ஸ்ரீ பூவராகப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீமுஷ்ணம்
மூலவர் : பூவராஹன் (தானே தோன்றியவர் )
தாயார் : ஸ்ரீ அம்புஜவல்லித்தாயார்
உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்
விமானம் :பாவன் விமானம்
புண்ணிய தீர்த்தம் : நித்ய புஷிகர்ணி
தல விருச்சகம் : அரச மரம்
மங்களாசனம் : பல பல வைணவ பெரியோர்கள்
- பெருமாள் ஹிரணியகசுபை வதம் செய்து பூமி தேவியை ஆலிங்கனம் செய்தபடியால் பூவராகப்பெருமாள் ஆனார் .
- காசியில் நாம ஜபத்தால் சிவகதியை அடைவதுபோல் இங்கே கருடனை குருவாக பெற்று மந்திர ஜபத்தால் மோட்சம் அடையலாம்.
- அஜிதன் என்ற கொடியவனுக்கு மோட்சம் கிடைத்த இடம் .
- அரச மரமும் துளசியும் பெருமாளின் அருளால் உயர்வடைந்த இடம்
- மாசி மகத்தில் கிள்ளை என்கிற கடல் தீர்த்தத்தில் ஒரு இஸ்லாமியரின் முதுகு பிரச்னை தீர்த்த படியால் இங்கு இஸ்லாமியர்களும் இக்கோயிலின் விழாக்களில் கலந்துகொள்கின்றனர் .
- முஸ்தா சூரணம் என்ற கோரைகிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது
- விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் .
- தாயாரின் தோழிகள் குழந்தையம்மன் சன்னதியில் காட்சிதருகிறார்கள்
- உற்சவர் மூர்த்தியுடன் ஸ்ரீதேவி ,பூதேவியர் மற்றும் ஆதி வராக மூர்த்தியும் ,சந்தான கண்ணனும் ஏழுந்தருளியுள்ளார்கள்.
- பெருமாள் சாளக்ராம கல்லினால் ஆன சுயம்புவாக எட்டு தலங்களில் அருள் பாலிக்கிறார் . அவை ஸ்ரீரங்கம் ,திருப்பதி ,வானமாமலை ,சாளிக்ராமம்,புஸ்கரம்,நைமிசாரண்யம் ,பத்ரிகாட்சரமம்,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தலங்களாகும் .
- வாகனம் வாங்குவோர் ,பன்றியின் மேல் வாகனத்தை ஏற்றியவர்கள் இத்தலத்தில் வந்து அர்ச்சனை செய்கின்றனர்
தல வரலாறு :
இரணியாட்சன் என்ற அசுரன் பூமாதேவியை கடத்தி சென்று பாதாள உலகில் வைத்திருந்தான் ,இதை கண்டு கோபம் உற்ற பெருமாள் ஒற்றை கொம்புள்ள பன்றியாக உருவெடுத்து குடைந்து சென்று இரணியாட்சனை அழித்து பூமாதேவியை கொம்பில் சுமந்தபடி முன்பிருந்தபடி நிலை நிறுத்தினர் .அதன் பிறகு ஸ்ரீமுஷ்ணத்தை இருப்பிடமாக அமைத்து “பூவராகப்பெருமாள் “ என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார் . மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அசுரனை கொன்ற பெருமிதத்துடன் கைகளை இடுப்பில் வைத்து ,முகத்தை தெற்கு நோக்கி முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக நிற்கிறார் .
விருதாச்சலத்திலிருந்து 24 km தொலைவிலும் , சிதம்பரத்திலிருந்து 35 km தொலைவிலும் உள்ளது . நிறைய பேருந்து வசதிகள் உள்ளது .
அருகில் உள்ள கோயில்கள்
1 . பழமலை நாதர் கோயில் -விருத்தாச்சலம்
2 . கொளஞ்சியப்பர் கோயில் -விருத்தாசலம்
3 . ராஜேந்திர பட்டினம் பாடல் பெற்ற தலம்
Nice info