ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – திருச்செங்கோடு
இறைவன் : அர்த்தநாரீஸ்வரர் ,ஸ்ரீ மாதொருபாகர்
இறைவி : பாகப்பிரியாள்
தலவிருச்சம் : இலுப்பை
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
புராண பெயர் : திருகொடிமாடா செங்குன்றூர்
ஊர் : திருச்செங்கோடு
மாவட்டம் : நாமக்கல் , தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற கொங்கு நாட்டு தளங்களில் 4 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 274 இல் 208 வது தலம் .அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .
- இத்தலம் 1901 அடி உயரம் கொண்டது .இந்தமலையை ஏற 1200 படிக்கட்டுகள் உள்ளன .மலையில் உள்ள கோயில் வரை பேருந்து செல்லும் .
- அர்த்தநாரீஸ்வரர் மாதொரு பாகர் என்று அழைக்கப்படுகிறார் . மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்பு திருமேனியாக பாதி ஆணாகவும் ,பாதி பெண்ணாகவும் வெள்ளைபாஷணமாக தலையில் ஜடா மகுடம் தரித்து ,சந்திரன் சூடி ,கழுத்தில் ருத்ராட்சம் ,தாலி அணிந்து ,கையில் தண்டாயுதம் ஏந்தி காட்சி தருகிறார் .அம்மையார் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு அணிந்துள்ளார் .வலது புறம் வேஷ்டியும் ,இடதுபுறம் சேலையும் அணிந்துள்ளார் .
- தல தீர்த்தமான தேவ தீர்த்தம் இறைவனின் காலடியில் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கிறது .பக்தர்களுக்கும் இந்த தீர்த்தத்தை கொடுக்கிறார்கள் .
- வடக்கு பிரகாரத்தில் உள்ள சன்னதியில் செங்கோட்டு வேலவன் சந்நிதி மிகவும் பிரசித்துபெற்றது.உச்சிக்காலத்தில் இவருக்கு அபிஷகத்துடன் பூஜைகள் நடைபெறுகிறது .
- ஈசனின் இடபாகம் பெற தாயார் பூஜித்த லிங்கம் மூலஸ்தானத்தில் உள்ளது.பூஜைகள் நடைபெறும்போது அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர் .இந்த பூஜையை தாயாரே செய்வதாக ஐதீகம் .
- படிக்கட்டுகள் வழியே செல்லும்போது பாறையில் செதுக்கப்பட்ட நகர் சன்னதி மிகவும் பெயர் பெற்றது .
- கணவன் மனைவி ஒற்றுமை ,நாகதோஷம் ,ராகு -கேது காலசர்ப்ப தோஷம் ,களத்திர தோஷம் ஆகியவற்றிக்கு பரிகார தலமாக விளங்குகிறது .
- செங்குட்டுவர் சன்னதியின் முன் உள்ள மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட மண்டபம் ஆகும் .
For Beautiful photos please click following link
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-arthanareeswarar-temple.html
கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
செல்லும் வழி
நகரின் மையத்தில் இவ் மலை அமைந்துள்ளது . மலைக்கு செல்ல கோவில் பேருந்து உள்ளது . ஈரோடு மற்றும் நாமக்கல் இருந்து பேருந்து உள்ளது . இக் கோயிலை தரிசித்து விட்டு நாமக்கல் வந்து ஆஞ்சனேயர் மற்றும் நாமக்கல் நரசிம்மரையும் தரிசிக்கலாம்
Location: