Sri Kailasanathar Temple – Thenthiruperai

ஸ்ரீ கைலாசநாதர் கோயில் – தென்திருப்பேரை 

Kailasanathar temple - Thenthiruperai

திருநெல்வேலி சுற்றி அமைந்துள்ள சிவத்தலங்களை நவகைலாய தலங்கள் என்று அழைப்பார்கள் , இவற்றை அகத்தியமாமுனிவர் சீடர் உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . இவற்றை நவகிரகங்களின் அபிமான தலங்களாகவும் அழைக்கப்படுகிறது . இந்த தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில் நவகைலாய தலங்களில் ஏழாவது தலமாகவும் , புத பகவானின் அபிமான தலமாகவும் விளங்குகிறது.

இறைவன் : கைலாசநாதர் 

இறைவி : அழகிய பொன்னம்மை 

தலவிருட்சம் : வில்வம் 

தலதீர்த்தம் : தாமிரபரணி 

ஊர்: தென்திருப்பேரை 

மாவட்டம் : தூத்துக்குடி , தமிழ்நாடு 

தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை , தெற்கு நோக்கி சிறிய முகப்பு நுழைவவு வாயில் மட்டுமே உள்ளது . அதன் வழியே உள்ளே சென்றால் முதலில் கிழக்கு நோக்கி தாயார் அழகிய பொன்னம்மை சன்னதியை காணலாம் . அவரை வணங்கிவிட்டு நாம் சென்றால் கிழக்கு நோக்கி கைலாசநாதர் சன்னதியை காணலாம் . இங்கு தாயாருக்கும் , இறைவனுக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன .   சுற்று பிரகாரத்தில் நந்தி, விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமி அம்மை, பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகக் காட்சிதருகிறார்கள். 

முக்கொம்பு தேங்காய் : 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் தாகம் தீர இளநீர் கேட்க அந்த தோப்பில் உள்ள இளநீர் அனைத்தும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் தர மறுத்துள்ளார் விவசாயி.இந்த இளநீரில் என்ன கொம்பா இருக்கு என்று கலெக்டர் கோபமாக கேட்க, கலெக்டருக்கு பயந்து போன விவசாயியோ மரத்திலிருந்து இளநீரை பறித்து போட மூன்று கொம்புகளுடன் இளநீர் வந்து கலெக்டர் முன்பு விழுந்ததாம். அதை கண்டு தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது.

அம்பாளின் சன்னதிக்கு எதிரே அந்த மூன்று கொம்பு முளைத்த தேங்காய் தற்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கைலாசநாதர் புதன் அம்சமாய் காட்சி தருகிறார். கருவறையில் கைலாசநாதர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். உள்ளே நந்தி பீடம் இல்லாமல் தரையில் உள்ளது. 

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகியபொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில்  காட்சித்தருகிறாள்.

இங்கு நவதிருப்பதி ஸ்தலங்களில் மகரநெடுங்குழைநாதர் கோயில்  அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இங்குள்ள பைரவருக்கு ஆறு கரங்களுடன் காட்சிதருவது சிறப்பம்சம் ஆகும். சிறப்பு வாய்ந்த இந்தப் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் பூஜை செய்தால் தொழில் விருத்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கல்வெட்டுகள் : 

இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன . இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் உள்ளவையெனக் கூறப்படுகிறது.இந்தக் கல்வெட்டுகளில் திருப்பேரை கிராமம் ‘சுந்தரபாண்டிய சதுர் வேதி மங்கலம்’ எனக் குறிப்படப்பட்டுள்ளது.

Temple Photos:

https://alayamtrails.blogspot.com/2023/10/sri-kailasanathar-temple-thenthiruperai.html

திறந்திருக்கும் நேரம் : 

காலை 7 .00  மணி முதல் 10 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் 07 . 30 மணி வரை

contactNumber : 9894552943 

செல்லும் வழி : 

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 32 km தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது .சாலியேல் இருந்து சுமார் 2 km உள்ளே செல்லவேண்டும் . 

அருகில் உள்ள தலங்கள் : 

இந்த ஊரிலேயே நவதிருப்பதி ஸ்தலங்களில் மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே நவகைலாய தலத்தின்  கேது தலமான ராஜபதி ஊர் உள்ளது . அதுமட்டும் அல்லாமல் அருகருகிலேயே நவ திருப்பதி தளங்கள் உள்ளன . 

English Summary

Sri Kailasanathar Temple – Tenthiruperai

The Siva Thalams located around Tirunelveli are called Naguglaya Thalams, which were consecrated and worshiped by Sage Uromasa, the disciple of Agathiama Munivar. These are also known as the auspicious places of Navagrahas. This South Thiruperai Kailasanathar Temple is the seventh of the Nagulaya Temples and is the favorite place of Lord Buddha.

The temple is located on the south bank of the Tamiraparani river. The temple has no Rajagopuram, only a small front entrance to the south. If you go inside through it, you will first see the beautiful Ponnammai shrine towards the east. If we go after worshiping him, we can see the shrine of Kailasanathar towards the east. There are separate shrines for the mother and the Lord here. Nandi, Vinayagar, Dakshinamurthy, Subramaniyar, Sandikeswarar, Nataraja, Sivagami Ammai and Bhairava are seen as attendant deities in the round prakaram.

Three-horned coconut:

Captain Durai, who was the collector during the British rule, asked for fresh water to quench his thirst and the farmer refused to give all the fresh water in that grove because it is anointed to Shiva. The collector angrily asked what horn was in this fresh water. Thala history says that he realized his mistake and asked God for forgiveness.

The three-horned coconut still hangs in front of Ambal’s shrine.

Kailasanathar appears as a Mercury aspect. In the sanctum sanctorum, Kailasanathar appears in the form of a small linga on a lotus flower. Inside Nandi is on the floor without pedestal.

In the separate sanctum sanctorum towards the east, Ajyaiponnammi is depicted in a kolam standing with a flower in one hand and a step hanging down in the other.

Location:

Leave a Reply