ஸ்ரீ ஏலவார்குழலி சமேத ஏடகநாத சுவாமி கோயில் – திருவேடகம்
இறைவன் : ஏடகநாதஸ்வாமி
இறைவி : ஏலவார்குழலி
தலவிருச்சம் : வில்வம்
தலதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் , வைகை
ஊர் : திருவேடகம்
மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத்து ஒருவனே
–திருஞானசம்பந்தர்
வானவர்கோன்
தேமேடகத்த னொடுசீதரனும் வாழ்த்துஞ்சீர்
ஆமே டகத்தறி வானந்தமே
–திருஅருட்பா
தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 194 வது தலமாகும் . பாண்டியநாட்டு 14 தேவார தலங்களில் இத்தலம் 5 வது தலமாகும் . காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது.இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது.திருஞானசம்பந்தர் பதிகம் எழுதி ஆற்றில் விட்டார். அது நீர் போகும் திசைக்கு எதிர்த்து சென்றது.அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே “திரு ஏடு அகம்’ எனப்பட்டு, “திருவேடகம்’ என மருவியது.
கோயில் அமைப்பு :
ஊரின் நடுவே கிழக்கு பார்த்த ஐந்து நிலைகளில் இறைவன் மற்றும் இறைவிக்கு என தனி தனியாக இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன . கோபுரத்திற்கு முன் அழகிய நந்தவனம் உள்ளது . கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கம்பத்தடி மண்டபம் உள்ளது . இவ் மண்டபத்தில் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் உயர்ந்த பீடத்தில் நந்தியப்பெருமானும் உள்ளார்கள் . சுவாமி மண்டபத்திற்கு முன் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் உள்ளார்கள் .
இப்பொது நாம் இறைவனின் கருவறை நோக்கி செல்வோம் , கருவறையில் இறைவன் ஏடகநாத சுவாமி சுயம்பு லிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை சுற்று சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பகவர், துர்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
பிராகாரத்தில் அறுபத்து மூவர் சன்னதிகள், பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத்திருமேனிகள்,சப்த மாதர்கள் ,பைரவர் ,நடராஜர் மற்றும் நவகிரஹ சன்னதிகள் உள்ளன .
அப்படியே நாம் தாயார் சன்னதிக்குள் செல்லலாம் , தாயார் ஏலவார்குழலி கருணையே வடிவமாக நமக்கு காட்சி தருகிறார் .
கோயில் வரலாறு :
மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை மற்றும் அவள் 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார்.இதை கண்டு அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் மற்றும் புணல் வாதம் புரிந்தனர்.
சமணர்கள் தங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்டபோது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது.
மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
ஊரின் பேருந்து நிலையத்தின் அருகில் திருஞானசம்பந்தர் தனி கோயிலில் உள்ளார் . இவ் சன்னதிக்கு அருகில் உள்ள வழியில் சென்றால் வைகை நதிக்கு செல்லலாம் . இங்கே வைகை நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடுவதால் காசிக்கு நிகராக இந்த இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இங்கு யார் ஒருவர் ஒரு நாள் முழுவதும் இந்த ஆலயத்தில் தங்கியிருந்து முழுமனதுடன் பூஜை, புனஸ்காரம், அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்களோ, அவருக்கு ஆயுள் முழுவதும் காசியில் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
திருஞானசம்பந்தரால் எழுதப்பட்ட ‘வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை, வைகை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் அந்த ஓலை நீரோட்டத்தை எதிர்த்து கரையை அடைந்த இடம் இதுவாகும்.
பிராத்தனை :
திருமண தடை நீக்கும் தலமான திருமணச்சேரியில் நடைபெறும் பரிகாரம் போல் இத்தலத்தில் சுவாமி ,அம்பாளுக்கு பூ மலை அணிவித்து பூஜைகள் நடத்தி பூமாலையை திரும்ப பெற்று 41 தினங்கள் பூஜித்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது . பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சித்த பிரம்மை நீங்கும் . இங்குள்ள வைகை நதியில் நீராடி ஆலய வழிபாடு செய்தால் காசியில் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் .
திருவிழாக்கள் :
பிரமோற்சவம் நடைபெறுவதில்லை , 12 மதமும் ஏக தினமாக திருவிழாக்கள் நடைபெறுகிறது . ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுகிறது .
கல்வெட்டுகள் :
இந்த ஆலயம் 6 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது , பாண்டியர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் .
இக்கோயிலில் 14 கல்வெட்டுகளை படியெடுத்துளார்கள் , பெரும்பாலும் பாண்டியர்களின் கல்வெட்டுகள் உள்ளன .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 . 30 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை , மாலை 5 .00 மணிமுதல்
இரவு 8 .00 மணி வரை .
Contact Number : 04543 259311 , 99432 61487
Photos:
https://alayamtrails.blogspot.com/2024/07/sri-edaganatha-swamy-temple-thiruvedagam.html
செல்லும் வழி :
மதுரையில் இருந்து சுமார் 20 km தொலைவில் உள்ளது . சோழவந்தான் செல்லும் பேருந்துகள் இவ் தளத்தின் வழியே செல்லும் . பேருந்து நிறுத்தத்தின் அருகில் கோயிலுக்கு செல்ல வளைவு உள்ளது அதன் வழியே கோயிலுக்கு நடந்து செல்லலாம் . பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்து தடம் எண் 68 A ,54 R மற்றும் 29 A ஆகிய பேருந்துகள் செல்லும் .
English summary
Sri Edaganathar Temple – Thiruvedagam
It is the 194th place out of 276 Shiv Thalams to have Devara song. This place is the 5th place among the 14 Devara places in Pandiyanadu. This place is considered to be as special as Kashi. As the Vaigai river flows here from south to north, this place is considered to be as special as Kashi. Tirunanasambandar wrote his epitaph and left it in the river. It went against the direction of the water. Thus, the place where it met the bank of Edu was called “Tru Edu Agam” and became “Truvedakam”.
Temple Structure:
In the middle of the town, there are two separate Rajagopurams, one for Lord and one for God, at five levels facing east. In front of the tower is a beautiful Nandavana. If you pass the gopuram and go inside, there is a pillared hall. In this hall there is an altar, flagpole and Lord Nandia on the highest pedestal. In front of the Swami Mandapam there are Ganesha and Murugan on either side.
Now let us go towards the sanctum sanctorum of the Lord, in the sanctum sanctorum Lord Etakanatha Swami Swayambu Linga Thirumeni has risen towards the east. On the circular wall of the sanctum there are Koshta Murthys of Dakshinamurthy, Lord Lingot, Durga and Brahma.
There are sixty-three shrines in the prakaram, Balaganapati, Dakshinamurthy, Edakanathar, Elawarkuzali, Arumuga Swami, Ganapati, Somaskandhar, Gnanasampandhar Utsavathirmeni, Saptha Mathar, Bhairava, Nataraja and Navagraha shrines.
Just like that, we can go into the sanctum prepared, Mother Elavarkuzhali shows us the form of mercy.
Temple History:
Koonpandian who ruled Madurai belonged to the Jain religion. His wife Mangaiyarkarasi was a great devotee of Shiva and she was one of the 63 Nayanmars. When Thirugnanasambandar came to Madurai on the invitation of Mangaiyarkarasi to save Saivism, Thiruneeru Phusi helped King Koonpandiyan to get rid of his fever.
When the Jains put their written note in the fire it was burnt to ashes. But when Sambandar put the paper on which the Tirunallaru Padhikam was written in the fire, it burned and did not turn to ashes but remained green. Later, when the paper written by the Jains was dropped in the river during Punal Vada, it went with the river. But when Sambandar left the padikam inscribed with the words “Long Live Anthanar” in the Vaigai River, it went against the current of the Vaigai River.
Kulachiraiyar, the minister of the Pandya king of Madurai, mounted the horse and continued to follow the boat that was going against the current of the Vaigai river, but it stopped at one place on the bank of the Vaigai river. The Pandya king saw a Shiva lingam in a secluded place and built a temple there. That is the place where this song called Thiruvedakam was born.
Kulachiraiyar, the minister of the Pandya king of Madurai, mounted the horse and continued to follow the boat that was going against the current of the Vaigai river, but it stopped at one place on the bank of the Vaigai river. The Pandya king saw a Shiva lingam in a secluded place and built a temple there. That is the place where this song called Thiruvedakam was born.
Tirunnasambandar is in a separate temple near the bus stand of the town. If you take the road near this shrine, you can go to Vaigai river. Here, the Vaigai river flows from north to south, so this temple is seen as similar to Kashi. It is believed that whoever stays in this temple for a whole day and performs pooja, punaskara, and worship with all his heart, he will get the blessing of living in Kashi for the rest of his life.
A leaf written by Tirupathikam, ‘Jivka Anthanar’, written by Tirunnasambandar, was washed away in the Vaigai river. This is where the straw then went against the current and reached the shore.
Prayer:
It is believed that the marriage will take place soon if Swami and Ambal wear poojas and perform poojas and return the pooja for 41 days. If you bathe in the Brahma Theertha and worship, the Siddha Brahma will be removed. If you worship the tide in the river Vaigai here, you will get the benefits of worshiping in Kashi.
Festivals:
Pramotsavam is not held, all 12 religions hold festivals on the same day. On the full moon day of the month of Ani, the festival of Edu Prati takes place.
Inscriptions:
The temple is believed to date back to the 6th century AD when the Pandyas and Vijayanagara Nayaks restored the temple.
14 inscriptions have been engraved in this temple, mostly of Pandyan inscriptions.
Opening Hours:
6.30 hrs in the morning to 12 noon and 5.00 hrs to 8.00 hrs.
Contact No: 04543 259311, 99432 61487
Directions:
It is about 20 km from Madurai. Buses going to Cholavanthan pass through this site. There is a ramp to the temple near the bus stop and you can walk to the temple through that. From Periyar bus station city bus routes number 68 A, 54 R and 29 A are plying.
Location: