ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் – தரப்பாக்கம் (சென்னை )
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
இறைவன் : ஸ்ரீ கைலாசநாதர்
இறைவி : ஆனந்தவல்லி
ஊர் :தரப்பாக்கம் ,சென்னை
மாவட்டம் : காஞ்சிபுரம்
சென்னை நகரின் அருகில் மிக அழகான சிறிய கிராமத்தில் அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிக பழமையான சிவன் கோயில் . இங்கு உள்ள கற்தூண்களில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன .
ஆவுடையார் சிறியதாக இருக்கிறார் . இறைவணனின் இடது புற சன்னதியில் ஆனந்தவல்லி தயார் உள்ளார் . இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளது. ஊர் பொதுமக்களால் இந்த கோயிலை நன்கு பராமரிக்கிறார்கள் . நீங்கள் அங்கு செல்லும்போது கோயிலை பராமரிக்கிறவர்களிடம் உங்களால் முடிந்ததை கொடுத்து உதவலாம் .
இக்கோயிலுக்கு முன்னதாக உள்ளே தெருவின் உள்ளே சென்றால் ஒரு பெருமாள் கோயில் உள்ளது . இவ் ஊர் மக்கள் சேர்ந்து கட்டிய கோயில் ஆகும் .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 -10 .00
மாலை 5 .00 -7 .00
குருக்கள் பெயர் : திரு .ஜெகநாதன்
மதுரவாயல் இருந்து பெருங்களத்தூர் செல்லும் bypass சாலையின் service சாலையில் சென்றால் செல்லலாம் . மற்றும் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் (சனீஸ்வரன் )கோயில் அருகில் அடையார் ஆற்றை கடந்தால் இக்கோயிலை அடையலாம்.
Location Map: