Sri Arinjaya Cholan Pallipadai

ஸ்ரீ அவனீஸ்வரம் கோயில் / அரிஞ்சய சோழன் பள்ளிப்படை

இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு  முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல் நட்டு கோயில் கட்டுவது மரபு .வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நட்டிருந்தால் அது  “நடுகற் கோயில் ” என்று கூறுவார்கள் .அத்துடன் ஏதாவது தெய்வத்தின் சிலையை நிறுவியிருந்தால் அது “பள்ளிப்படை” என்று அழைக்கப்படுகிறது .

இவ் பள்ளிப்படை ராஜராஜ சோழன் கட்டிய சோமநாதீஸ்வரர் கோயிலின் எதிர் திசையில் உள்ளது . இங்குள்ள அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையை தன தாத்தாவுக்காக ராஜராஜ சோழன் கட்டினான் .

இந்த அரிஞ்சய சோழன் இடைக்கால சோழ மரபை சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழனின் மகன் ஆவார் .அதுமட்டும் இல்லாமல் ராஜதித்தர்,கண்டராதித்தர் ஆகியோர்களின் தம்பி ஆவார். இவர் சோழ வம்சத்தை ஆண்ட காலம் கி.பி 956 -957 . கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால் இவன் தன தமையனுக்கு பின் பட்டம் பெற்றான் . இருந்தும் சுருங்கிய காலமே ஆட்சி பெற்று மறைந்தான் . இவன் பரகேசரி பட்டம் பெற்றவன். இவனுக்கு வீமன்குந்தவியார் ,கோதை  பிராட்டியார் என மாணவிகள் இருந்தனர் . அரிஞ்சய சோழன் தொண்டை மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு போர் நிகழ்த்தி மேல்பாடி அருகில் உள்ள ஆற்றூர் என்னும் இடத்தில் இறந்தான் .

கோயிலின் தெற்கு பகுதியில் ‘ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக  உடையார் ஸ்ரீ ராஜராஜன் எடுப்பித்த கற்றளி’ என்ற வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-arinjaya-cholan-pallipadai.html

திறந்திருக்கும் நேரம்

இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெரும்பாலும் மூடியே இருக்கும் . நாம் செல்லும் நேரத்தில் திறந்திருந்தால் அதிஷ்டமே !

செல்லும் வழி:


சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வழியாக திருவலம் சென்று அங்கிருந்து சுமார் 10 km தொலைவில் இந்த மேல்பாடி கிராமம் வருகிறது . சோளிங்கர் வழியாகவும் செல்லலாம் .

Location Map :

1 Comment

  1. Vishal

    Thanks for Sharing such an amazing article. Keep working Your Site is very nice, and it’s very helping us this post is unique and interesting, thank you for sharing this awesome information

Leave a Reply