Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர்

Sri Amirthakadeswarar Temple - Thirukadaiyur
photo tks to Mr.Shanmugam

இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி )

இறைவி : அமிர்தவல்லி , அபிராமி

தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம்

ஊர் : திருக்கடையூர்

மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர்

தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும் .அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகும் (எமனை சம்ஹாரித்தது) .தருமபுரம் ஆதீனத்துக்கு கீழ் செய்யல்படும்  கோயில்.அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் . இங்கு முருக பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதி தேவியின் வலப்பக்கம் தாயை தழுவியவாறு காட்சி தருகிறார் .

அமிர்தகடேஸ்வரர் உயர்ந்த சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாளிக்கிறார்.இறைவன் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் கால சம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் பாலாம்பிகையுடன் காட்சி அளிக்கிறார் .காலசம்ஹார மூர்த்தியின் திருப்பாதங்களில் கீழ் மார்க்கண்டேயர் கை கூப்பிய நிலையில் இருப்பது ,யமதர்மன் உதைவாங்கி கிழே விழுந்து கிடப்பது ஆகியன பீடத்தடியில் வெள்ளித்தகட்டால் மூடி வைக்கப்பட்டுயிருக்கிறது.தீபராதனை சமயம் இவ் காட்சியில் கண்டுகளிக்கலாம் .

எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும் மேனியில் ஒரு தழும்பும் காணப்படுகிறது . கால சம்ஹார மூர்தியில் பின்னால் வலப்பக்கம் மிருத்யுங்கிய யந்திரம் உள்ளது .

தருமராஜரை வதம் செய்தால் பூபாரம் குறைக்க எம சிட்சை வேண்டும் என பூமாதேவியும் ,திருமாலும் ,நான்முகனும் பிராத்திக்க ,ஈசன் எமனை உயிர்ப்பித்தார் .அனுக்கிரஹம் பெற்ற தர்மராஜா காலசம்ஹார மூர்த்திக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் எருமை வாகனத்தில் தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார் .

Sri Amirthakadeswarar Temple - Thirukadaiyur
photo tks to Mr.Shanmugam

இங்குள்ள வில்வனேஸ்வரர் ஆதிலிங்கம் ஆகும் .இங்கு வெள்ளிப்பேழையில்  உடையவர் மரகதலிங்கத்திற்கு காலை ,மாலை ஆராதனை நடைபெறுகிறது .

இறைவன் பெயர் காரணம் தேவர்களாலும் ,அசுரர்களாலும் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் முன்பு விநாயகரை வழிபடாத காரணத்தால் ,அவரால் இந்த தலத்தில் மறைத்து வைத்த அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தினால் மூலவர் அமிர்தம் + கடம் = அமிர்தகடேஸ்வரர் என திருநாமம் பெற்றார் .

கள்ள வாரணப் பிள்ளையார் : இக்கோயிலில் உள்ள இந்த விநாயகர் மிகவும் புகழ் பெற்றவர் .ஞானவாலியின் தென் மேற்கு மூலையிலுள்ள இவரை வேண்டினால் இழந்த பொருட்களை திரும்ப பெறலாம் என சொல்லப்படுகிறது .

முருகனை போல் விநாயகருக்கு அறுபடை வீடுகள் உண்டு ,அதில் ஒன்று திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் .

மகா விஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மையாக திகழ்கிறது .சரபோஜி அரசரின் காலத்தில் தனது பக்தன் ஒருவருக்காக ‘தை அம்மாவாசை ‘ அன்று முழு பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி ‘ அருள செய்த சிறப்புடையது .

சிவ பக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி அளித்து உலகிற்கு எடுத்துக்காட்டாக தனது இடது பாதத்தினால் எமனேயே உதைத்து சம்ஹாரம் செய்தும் பூமி தேவிக்காக எமனுக்கு அனுக்ரஹம் செய்த சிறப்பு தலம்.

காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால் ,மிருத்யக்னஜெயமூர்த்தியாக விளங்கும் இந்த சுவாமியை தான் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான ‘உக்ரரத சாந்திக்கும்’, 60 வயது பூர்த்தியாகி 61 வயது ஆரம்பமான ‘சஷ்டியத்த பூர்த்தி ‘வைபவத்திற்கும் ,69 வயது பூர்த்தியாகி 70 வயது ஆரம்பமான ‘பீமரதசாந்தி’ வைபவத்திற்கும் , 80 வயது ஆரம்பமான ‘சதாஅபிஷேகம் ‘ மற்றும் ‘ஆயுள் ஹோமம் ‘,ஜாதக ரீதியான ‘ மிருத்யக்னஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது .   

63 நாயன்மார்களில் குங்கிலிய நாயனார் ,காரிய நாயனார் சிவதொண்டு ஆற்றிய இடம் .

கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது சிறப்புடையது .

சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும் ,சித்திரை பௌர்ணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது .

இக்கோயிலுக்கு சோழர் ,பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள் .சிலப்பதிகாரத்தில் வரும் ‘மாதவி ‘ யின் இல்லம் இத் திருக்கூடலூரில் தேரோடும் வீதியில் உள்ளது .தற்போது இவ்வீடு பாழடைந்துவிட்டது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -1 .00 மணி வரை ,மாலை 5 .00 மணி முதல் 8 .00 மணி வரை

செல்லும் வழி:

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது .இக்கோயிலில் இருந்து சுமார் 2 கி .மீ  தொலைவில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருக்கடையூர் மயானம் தலம் உள்ளது .

ஜென்மநட்சத்திரம் ,ஆயுஷ்யஹோமம் ஆகியவற்றைகள் செய்து கொடுக்க கிழே உள்ளவரை தொடர்பு கொள்ளலாம் .

திரு . இராமலிங்க குருக்கள் – 9442012007 ,9865523613 ,04364 -287277

Map & photos

This is ancient big temple in thirukadaiyur. It is the place where Lord Shiva protected Markandeya from Yama. This thirukkadaiyur temple give longevity of happy life to devotees. one of Devara hymns place,one of 51 sakthi peedam,one of Atta veerataanam sthalam.

https://www.thirukadaiyur60thmarriage.net/

http://www.thirukadaiyurpooja.com/aboutus.html

                    ஓம் நமசிவாய !

Leave a Reply