ஸ்ரீ அரசலீஸ்வரர் கோயில் -ஒழிந்தியாம்பட்டு
இறைவன் : ஸ்ரீ அரசலீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி
தல விருச்சம் : அரச மரம்
தல தீர்த்தம் : அரச தீர்த்தம் ,வாமன தீர்த்தம்
ஊர் : ஒழிந்தியாம்பட்டு , திருஅரசிலி
மாவட்டம் : விழுப்புரம்
- தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் 264 வது தலமாகும் , தொண்டை நாடு தலங்களில் 31 வது தலமாகும்
- 108 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழ் சிறிய வடிவில் தாழ்வான ஆவுடையாரில் மூலவர் உள்ளார்.
- வாமன முனிவர் சாபம் தீர ஒவ்வொரு சிவன் கோயிலுக்கு சென்று வணங்கி வந்தார் அப்போது இங்குள்ள அரச மரத்தின் அடியில் சற்று இளைப்பாறினார் அப்போது குளிர்ச்சியான காற்று வீசியது அதை உணர்ந்த முனிவர் நமக்கே இவ்வளவு இதமாக இருக்கிறதே இங்கே சிவன் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணினார் அவர் நினைத்த மாதிரியே சிவலிங்கம் ஒன்று சுயம்புவாக தோன்றியது . அவரை வணங்கி தன் சாபத்திலிருந்து நிவர்த்தி பெற்றார் .நாளடைவில் இவ் சுயம்பு லிங்கம் மறைந்துவிட்டது
- சத்தியவிரதன் என்ற சாளுக்யமன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான் அவனுக்கு பிள்ளை பேரு இல்லை என்பதால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தான் ,இவ் லிங்கத்திற்கு தினமும் நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து பூஜை செய்து வந்தான் . தினமும் பூக்களை பறித்து வந்து தரும் பணியாள் பூக்களை யாரோ பறித்து போய்விடுகிறார்கள் தான் போகும் போது கிடைப்பதில்லை என்று கூறினான் . இதை கேட்ட அரசர் தன் பாதுகாவலருடன் சென்று கண்காணித்தார் அப்போது ஒரு மான் அப் பூக்களை உண்பதை கண்டு கோபமுற்ற அரசர் அதை அம்புகளால் தொறத்தி சென்றார் ,அந்த மான் அங்குள்ள அரசமரத்தில் சென்று மறைந்தது அப்போது அங்கு வந்த அரசர் மான் காணாமல் போனதை கண்டு அரசமரத்தின் பொந்தில் தேடினார் அங்கு அந்த காணாமல் போன சுயம்பு லிங்கம் இருந்தது இதை கண்ட அரசர் சிவனே மானாக வந்து லிங்கத்தை தமக்கு காட்டினார் என்று உணர்ந்து அதை வெளியில் எடுத்து தான் அம்பு விட்டதை எண்ணி அவரிடம் வேதனையுடன் வேண்டினர் இறைவன் அரசருக்கு புத்திர பாக்கியத்தை அளித்தார் . மன்னன் அந்த இடத்தில இக்கோயிலை நிறுவினான் .
- முனிவரும் , மன்னனும் பிரதோஷ நாளில் பேரு பெற்றதால் இக்கோயிலில் பிரதோஷம் விசேஷமானது .
- ஞானசம்பந்தர் இக்கோயில் தங்கி சிறிதுகாலம் இறைபணி செய்தார்.இவரின் மேடம் இக்கோயின் அருகில் உள்ளது.
- இக்கோயின் தட்சணாமூர்த்தி மேல் நடராஜர் தாண்டவ கோலத்தில் சிறிய வடிவில் இருக்கிறார் இக்கோலத்தில் காண்பது அபூர்வம் சாந்தமான தட்சணாமூர்த்தியேன் மேல் ருத்ர தாண்டவமாக நடராஜர் நம் மனதின் வெளிப்பாடாகும் .
- குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன .
- அம்பு பட்ட வடு தெரியாமல் இருப்பதற்காக சிவபெருமானுக்கு மரியாதையை செய்யும் விதமாக அவருக்கு தலைப்பாகை அனுவித்து பூஜைகளை செய்கிறார்கள் .
அமைவிடம்
திண்டிவனம் பாண்டி வழியில் ஒழித்தியாம்பட்டு பிரிவில் 2 km உள்ளே செல்லவேண்டும் . அருகில் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயில்
இரும்பை மஹாகாளீஸ்வரர் கோயில் உள்ளது .
Location: