ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – T .நகர் (சென்னை )

இறைவன் : சுந்தரவனீஸ்வரர் ,சந்திரசேகரர்
அம்பாள் : சுந்தர வடிவாம்பிகை
ஊர் : T .நகர் , சென்னை

சென்னையில் பரபரப்பான பகுதியான தியாகராஜர் நகரில் உள்ள பாண்டிபஜார் சாலையில் மிக அமைதியான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது .

- கருவறையில் சுந்தரவனீஸ்வரர் பின் புறம் இறைவன் சந்திரசேகரர் திருமண கோலத்தில் காட்சி தருகிறார் . இவ்வாறு சென்னையில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது (திருவேற்காடு ,திருமழிசை ,
T .நகர்). - முருகன் சன்னதியின் முன்பு அகத்தியர் தன மனைவியுடன் அமர்ந்திருக்கும் சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு அகத்தியர் கோயில் என்ற மறு பெயரும் உண்டு .

- இங்கு அமைத்திருக்கும் விநாயகர் சன்னதியில் விநாயகர் ‘சித்தி புத்தி நித்யானந்தா கணபதி ‘ என்று அழைக்கப்படுகிறார் .
- மற்றும் லட்சுமி நாராயணர் ,சுப மங்கள வரதராஜர் மற்றும் ராமபக்த ஹனுமான் ஆகியோர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது .
- கோயிலை நன்றாக பராமரிக்கிறார்கள் ,கோவிலின் எல்லா சுவர்களிலும் நிறைய கடவுள்களின் வரலாற்று சிற்பங்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வடித்துள்ளனர்.

கோவில் செல்லும் வழி:
பாண்டிபஜார் அருகில் போஸ்ட் ஆபீஸ் சந்தில் ராஜா தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது .
Location: