ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் – அச்சிறுபாக்கம்
தல விருச்சம் : சரக்கொன்றை
தல தீர்த்தம் : தேவ,பானு மற்றும் சங்கு தீர்த்தம்
ஊர் : அச்சிறுபாக்கம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் – தேனினும் இனியர் பாலன…
தேவார பாடல் பெற்ற தொண்டைநாடு தளங்களில் இத்தலம் 29 வது தலமாகும் .தேவார பாடல் தலங்கள் 276 இல் இத்தலம் 262 வது தலமாகும் .
தல வரலாறு:
வித்யுன்மாலி,தாருகாட்சன் ,கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களை எரிக்க இறைவன்மற்றும் தேவர்கள் சென்றபோது விநாயகரை வணங்காது சென்றார்கள் அவர் அத் தேரின் அச்சை முறிய செய்தார் .ஈசன் இத்தல முதல்வனை வேண்டியதால் தேர் சரியாகி தொடர்ந்து சென்று அசுரர்களை வென்றதாக வரலாறு கூறுகிறது .இவ்வாறு திரிபுரம் எரிக்க சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் ( அச்சு+இரு +பாக்கம் ) அச்சிறுபாக்கம் என்று பெயர் பெற்றது .
தல பெருமை :
பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது அவனுடைய தேர் அச்சு இவ்விடத்திற்கு வரும்போது முறிந்துவிட்டது .தன்னுடன் வந்த வந்த பணியாளர்களை தேரை சரி செய்யுமாறு கூறினான் . அப்போது அவ்வழியே ஒரு தங்கத்தால் ஜொலித்த ஒரு உடும்பு சென்றதை மன்னன் கவனித்தான் .அதை பிடிக்க சென்றபோது அவ் உடும்பானது ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது .அவர் தன் பாதுகாவலர்களிடம் அந்த மரத்தை வெட்ட சொன்னான் ,மரத்தை வெட்டும் போது ரத்தம் வெளிப்பட்டது .உடும்பு வெட்டப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டி பார்த்தான் ,ஆனால் உடும்பு கிடைக்கவில்லை அன்று இரவு மன்னருக்கு காட்சி தந்த சிவன் தான் உடும்பு மூலமாக திருவிளையாடல் புரிந்ததை கூறினார் .இவ்விடத்தில் சுயம்புவாக தான் உள்ளதாக கூறினார் .
இவ்விடத்தில் ஈசனுக்கு கோயில் கட்ட எண்ணிய மன்னன் அப்போது அங்கு வந்த ‘திரிநேத்ரதாரி‘ எனும் மூன்று கண்களை உடைய முனிவரிடம் தான் கோயில் கட்ட நினைத்ததை கூறினார் . தீவிர சிவா பக்தரான முனிவர் அந்த வேலையை தான் எடுத்து செய்வதாக கூறினார். மன்னன் அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தன் யாத்திரை தொடர்ந்தார் . சிறிது காலம் கழித்து மன்னன் திரும்பி வந்து பார்த்தபோது கொடிமரம் ,பலிபீடம் மற்றும் நந்தியுடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும் அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்திற்கு நேரே உமையாட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமும் கட்டி வைத்திருந்தார் .மன்னன் இரு கருவறை அமிதா காரணத்தை கேட்க முனிவர் அரசே ! உம்மை ஆட்கொண்டவர் ‘உமையாட்சீஸ்வரர் ‘,எம்மை ஆட்கொண்டவர் ‘ஆட்சீஸ்வரர் ‘ என்று கூறினார் .
சுயம்பு லிங்கமாக இருக்கும் ஆட்சீஸ்வரர் தான் இங்கு பிரதான மூலவர் இவருக்கு நேராக தான் பலிபீடமும் ,நந்தியும் அமைந்திருக்கும் .இவர் குடியிருக்கும் கல்லறை வாயிலின் இருபுறமும் துவாரகபாலகராக ஈசனால் வதம் செய்யப்பட்ட தாரகனும் ,வித்யுன்மாலியும் உள்ளார்கள் .
ஆட்சீஸ்வரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம் ,இவருடைய வாயில் இருபுறமும் அலமேலுமங்கை ,ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர்களின் சன்னதிகள் உள்ளன .உமையாட்சீஸ்வரர் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார் .அகத்தியருக்கு கைலாய திருமண காட்சியை காட்டியருளிய தளங்களில் இதுவும் ஒன்று .
ஆலயத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் தல விருச்சமாக சரக்கொன்றை மரம் உள்ளது .சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வர் சன்னதி உள்ளது . இவரை வணனிகியபடி திருநேத்ரகாரி முனிவரும் உள்ளார் .
அச்சுமுறி விநாயகர் :
சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் ‘அச்சுமுறிவினாயகர் ‘ என்ற பெயருடன் கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார் .புதிய செயல்கள் தொடங்குவதிற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டி கொண்டால் அச் செயல்கள் தடையின்றி நடைபெறும் என்று நம்பப்படுகிறது .அருணகிரிநாதர் இவ் விநாயகரை தரிசித்துவிட்டு விநாயகர் துதி பாடிய பிறகுதான் திருப்புகழ் பாட தொடங்கினார் .தன் விநாயகர் துதியில் ‘முப்புரம் எரி செய்த அச் சிவன் உறை ரதம் அச்சறு பொடி செய்த ‘ என்று கூறுகிறார் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-atcheeswarar-temple-acharapakkam.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 -11 .30 மாலை 4 .30 -8 .30 வரை
செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 100 km தொலைவில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது . சாலையில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் சென்றால் ஊரின் மத்தியில் இக்கோயில் உள்ளது
This Temple has two presiding deities atcheeswarar and umai Atcheeswarar gracing the devotees from separate sanctum sanctums.also two mother goddesses llangili ammai and Umayanbigai grace from their respective sanctums. this is one devara hymns place.
Location
இக்கோயில் குடமுழுக்கு இப்போதுதான் நடைபெற்றது .அந்த ஈசனின் அருளால் என்னால் முடிந்த ஒரு சிறிய தொகையை இக்கோயிலின் குடமுழுக்குக்காக கொடுக்கமுடிந்தது .
ஓம் நமசிவாய !