ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் கோயில் – திருக்கருகாவூர்
மூலவர் : முல்லைநாதர்
தாயார் : கரு காத்தநாயகி, கர்ப்பரட்சாம்பிகை
தல விருச்சகம் : முல்லை
தீர்த்தம் : பால்குளம்
ஊர் : திருக்கருகாவூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
- தேவாரம் பாடல் பெற்ற தென் காவேரிகரை சிவத்தலங்களில் இது 18 வது தலமாகும் , பாடல் பெற்ற 274 தலங்களில் 81 வது தேவார தலமாகும் .
- கி.பி 7 நூற்றாண்டு கோயில் இது , 2000 ஆண்டுகள் மேற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும்
- தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்த காணிக்கையை செலுத்துகிறார்கள்.
- கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். மற்றும் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதில்லை , கரு கலைவது,கர்ப்ப வேதனை இவைகள் இத்தலத்தில் வந்து வணங்கினால் ஏற்படுவது இல்லை .
- இக்கோயிலில் சுத்தமான நெய்யால் தீபம் ஏற்றி , நெய்யால் அம்பாளின் திருவடியில் அபிஷேகம் செய்து அதை தினமும் உண்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை உண்டு
- இக்கோயிலில் அம்பாளின் திருவடியில் வைத்து மந்திரித்து விளக்கெண்ணெய் தருகிறார்கள் அதை பிரசவ நேரத்தில் வயிற்றில் தடவி வந்தால் இவ்வித பேறுகால ஆபத்துகளோ ,துன்பங்களோ ஏற்படுவதில்லை என்று நம்பப்படுகிறது .
- இக்கோயிலே ஒரு சோமேஸ்கந்தர் அமைப்பு உடையது இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையே முருகன் சன்னதி உள்ளது அதுவே குழந்தை பாக்கியம் பெற காரணமாகிறது .
- இது சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் , சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன,
முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் “ என்று தலம் குறிக்கப்படுகின்றது.இத்திருக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவ காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு கூடியவை. - மதுரை கொண்ட கோபுர கேசரிவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோர் காலத்திய கல்வெட்டுக்கள் இத்திருக்கோவிலின் சுற்று மதிற்சுவர்களிலும், எம்பெருமானின் கர்ப்பக்கிரகச் சுவர்களிலும், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபங்களிலும் காணப்படுவதாக, இத்திருக்கோவில் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
- இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு ‘பவரோக நிவாரணன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. இவ் கோயில் உள்ள இடம் முன்னர் முல்லை வனமாக இருந்தது.
- இங்குள்ள நந்தி – உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
- பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
- இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.
- அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.
- முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்.. தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் – நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
- கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.
- இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்ளையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷதரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார்.
- இத்திருக்கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருக்கம் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியன் பார்த்தவாறு நின்றிருக்கும். நவக்கிரகங்கள் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சுகப்ரசவ சுலோகம்
சுகப்பிரசவம் ஆக இதை ஜெபிக்கவேண்டும்
ஹே சங்கர சமரஹா பிரமதாதி நாதரி மன்னாத சரம்ப சரிசூட ஹரதிரிசூலின் சம்போஸுகப்ரஸவ கிருத்பவமே தயாளோ ஹேமாதாவி வனேச பாளயமாம் நமஸ்தே !
சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்கவேண்டும்
ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினி
தஸ்யா சமரண மாதரேண
விசல்யா கற்பினிபவேது
திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம்
காலை 6 .00 மணி முதல் பகல் 12.30 மணி வரையில், மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை .
கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் ஆவூர் மிலட்டூர் வழி. பாபநாசம் வழியிலும் செல்லலாம் ..
Location: