Sri Jalanatheeswarar Temple – Thakkolam

ஸ்ரீ ஜலநாதீஸ்வரர் கோயில் – தக்கோலம் -திருவூறல்

Sri Jalanatheeswarar Temple- Thakkolam

இறைவன் : ஜலநாதீஸ்வரர் , உமாபதீசர்

இறைவி : கிரிராஜ கன்னிகை , மோகனவல்லி

தல தீர்த்தம் : நந்தி தீர்த்தம் ,பார்வதி தீர்த்தம்

ஊர் : தக்கோலம்

மாவட்டம் : ராணிப்பேட்டை மாவட்டம் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் ,சம்பந்தர் ,சுந்தரர்

மாறில் அவுணர்அரணம் அவைமாயஓர்

                        வெங்கணையால் அன்று

            நீறெழ் எய்தஎங்கள் நிமலன்

                        இடம் வினவில்

            தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்

                        பாய்வயலும் சூழ்ந்த

            ஊறல் அமர்ந்தபிரான ஒலியார்கழல்

                        உள்குதுமே

                                                            –திருஞானசம்பந்தர்

இக்கோயிலானது தேவாரம் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 245 வது தலமாகும் . தொண்டைநாட்டு தேவார தலங்களில் 12 வது தலமாகும் . அருணகிரிநாதரால் முருகனை பற்றி திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும் . தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமிக்க தட்சணாமூர்த்திகளில் இக்கோயில் இக்கோயிலும் ஒன்று . இங்கு கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணா மூர்த்தி, கல்லால மரத்தின்கீழ் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து உத்கடி ஆசன நிலையில் அமர்ந்துள்ளார்.

ஆலய அமைப்பு :

இக்கோயிலானது ஊருக்கு நடுவே மேற்கு நோக்கி மிகப்பெரிய மதில் சுவற்றுடன் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக காட்சி கொடுக்கிறது . இந்த ராஜகோபுரத்தை 1543 இல் விஜயநகர அரசன் வீரபிரதாப சதாசிவ மகராயர் கட்டியதாக சொல்லப்படுகிறது . ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் விசாலமான வெளிப்பிராகாரத்தை நாம் காணலாம் . அப்படியே நாம் இடது புறம் சென்றால் தனி சன்னதியில் நாம் விநாயகரை தரிசிக்கலாம் . அப்படியே நாம் சென்றால் அழகிய நந்தவனத்தில் நடுவே கோயிலின் தல தீர்த்தத்தை நாம் காணலாம் . அப்படியே நாம் கடந்து போனால் மேற்கு நோக்கி பலிபீடம் ,கொடிக்கம்பம் மற்றும் மண்டபத்துடன் கூடிய  நந்தியை நாம் தரிசனம் செய்யலாம் . அப்படியே வலம் வந்தால் முதலில் நாம் தெற்கு பிரகாரத்தில் வடக்கு நோக்கிய தாயார் கிரிராஜ கன்னிகையை நாம் தனி சன்னதியில் தரிசிக்கலாம் .

தாயார் நின்ற கோலத்தில்  அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன்  காட்சி தருகிறாள். வடக்கு நோக்கி காட்சி தருவதால் மிகவும் சிறப்பு உடையவராக இங்கு உள்ளார் . இவரை வணங்கிய பின்னே நாம் இறைவனை தரிசிக்க வேண்டும் .

அம்பிகைக்கு எதிரே இறைவன் சன்னதி செல்ல பக்கவாட்டில் நுழைவு வாயில் உள்ளது அதன் வழியே சென்றால் மண்டபத்தில் நாம் ஐயப்பன் , விநாயகர் மற்றும் முருகரை தரிசிக்கலாம் , அடுத்து நாம் உள் மண்டபத்திற்கு சென்றால் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம்.

ஜலநாதீஸ்வரர்

நேரே மூலவர் ஜலநாதீஸ்வரரை நாம்  தரிசனம் செய்யலாம் . சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த லிங்கம் விளைச்சல் அதிகமாக இருக்கும் காலத்தில் சிவப்பு நிறத்திலும், வறட்சியான காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சி தரும். மணலால் ஆன லிங்கம் .

ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள்.

அவரை வணங்கிவிட்டு நாம் உள் பிரகாரத்தை வலம் வந்தால்  சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகளை காணலாம் .

கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்கள் மிக அழகாக நேர்த்தியாக அமைத்துள்ளார்கள். துர்க்கையை தவிர மற்றவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கிறார்கள் .

தட்சணாமூர்த்தி :

சிவபிரானின் 64 மாகேஸ்வர வடிவங்களில் குறிப்பிடத்தக்கது தக்ஷிணாமூர்த்தி திருக்கோலம். ஞானம் அளித்து நில வாழ்வின் நல்ல பேறுகளைப் பெற வைக்கும் இந்த பெருமானின் அபூர்வமான கோலத்தை நாம் தக்கோலத்தில் தரிசிக்கலாம்.வேறு எங்கும் காணமுடியாத தட்சிணாமூர்த்தியை நாம் இத்தலத்தில் பார்க்கலாம் .கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணா மூர்த்தி, கல்லால மரத்தின்கீழ் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து உத்கடி ஆசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். மனம் அலைபாயும் மாணவர்கள் இவரை வணங்கலாம். ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவர் தலையை இடதுபுறம் சாய்த்து, மாணவர்களை அடக்கி ஆளும் ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார். இந்த அபூர்வ கோலத்தை வேறெங்கும் காணமுடியாது.

அப்படியே வெளியே வந்தால் நாம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு தனி சன்னதி உள்ளது . சன்னதிக்கு முன் ஒரு மண்டபம் உள்ளது.

தல புராணம் :

தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு இட்ட சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார்.

ப்ருஹஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவபெருமானை வழிபட நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டு முனிவர் நோய் நீங்கப் பெற்றார். நீர் சிவபெருமானை சூழ்ந்து சென்றதால் ஜலநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.ஆனால் தற்போது நந்தி வாயில் நீர் வருவதில்லை .நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று. 

திருவிழாக்கள் :

சித்ரா பௌர்ணமி ஒட்டி வரும் பத்து நாட்கள் பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

கல்வெட்டுகள் :

கல்வெட்டில் ஜலநந்தீசுவரர் என்று வழங்கப்பெறும். இராஜகேசரிவர்மன் ஆட்சியில் கங்கமன்னன் பிருதிவிபதியால் வெள்ளிப்பாத்திரம் தானம் செய்யப்பட்டது (5 of 1197). அவன் மனைவி அருள் மொழிநங்கையால் கோதானம் செய்யப்பட்டது(7 of 1197). கோபார்த்திவேந்திரவர்மன் ஆட்சியில் துர்க்கைச்சிலைக்கு விளக்குக்கள் அளிக்கப்பட்டுள்ளன(14 of1197). திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்திதேவன் என்கிற யாதவனால் நிலம் தானம் செய்யப்பெற்றுள்ளது(16 of 1197). மற்றவை விளக்கிற்கும், மற்றச்செலவுகளுக்கும் பொன், பணம், நிலம், ஆடுகள், நெல் முதலியன வழங்கியதைத் தெரிவிக்கின்றன.

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .00  மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 4 .30 முதல் இரவு 8 .00 மணி வரை .

Contact Number – 04177 -246427 , 9361622427 ,

Photos:

https://alayamtrails.blogspot.com/2024/06/sri-jalanatheeswarar-temple-thakkolam.html

செல்லும் வழி :

தக்கோலம், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து செல்பவர்கள் பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இவ்வொருக்கு செல்லவேண்டும் .

அருகில் உள்ள கோயில்கள்

1 . சோழீஸ்வரர் கோயில் – பேரம்பாக்கம் (நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு பரிகார தலம்)

2 . திரிபுராந்தகேஸ்வரர் கோயில் -கூவம் ( தேவார தலம் )

3 . வடாரண்யேஸ்வரர் கோயில் – திருவாலங்காடு (தேவார தலம் மற்றும் பஞ்ச நடன தலம் )

4 . அரம்பேஸ்வரர் கோயில் -இளம்பியங்கோட்டூர்  ( தேவார தலம் )

5 . மணிகண்டஸ்வரர் கோயில் -திருமால்பூர் ( தேவார தலம் )

English

This temple is the 245th place out of 276 Shivthalams to have Devaram song. Thondainadu is the 12th place among Devar places. Thirupugall is the place where Arunagirinath sang about Murugan. This temple is one of the famous Dakshanamurthys in Tamil Nadu. Here the Yoga Detshina Murthy in Koshta sits in the Utkadi Asana posture with one leg folded on a pedestal under a Kallala tree, with his right leg down on the ground.

Temple Structure:

The temple looks very majestic with a three-tiered Rajagopuram along with a huge wall towards the west in the middle of the town. It is said that this Rajagopuram was built in 1543 by the king of Vijayanagara, Veerapradhapa Satasiva Maharayar. If we go inside after passing the Rajagopuram, we will find a spacious outer prakaram. Similarly, if we go to the left side, we can visit Lord Ganesha in a separate shrine. If we go there, we can see the Thala Thirtha of the temple in the middle of the beautiful Nandavan. If we pass that way we can have darshan of Nandi with altar, flagpole and mandapam towards the west. If we come in the same way, first we can visit the mother Giriraja Kannigai in a separate shrine in the south prakaram facing north.

The mother is seen standing on the kolam with four arms with abhaya varatam. It is very special here because it gives a view towards the north. After worshiping him we should visit the Lord.

There is a side entrance to the Lord’s sanctum opposite to Ambigai. If we go through it, we can see Ayyappa, Vinayagar and Muruga in the hall, then if we go to the inner hall, there are Utsavath Thirumenis like Somaskandar, Chandrasekhara, Pitchadanar and Natarasa sabha. Passing through the next west facing inner gate one can visit Dwarpalakas.

Jalanatheeswarar

We can have darshan of Nere Moolavar Jalanatheeswarar. Shivalinga Tirumeni is made of sand. touch menu Abhishekam takes place only for the Audaiyars. This lingam displays red color in the season of high yield and white color in dry season. Lingam made of sand.

Even today, there is a crater in the Linga Thirumeni as a symbol of Parvathi Devi saving Lord Shiva from here when there was a flood in the area, and even today there are lines of sand on the bottom of the lingam as if the flood had eroded it.

It is believed that Goddess Parvati extinguished this lingam, so the Shivacharyas who worship here do not touch this lingam even today.

After worshiping him, if we crawl around the inner prakara, we will see the Sannidhis of Shakti Vinayagar, Subramaniyar, Panchalingam, Mahalakshmi, Nataraja, Surya, Chandran, Bhairava, Saptha Kanniya.

Koshta Murthys include Vinayaka, Dakshinamurthy, Maha Vishnu, Brahma, Vishnudurga etc. Goshta murthas are very beautifully arranged. Other than Durgai are sitting.

Dakshanamurthy:
Dakshinamurthy Thirukolam is notable among the 64 Mageswara forms of Shiva. We can visit the rare kolam of this lord who gives wisdom and makes us get the good fruits of earthly life in Thakolam. We can see Dakshina Murthy which cannot be found anywhere else in this temple. The Yoga Dakshina Murthy in Koshtha is sitting in Utkadi Asana position with one leg folded under the Kallala tree. This asana is about controlling the mind. Wandering students can worship him. One hand holds a rudraksha garland and the other a lotus. There is no rabbit underfoot. He tilts his head to the left and has the demeanor of a teacher dominating the students. This rare Golam cannot be found anywhere else.

f we come out like that, there is a separate shrine for Samedha Subramani, the deity of Naam Valli. There is a hall in front of the shrine.

Thala Purana:
Devguru Prakaspati’s younger brother was Pushta, the son of Sage Uddhi. When Kamadenu came near the ashram when he was performing the yagya, Poshuda saw the cow and tried to tie it up because Kamadenu refused to help entertain the pilgrims and said that he could not stay without Indra. Sage Utti Munivar, father of Poshadha, asked Narada for advice to get rid of the curse of Kamadenu. On the advice of Narada, Thiruvural came and worshiped Lord Shiva and prayed for the salvation of his son.

Sage Udati, younger brother of Bruhaspati, worshiped Lord Shiva to cure his illness and Nandi Devar expressed the Ganga through his mouth. Bathing in it, the sage worshiped Lord Shiva and got cured. Because the water surrounded Lord Shiva, he got the name Jalanatheeswarar. But now there is no water coming from Nandi’s mouth. Because of Nandidev’s mouth and Lord’s Thiruvadi, water is given as Achalal.

Festivals:

The 10-day Pramotsavam that coincides with the full moon of Chitra takes place very well.

Inscriptions:
In the inscription it is given as Jalanandeeswarar. A silver vessel was donated by Gangamannan Prithivipati during the reign of Rajakesarivarman (5 of 1197). His wife, Arul Leeshanangai, was buried (7 of 1197). During the reign of Goparthivendravarman, the statue of Durga was given lamps (14 of 1197). During the reign of Tribhuvanachakravarti Kulothungan, the land was donated by a Yadava named Thirukalathidevan (16 of 1197). Others mention giving gold, money, land, goats, paddy etc. for lamp and other expenses.

Opening Hours:
8.00 am to 12.00 noon and 4.30 pm to 8.00 pm.
Contact Number – 04177 -246427, 9361622427,

Directions:
Thakolam is 12 km from Arakkonam, 30 km from Kanchipuram and 64 km from Chennai.

Map:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply