Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali

ஸ்ரீ ஜகன்மோகினி கேசவ பெருமாள் கோயில் -ரியலி

Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali
  • பெருமாள் ஜகன்மோகினியாக பெண் உருவத்தில் புடவை கட்டி காட்சி கொடுக்கும் மிக முக்கியமான திவ்ய தேசம் ஆகும் இந்த ரியலி .
  • பெருமாள் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரே சாளிக்ராம கல்லால் ஆனவர் . முன் புறத்தில் கேசவ பெருமாளாகவும் பின் புறத்தில் மோஹினியாகவும் காட்சிதருகிறார் .
Sri Jaganmohini Kesava Perumal Temple-Ryali
Sri Jaganmohini Kesava Perumal – Thanks google
  • கேசவ பெருமாள் நான்கு கைகளுடன் காட்சி தருகிறார் ,தனது கைகளில் சங்கு ,சக்ரம் ,கதை மற்றும் தாமரை பூவுடன் காட்சி தருகிறார் .மற்றும் அவர் வேஷ்டி துண்டு கட்டிக்கொண்டு (kosthuba maniharam ),வண்ண மாலையை சூடிக்கொண்டு ,கிரீடம் அணிந்து கொண்டு ,காதுகளில் தோடு அணிந்து,யக்னோபவீதம் அணிந்து காட்சிகொடுக்கிறார் . அவரே பின் பகுதியில் ஜகன்மோகினி அவதாரத்தில் சேலை கட்டிக்கொண்டு ,ரவிக்கை அணிந்து பின்தலை முடியை கொண்டை போட்டுகொண்டு பாரிஜாத பூவை சூடி காட்சிதருகிறார் . மோகினி தான் காலில் மச்சத்துடனும் மற்றும் கொலுசு அணிந்தும் கையில் வளையல் அணிந்தும் காட்சி தருகிறார் . இவர் ஆதிசேஷத்தின் கீழ் வீற்றியிருக்கிறார் .
  • பெருமாளின் கால் அடியில் இரண்டு பாதங்களுக்கு இடையில் கங்கை நீர் வந்துகொண்டே இருக்கிறது இதை நாம் கண்களால் காணலாம் ,இது ஒரு அதிசய நிகழ்வாகும் .
  • புடவை கட்டிய பெருமாள் என்று எல்லோரும் அழைப்பார்கள் .
  • மோகினி அவதாரம் பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே ,தேவர்களுக்கும் ,அசுரர்களுக்கும் அமிர்தத்தை சரியாக பகிர்ந்துகொடுப்பதிற்காக விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் எடுத்தார் ,அவருடைய அழகில் மயங்கிய பகவான் சிவன் மோகினியை பின் தொடர்ந்து சென்றார் அவருக்கு பயந்து மோகினியான விஷ்ணு பகவான் ஓடி ஒளியத்தொடங்கினார் அப்போது மோகினி தலையில் இருந்து ஒரு பூ கீழே விழுந்தது அதை எடுத்து முகர்ந்து பார்த்த சிவபெருமானுக்கு இது விஷ்ணு பகவானின் நறுமணம் என்பதை உணர்ந்து தான் செய்த இந்த செயலை நினைத்து அவர் கூனிப்போனார் .அந்த பூ விழுந்த இடமே ரியாலி என்று அழைக்கப்படுகிறது. ரியாலி என்றல் தெலுங்கில் விழுதல் என்று அர்த்தம் .
  • இக்கோயிலை 11 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தை சேர்ந்த ராஜா விக்ரம தேவ சோழனால் கட்டப்பட்டதாகும் . ஒரு புராணத்தில் இக்கோயிலை பற்றி கூறும்போது இவ்வூர் காடுகளால் சூழப்பட்ட பகுதியாக இருந்தது ,அப்போது அந்த காட்டுக்குள் வேட்டையாட ராஜா விக்ரம தேவ சோழன் வந்தார் அவர் வேட்டையாடி களைத்து ஒரு மரத்தின் கிழே ஓய்வு எடுத்தபோது அவர் கனவில் பெருமாள் வந்து இப் பகுதியில் தான் சிலையாக பூமிக்கு அடியில் இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து கோயில் கட்டி வணங்குமாறும் கூறி மறைந்தார் ,ராஜா தான் கனவில் வந்த இந்த இடத்தில ஒரு மர தேர் கொண்டு ஓட செய்தான் அப்போது தேர் இடறி விழுந்த இடத்தில் தோண்ட சொன்னான் அப்போது அந்த இடத்தில் இவ் சிலையை கண்டு அதை வெளியே எடுத்து இவ் கோயிலை சிறிய வடிவில் கட்டினான் என்று கூறுகிறது .
  • இக்கோயிலுக்கு நேர் எதிரே உமா காமண்டலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது . இவர் ஒரு சுயம்பு மூர்த்தியாவார் ,இவருக்கு செய்யும் அபிஷேக நீர் எங்கு செல்கிறது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை ,இது ஒரு அதிசயமாகும் . இக்கோயிலுக்கு அருகிலேயே ஸ்வாமி ஐயப்பனுக்கு கோயில் உள்ளது.ஐயப்பன் தான் பெற்றோருக்கு அருகிலேயே வீற்றியிருக்கும் அற்புத இடமாகும்
  • Lord is in the form of jagan mohini keseva swamy.this is unique temple where we can see kesava swamy avatharam in the front part and jagan mohini avatharam from back side. It is a suyambu saligrama sila with 5 feet hight and width of 3 feet. from front we can see main deity with 4 hands having shanku,chakra,gada and lotus flower in them, wearing kosthuba maniharam,vanamala,crown,ear rings,yognopaveetham.from back we can see jaganmohini avatar wearing sari, blouse with hair knot,and parijatha flowers around it. On the top of idol we can see adhisesha and Ganga coming out from the feet of the idol. Nowhere else we can see such an idol
Sri Uma Kamandaleswarar Temple-Ryali
Sivan Temple
  • Opposite this temple, is the temple of Lord Shiva in the form of Sri Umakamandaleswaraswami. Lord Brahma created a Lingam & performed abhishekam with water from his kamandalam & henceforth Lord Siva is being worshipped here as Sri Umakamandaleswaraswami.
  • During 11th century, the village was a part of the wild forest which was ruled by the Chola kings.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-jaganmohini-kesava-perumal-temple.html

Opening Time

Morning 6.00 to 12.00, Evening 4.00 to 8.00

How To Reach From Rajamundry 40 KM, from Kakinada 74 Km, from Amalapuram 34 Km

Location :

Leave a Reply