tirupati. Here Nammalwar is more special than Perumal.

Dormant Tamarind:

It is said that the tamarind tree, where Nammalwar did penance for 16 years, is more than 5000 years old. This tree is considered as an avatar of Adisesan. This tree flowers but does not bear fruit. Usually the leaves of the tamarind tree close and close together after 6.00 pm. But because the leaves of this tree never close, it is called Urangapuli.

On the Wall:

Garudalwar is the most famous one visible on the north-east corner of the wall of this temple. He is the family deity of many families in this area. Only separate pasurams have been sung on this garudalwar. Special worships are held for him on Aadi Swadi. On that day, he is worshiped by making amritakalasam and offering coconut oil.

Conch Hall:

There is a stone mandapam known as Sangu Mandapam in Alvarthirunagari Tamiraparani river. Conch is painted everywhere in this hall. In ancient times, when the river was flooded and the water was rising and flowing, the sound of cymbals would automatically be heard from this hall. Using such technology, they built this hall at that time. It is also said that since the mandapam has become old with the passage of time, the conch shell is not heard.

The temple also excels in sculpture. The temple has pipe pillars, stone nathaswaram, stone statues and musical pillars that crown the sculpture. Similarly, this temple has a Nathaswaram made of stone. It is very finely carved, and the stone is rubbed with herbs to prevent it from breaking.

Special features of the temple:

Here, Garudan opposite the sanctum sanctorum is shown with four arms, not with folded arms like other temples, but with four arms carrying conch-chakram and showing abhaya-varatam.

All the nine Perumals of Navathirupathi rise to this city of Alvar once a year and present themselves to Nammalvar. This event is very popular here.

 Next to Thiruvaranga, Arayar Seva is famously held here. Nammalwar has sung pasurams on the Perumal of many temples, here his disciple Madhurakaviyalvar has sung pasurams on himself in praise of Nammalvaram.

A deer, a deer, and a dog who lived here have been saved by the glory of this place.

Major Festivals:

Nammalwar Avatara Utsavam which is held in the month of Vaikasi in conjunction with Visakha Nakshatra is very popular. For this festival, the Nammalwar shrine is flagged off and the festival will be held for eleven days. In this, on the fifth day of the festival, all the nine Perumals of the Navathirupati temples will wake up here. On that night, nine Garudaseva will be performed in a critical manner. Then Nammalvar will get up in Anna Vahanam and perform Mangalasanam on all the nine Perumals. Along with this, Madhurakavi will also wake up in Tanitholukiniyan. On that day, you can visit all the nine Perumals of Navathirupathi at one place here. The chariot procession is held on the tenth day of Vaikasi Visakha. Apart from this, the month of Masi is also flagged off at Nammalhwar and a festival is held for eleven days. On the tenth day of the festival, the Nammalwar procession will be held.

On the day of Swathi Nakshatra in the month of Adi, special pujas are performed to Garuda on the wall with special tirumanjanams.

Opening Hours:

7.00 AM to 12.30 PM, 5.00 PM to 8.00 PM

Contact Number : 04639 272079 , 98944 43900

Directions:

Tirunelveli is about 30 km away on the road to Tiruchendur. There are many bus facilities. You can see all Navathirupati Thalams with this temple.

Location:

Leave a Reply