ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ரிஷிவந்தியம்
இறைவன் : அர்த்தநாரீஸ்வரர்
இறைவி : முத்தாம்பிகை
தலவிருட்சம் : புன்னை
தல தீர்த்தம் : இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
ஊர் : ரிஷிவந்தியம்
மாவட்டம் : கள்ளக்குறிச்சி , தமிழ்நாடு
நிறம் மாறும் லிங்கம் , நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம் , சாய்ந்த நிலையில் உள்ள லிங்கம் , வடு உள்ள லிங்கம் என பல லிங்கங்களை நாம் பார்த்திருப்போம் , அதுமட்டும் அல்லாமல் அர்த்தநாரீஸ்வரர் கோயில் என மிக குறைந்த கோயில்களே உள்ளன அதிலும் உமையவளோடு பாதி சேர்ந்த நிலையில் இறைவன் இருப்பதையே பார்த்திருப்போம் . ஆனால் இந்த தலத்தில் இறைவன் லிங்க திருமேனியின் மீது தேனாபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் இடைநெளிந்த கையில் கிளியுடன் அம்மன் காட்சி தரும் அதிசிய லிங்கம் வேறு எங்கும் காண இயலாது .
இருபுறமும் நகரத்தின் வளர்ச்சியில் சிக்காமல் இருபுறமும் அழகிய உயர்த்த நிழல் தரும் மரங்கள் , அவைகளுக்கு இடையே திரண்டு ஓடும் ஆற்றை போல் சாலைகள் , அதிகம் வளர்ச்சி அடையாத நடுத்தரமான எல்லா வசதிகளும் கொண்ட மிக அழகான ஊர். ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது .
கோயில் அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது , கோபுரத்தின் முன் சிறிய மண்டபத்தில் ரிஷபம் உள்ளது , இடது புறத்தில் தலத்தின் தீர்த்த குளம் உள்ளது . கோயிலின் உள் சென்றால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தியை காணலாம் . வலது புறத்தில் ஒரு வசந்த மண்டபம் உள்ளது , அந்த மண்டபத்தில் மிக அழகான நேர்த்தியாக யாளிகளை செதுக்கியுளார்கள் . அதில் ஒரு யாளியின் வாயில் ஒரு உருண்டை கல் உள்ளது , அதை நாம் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளேயே உருளும் படி மிக நுணுக்கமாக செதுக்கியுளார்கள் , நீங்களும் அங்கு போகும் போது இதை மறக்காமல் பாருங்கள் .
இடது புறத்தில் ஒரு வசந்த மண்டபம் உள்ளது , அதில் சிறிய சிறிய சிற்பங்கள் மற்றும் யாளியை செதுக்கியுள்ளார்கள் . இவ்மண்டபத்தில் இசை தூண் ஒன்று உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு விதமான ஓசையை வெளிப்படுத்துவது நமக்கு கண்டிப்பாக ஆச்சரியத்தை தரும் .
இப்போது நாம் கோயிலின் கருவறை மண்டபத்திற்கு செல்லலாம் , இக்கோயிலானது கருவறை, அந்தரலா, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் என அமைப்புடன் காணப்படுகிறது . கோயிலின் கருவறையானது இரண்டு அடுக்கு விமானத்துடன் காணப்படுகிறது .
இப்போது இறைவனை காண செல்லலாம் , இவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார் , விஜயநகர மன்னர் காலத்தில் விவசாயம் செய்வதற்காக மண்ணை தோண்டும் போது மண்வெட்டியால் வெட்டப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அவர்தான் இப்பொது இங்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார் . இன்றும் கூட வெட்ட பட்ட கீறலை நாம் லிங்கத்தின் மீது காணலாம் . இங்கு தினமும் காலை 11 மணிக்கு நடக்கும் தேனாபிஷேகத்தில் லிங்கத்தின் மீது இடைநெளிந்த கையில் கிளியுடன் தாயாருடன் காட்சி கொடுப்பதை காணலாம் . இதற்கு Rs 100 தரிசனம் சீட்டு வாங்க வேண்டும் .
இத்தலத்தில் வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும் , அகத்தியருக்கு திருமண கோலத்தையும் , பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பண்புகளையும் , குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார் . அவர்கள் பெற்ற அருளை நாமும் பெற இறைவனை பிராத்தனை செய்வோம் .
நாம் இப்பொது உள் பிரகாரத்தை வலம் வருவோம் , கருவறை கோஷ்டத்தில் விநாயகர் , தக்ஷிணாமூர்த்தி , லிங்கோத்பவர் மற்றும் துர்கை ஆகியோர்கள் உள்ளார்கள் . வளம் வருகையில் நாம் 63 நாயன்மார்கள் , அகத்தீஸ்வரர் தன் மனைவியுடன் , நாகர் ,சண்டீகேஸ்வரர் , விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் , உண்ணாமலையார் உடனுறை அண்ணாமலையார் , வள்ளி தெய்வயானை சமேத முருகர், அர்த்தநாரீஸ்வரர் சுதை சிலை மற்றும் நவகிரக சன்னதி ஆகியோர்களை நாம் தரிசனம் செய்யலாம் . தாயார் முத்தாம்பிகை தனி சன்னதியில் உள்ளார் .
திருமண காட்சி :
சிவனுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடைபெற்றுக் கொண்ருந்த போது தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதைச் சமன் செய்ய அகத்தியரைத் தென் திசை நோக்கிச் செல்ல சிவன் பரிந்துரைத்தார். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். அவ்வாறு ஒரு பகுதியில் அகத்தியர் பூஜையில் ஈடுபட்டிருந்த போது சிவன் திருமணக்காட்சி தந்தார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே, எனக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடும் போது நானும், பார்வதியும் இணைந்து அருள்பாலிப்போம் என சிவன் கூறினார். அதனாலேயே இன்றும் லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்கையில் இருவரும் இணைந்து தோன்றுவதாக கூறப்படுகிறது. ரிஷ்கள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது.
சிறப்பு :
தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். ஆனால், அத்தலத்தில் இருந்த பார்வதிக்கும் அம்மனை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்மன், இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும், இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி, பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்மனும், சிவனும் தோற்றமளிக்கின்றனர்.
குரு நமசிவாயாவுக்கு பசியாற்றினார் :
குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார்.இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர்.
ஈகோயிலானது கி . பி 1262 ஆம் ஆண்டு ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது . கி . பி 1269 இல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் புனரமைக்கப்பட்டுள்ளது .
கல்வெட்டுகள் :
ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் மேற்குப்புற வராண்டாவில் உள்ள ஒரு பலகையில் உள்ள கல்வெட்டில் பொன் பரப்பின பெருமாள் ஜடாவர்மன் என்கின்ற முதலாம் சுந்தர பாண்டியனால் கி பி 1269 இல் வைக்கப்பட்டுள்ளது . இரண்டாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் மேற்கு சுவரில் உள்ளது அதில் கோனேரின் மை கொண்டான் மாறவர்மன் மூன்றாம் விக்கிரபாண்டியனால் கி பி 1283 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது . அதில் இருவிசம் என்கின்ற ராஜநாராயண பட்டணத்தில் உறையும் என்று தொடங்கும் கல்வெட்டாகும் . மூன்றாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் தென்புற சுவரில் உள்ளது , அதில் நிலவரி செலுத்திய விவரம் உள்ளது , நான்காம் கல்வெட்டு நாடு மண்டபத்தின் மேல்புற சுவரில் உள்ளது , இதில் நிலம் பற்றிய செய்தி உள்ளது .
Photo:
https://alayamtrails.blogspot.com/2023/08/sri-arthanareeswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 4 .30 மணி முதல் இரவு 8 .00 மணி வரை
contact Number : 9865369493 – சோமு குருக்கள்
செல்லும் வழி :
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் இருந்து சுமார் 23 km தொலைவில் இக்கோயில் உள்ளது .கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருவம் சென்று அங்கிருந்து சுமார் 22 km இக்கோயிலை அடையலாம் .
அருகில் உள்ள கோயில்கள் :
1 . பொற்குடநாதர் கோயில் – திருநெய்வணை ( பாடல் பெற்ற தலம் )
2 . உலகளந்த பெருமாள் கோயில் – திருக்கோயிலூர் ( 108 திவ்ய தேசம் )
3 . வீரடீஸ்வரர் கோயில் – திருக்கோயிலூர்
4 . அதுல்ய நாதேஸ்வரர் கோயில் – திருக்கோயிலூர்
English :
We have seen many lingams such as lingam that changes color, lingam with a dragon on its body, lingam in a reclining position, lingam with a scar, and not only that, there are very few temples like Ardhanareeswarar temple and in that we have seen the presence of the Lord in a half-joined state with Umaiyavala. But at this place, when Lord Linga Tirumeni performs thenabhishekam on the linga, the goddess with a parrot in her hand can be seen anywhere else.
It is a very beautiful town with all the facilities that are not too developed in the middle of the city, with beautiful shade trees on both sides without getting caught in the development of the city, roads like a river flowing between them. This temple is located in the middle of the town.
Temple Structure:
The five-tiered Rajagopuram faces east, in front of the tower there is a bull in the small hall, and on the left is the tirtha pond of the dalam. If you go inside the temple, you will see the altar, flagpole and Nandi. On the right hand side there is a Vasantha Mandapam, in which the Yalis are carved very beautifully. There is a round stone in the mouth of a Yali, they carved it very finely to roll inside so that we cannot take it out, don’t forget to see this when you go there.
On the left side is a Vasantha Mandapam with small sculptures and Yali carvings. There is a musical pillar in this hall. Each stone in it expresses a kind of sound that will definitely surprise us.
Now let’s go to the sanctum sanctorum of the temple, the temple is organized as sanctum sanctorum, antarala, artha mandapam and maha mandapam. The sanctum sanctorum of the temple is seen with two tiered vimana.
Now let’s see the Lord, He is a Swayambu Lingam, a Swayambu Lingam cut by a spade was found during the Vijayanagara king’s time while digging the soil for farming. He is the one who blesses here in the name of Arthanareeswarar. Even today we can see the incision on the lingam. Here, the Tenabhishekam, which takes place every morning at 11 a.m., is seen with the mother with a parrot in her hand resting on the lingam. For this you have to buy Rs 100 darshanam ticket.
Lord Ardhanareeswarar has blessed Rama who came and worshiped at this place, gave wisdom to Agathiyar, blessed the rishis who performed the puja, and fed Kuga Namachivayar. Let us pray to God to get the grace they have received.
Now let us move around the inner prakara, the sanctum sanctorum consists of Vinayagar, Dakshinamurthy, Lingotpavar and Durgai. On arrival at Valam we can have darshan of 63 Nayanmars, Agathiswarar with his wife, Nagar, Sandikeswarar, Vishalakshi Udanurai Viswanathar, Nyamalaiyar Udanurai Annamalaiyar, Valli Deivayanai Sametha Muruga, Arthanareeswarar Sudhai idol and Navagraha shrine. Mother Muthambikai is in a separate shrine.
Wedding scene:
When Shiva and Parvati got married in Kailayam, the south direction rose and the north direction fell. To balance this, Shiva suggested Agathiyar to move towards the south direction. According to Lord Shiva, Agathiyar stayed in many places in the south and performed pujas to Lord Shiva. In one such area, while Agathiyar was engaged in puja, Shiva performed a wedding scene. Lord Agathiyar asked that other people should also see this scene and pray, Shiva said that Parvati and I will bless me together when they worship me with honey. That’s why it is said that even today both of them appear together when performing honey anointing to the lingam. The place is known as Rishivantiyam because many rishis visited this place to worship.
Specialty:
Indra, the leader of the gods, used to worship Lord Rishivanthiyam with milk every day. But he did not worship the Goddess Parvati who was there. One day Amman, enraged, hid Indra’s milk jug. When Indra, distraught at not finding the milk pot, tried to save himself by hitting his head on the temple altar, Eason appeared before Indra and asked him to perform the milk ablution for Parvathi. Further, Shiva disappeared saying that Parvati will appear along with my image during this abhishekam. From that day to this day, at the time of Tenabhisheka Puja, Amman and Shiva appear as Ardhanaari Ishvara in Swayambu Lingam with parrots in their hands in half male and half female forms.
The Guru made Namasivaya hungry:
Guka Namachivayar, a disciple of Guru Namachivayar, after visiting many places from Thiruvannamalai and passing through this place to Chidambaram, got hungry. He went to Muthambikai Amman here and sang the song “Thayiruka Pillai Soru”. Immediately the goddess appeared before him and said, “I have received arthabhaka here with Eason. So Kuka Namashivaya also sang the song “Minnamapeshivanda soru va” to say that both of them should sing together. After hearing this song, Muthambikaiyamman brought rice in a golden bowl and said that Kukanamachivaya was hungry.
Inscriptions:
An inscription on a slab in the western verandah of the first prakaram of the temple is dated AD 1269 by Sundara Pandyan I, the gold spreader Perumal Jatavarman. The second inscription is on the west wall of the Maha Mandapam in which Koner’s Mai Kondan was erected by Maravarman III Vikrapandiyan in AD 1283. In it is an inscription that starts with Rajanarayana’s place of duality. The third inscription is on the south wall of the Maha Mandapam, which contains the details of the payment of land, and the fourth inscription is on the upper wall of the Nadu Mandapam, which contains a message about the land.
Opening Hours:
6.30 AM to 12.00 PM, 4.30 PM to 8.00 PM
Contact Number : 9865369493 – Somu gurukal
Directions:
This temple is about 23 km from Thirukkoilur near Villupuram.From Kallakurichi you can go to Thiagathuruvam and from there about 22 km to reach this temple.
Location:
திருச்சிற்றம்பலம்