ஸ்ரீ தேவநாத பெருமாள் கோயில் – திருவந்திபுரம்
இறைவன் : தேவநாதன்
தாயார் : செங்கமலம்
தல விருச்சம் : வில்வம்
தல தீர்த்தம் : கருட தீர்த்தம்
புராண பெயர் : திருவயிந்திபுரம்
ஊர் : திருவந்திபுரம் ,கடலூர்
மாவட்டம் : கடலூர் , தமிழ்நாடு
மங்களாசனம்: திருமங்கையாழ்வார்
பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48 வது திவ்ய தேசமாகும் . நடுநாட்டு திவ்ய தேசம் .
இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட ஊர் ஆகும் .அருகில் உள்ள மலை பிரம்மன் தவம் செய்த இடம் என்பதால் பிரம்மாச்சலம் என்று அழைக்கப்படுகிறது . கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
இந்த கருடநதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் கங்கை போன்று இங்கு குளித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் . மழைக்காலத்தில் இவ் நதி ரத்த வண்ணத்தில் நீர் செல்வதை காணலாம் .
இக்கோயில் சோழர்கள் ,பாண்டியர்கள் ,விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது .
தல வரலாறு :
ஒருமுறை சனகர் ,சனந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார்கள் ,ஆனால் அவர்களால் இறைவனை காண முடியாமல் அவரை காண வழியை அறியாது தவித்தனர் .ஒரு நாள் இவர்களை கண்ட வியாசர் முனிவர் அவர்களிடம் இந்த ஒளஷதகிரி என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட ஆற்றங்கரையில் தவமமிருந்தால் இறைவன் காட்சி தந்து அருள்தருவார் என்று யோசனை தந்தார் . அவரின் யோசனை படி முனிவர்கள் கடும் தவம் இருந்தனர் அவர்களின் தவத்திற்கு மனம் இறங்கிய இறைவன் தன் அற்புத காட்சியை அவர்களுக்கு தந்தார் .ஒளஷதகிரி என்பதே பிற்காலத்தில் ஆயிந்திபுரம் என்று ஆனது .திருமால் இங்கு அவதரித்தாள் திருவயந்திபுரம் என்று ஆனது .
பிரம்மாண்டபுராணத்தில் இத்தலத்தை பற்றி கூறும் போது ஒரு முறை தேவர்களை காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை அளிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர்.அசுரர்களை அழித்த மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக காட்சி தந்த தலம் என்று கூறுகிறது . இதனாலேயே தேவர்களை காத்த நாதன் என்பதால் ‘தேவநாதன் ‘ என்ற திருநாமம் ஏற்பட்டது .
திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹயக்ரீவர் கோயில் :
குதிரை முகம் கொண்ட ஞான கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும் .பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாக கூறப்படுகிறது . மேலும் நரசிம்மர் சுவாமிக்கு தனியாக சன்னதி உள்ளது .
வேதாந்த தேசிகர் :
வேதாந்த தேசிகர் இவ் தலத்தில் சுமார் 40 ஆண்டுகள் தங்கியிருந்து இவ் இறைவனை வழிபட்டு நிறைய பாசுரங்களை இயற்றினார் . அவர் ஒரு கிணறை வெட்டினார் அவ் கிணறு இன்றும் இங்கு காணலாம் . மற்றும் அவரே தன் விக்ரகத்தை தானே செய்துகொண்ட தேசிகரது விக்ரகத்தை இன்றும் நாம் இங்கு காணலாம் .
மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.
பரிகாரம் :
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 – 11 .00 வரை மாலை 4 .30 – 08 .00 வரை
செல்லும் வழி:
கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து கடலூருக்கு நிறைய பேருந்துகளும் ,ரயில் வசதிகளும் உள்ளன .
அருகில் உள்ள கோயில்கள்
1 . பாடலீஸ்வரர் கோயில் – கடலூர்
2 . வீரட்டனீஸ்வரர் கோயில் – திருவதிகை
English : God Vishnu in this temple is the chief deity and He is in the form of God Devanatha Perumal. He can be seen in this temple with his consort Sengamalam Thayar. This temple is one of the 108 Divya Desam temples.Once Perumal was very thirsty so he ordered his vahana Garuda to get water for him so that his thirst is quenched. Garuda was late to come back and Adishesha had struck the ground with his tail. He created a spring and gave water to God. This spring can be seen in this temple and it is called as Sesha Theertham. Devotees come here and put jiggery, salt and pepper so that they can get rid of the illness they are suffering from. People who suffer from the negative serpent effects also come here to be able to get rid of them. God Brahma, God Shiva, God Indra, Goddess Bhoomidevi, Sages Bhrigu and Markandeya have performed penance at this very place.