ஸ்ரீ ஆற்றுக்கால் பகவதி கோயில் – திருவனந்தபுரம்

இறைவன் : பகவதி அம்மன்
தல தீர்த்தம் : கிள்ளியாறு
ஊர் : ஆற்றுக்கால்
மாவட்டம் : திருவனந்தபுரம்
மாநிலம் : கேரளா

- உலக பிரசித்து பெற்ற கோயில் இக்கோயில் பொங்கல் இடும் திருவிழா கின்னஸ் சாதனை பெற்றது 2009 வருடம் நடைபெற்ற பொங்கல் இடும் திருவிழாவில் 25 இலச்சம் பக்தர்கள் பங்குகொண்டு பொங்கல் இட்டார்கள் . இக்கோயிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கிறார்கள். மாசி மாதம் 10 நாட்கள் இவ் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது
- இக்கோயில் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன .ஆதி சங்கரர் இக்கோயிலில் யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்.
- மூலஸ்தானத்தில் இரண்டு விக்ரகங்கள் உள்ளன ,பழமையான விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாற்றியுள்ளார்கள் ,கீழே உள்ள அபிஷேக விக்ரகத்தை மட்டுமே நம்மால் தரிசிக்க முடியும் . தன் கையில் கத்தி ,கேடயம் ,சூலம் ,அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் .
- கண்ணகி தன் கணவனுக்காக நியாயம் கேட்டு பாண்டிய மன்னவனை வதம் செய்து மதுரையை எரித்துவிட்டு கன்னியாகுமரி வந்து பின்பு திருவனந்தபுரத்தில் இந்த கிளையாற்றில் குளித்து விட்டு இளைப்பாறியதாகவும் அவளே பகவதி என்று அழைக்கப்படுகிறார் .

செல்லும் வழி:
திருவனந்தபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து 2 km தொலைவில் இக்கோயில் உள்ளது.

திறந்திருக்கும் நேரம் :
காலை 4 .30 -12 .00 மாலை 5 .00 -8 .30
Location:
Your articles is so nice.It is very useful for devotees and me.Thanks For sharing Great information
Dear Sir/Madam
Thanks for your valuable comments.