Sri Agatheeswarar Temple – Pancheshti

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி

இறைவன் : அகத்தீஸ்வரர்

இறைவி : ஆனந்தவல்லி

தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்  

ஊர் :  பஞ்சேஷ்டி

மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு

இங்கு அகத்தியர் முனிவர் தங்கியிருந்து 5  வகையான இஷ்டிகளை கடைபிடித்தார் . அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + இஷ்டி) என வழங்கப்பட்டது. தற்போது பஞ்சட்டி என்றும் அழைக்கின்றனர்.
ராஜ கோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்துள்ளது . இவ்வாறு தெற்கு நோக்கி அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள் .திருமண தோஷம் ,நவகிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து  தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலம் .

கோபுரத்தின் உள்ளே நுழைந்தால் மேற்கு பகுதியில் சித்தி விநாயகர் மற்றும் அவரின் அருகில் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது .

வடக்கு புறத்தில் அகத்திய முனிவரின் சிஷ்யர் குலஸ்த ரிஷி இஷ்டலிங்கத்தை பிரிதிஷ்டை சாய்த்து வணங்கியுள்ளார். இவரை வணங்கினால் பிராத்தனைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது .பின்பு பைரவர் சன்னதியில் பைரவரை தரிசனம் செய்துவிட்டு வளம் திரும்பினால் கொடிமரம் மற்றும் பகவானை தரிசிக்கலாம் . பின்பு உள்ளே சென்றால் மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்தருகிறார் .பின்பு அதே மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் ஆனந்தவல்லி தாயார் அருள்தருகிறார் .

அம்பாள் ஆனந்தவல்லி முக்கண் உடையவள். திருமேனி பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்டது. அகத்தியரின்  வேண்டுதலால் அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்தும், மூன்று கண்களினால் அசுர, தீய சக்திகளையும் அழித்ததனால் அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அம்பாளின் அருள் தீய சக்திகளையும் நம்முடைய செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.இந்த சத்ருசம்ஹார அம்பாளை குளிர்விக்க அம்பாளுக்கு முன்புறம் மிகப்பெரிய “துர்க்காயந்திரம்” பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்ப வடிவம் ராஜகோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது.

இப்போது அம்பாளை தரிசித்து விட்டு கருவறை மண்டபத்தை விட்டு வெளியே வந்தால் சூரியபகவானுக்கு தனி சன்னதி உள்ளது . அவருக்கு அருகிலேயே அகத்திய முனிவருக்கு தனி சன்னதி உள்ளது .அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அகத்திய முனிவர் சூட்சம வடிவில் இங்கு வந்து வணங்குவதாக கூறப்படுகிறது .

1500 ஆண்டுகள் பழமையான கோயில் ,ராஷ்டிரகூட மன்னர்கள் மகத்துவாராம் கட்டியுளார்கள். அதன் பின் விஜயநகர பேரரசர்கள் அந்த மகத்துவாரத்தை ராஜ கோபுரமாக விரிவுபடுத்தினார் .அதில் நவகிரகங்கள் ,துவாரபாலகர்கள் மற்றும் பல புராண சிற்பங்களை வடித்துள்ளார் . அவற்றில் பிரம்மா அக்னி மேல் நின்று தவம் இருப்பது ,மோகினி எருதின் மீது நிற்பது ,காமாக்ஷி அம்மன் ஒற்றை விரலால் அக்னி மேல் தவம் இருப்பது ,அஷ்டதிக்கு பாலகர்கள் ,எம தர்ம ராஜா , நவகிரகம் ,நந்திபெருமான் மேளம் அடிப்பது ,பாற்கடல் விஷ்ணு ,சிவன் பார்வதி தேவியின் மடியில் படுத்திருப்பது,அகத்தியர் முனிவர் ,பிரம்மாவின் யாகம் ,தசஅவதாரம் ,தர்ம சாஸ்தா ,விஷ்ணு அனந்தசயனம் ,அர்ஜுனன் தவம் போன்ற அழகிய சிற்பங்கள் உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-agatheeswarar-temple-pancheshti.html

திறந்திருக்கும் நேரம் :


காலை 7 .00 -12 .00 , மாலை 4 .00 – 8 .30
ராஜாமணி குருக்கள்- 9444220780

செல்லும் வழி:


இக்கோயில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 km தொலைவில் காரனோடை – தச்சூர் கூட்டு ரோடு அருகில் பஞ்சேஷ்டி 1 km தொலைவில் உள்ளது.

Location And Photos :

திருச்சிற்றம்பலம்  

Leave a Reply