Sri Kandasamy Temple- Thiruporur

ஸ்ரீ கந்தசாமி கோயில் – திருப்போரூர்

Sri Kandasamy Temple- Thiruporur

இறைவன் : கந்தசாமி

தல விருச்சகம் : வன்னி மரம்

பழமை : சுமார் 800 வருடங்கள்

ஊர் : திருப்போரூர்

புராண பெயர் : யுத்தபுரி ,போரிநகர்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும் .

அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி சொக்க நாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

Sri Kandasamy Temple- Thiruporur

தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300 க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.

முருகனுக்கு அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்றும் ஞானகுரு என்றும் பெயர்கள் உண்டு. திருப்போரூர் முருகப்பெருமான், மற்ற தலங்களைப் போல் அல்லாமல், ஸ்ரீபிரம்மாவுக்கு உரிய அட்சமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார்.

அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், ‘கண்ணகப்பட்டு‘ என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.

உபதேச மூர்த்தி : சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும்.

எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..

திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக்கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், வள்ளி தெய்வானைக்கு இத் திருத்தலத்தில் தனித்தனி சந்நிதி அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும் .

அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

வைகாசி விசாகமும் தைப்பூசத் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. விசாக விழாவில், சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும் தைப்பூசத் திருவிழாவின் போது தெப்ப உற்சவம்  சிறப்புற நடைபெறும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kandasamy-temple-thiruporur.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .30 மாலை 3 .30 – 9 .00 வரை

செல்லும் வழி:

சென்னையில் இருந்து சுமார் 50 km தொலைவில் உள்ளது. மாமல்லபுரம் போகும் வழியில் திருவிடந்தை தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பினாள் சுமார் 5 km தொலைவில் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

திவ்யதேச கோயில்களான திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் , மாமல்லபுரம் தல சயன பெருமாள் மற்றும் மாமல்லபுரம் சிற்பங்கள் .

Location :

Tirupporur temple is a very significant shrine dedicated to the worship of Lord Shiva as well as his son Murugan. The sthalapurana discloses that at this place Murugan with his consorts Valli and Devayanai granted protection to devas and expounded the meaning of Pranava to Agastya Muni.According to the mythology , Lord Muruga fought with a demon named “Thalayaga Asuran” which took place in the air. As it is the place of the war , this place is named as Thirupporur. This place was founded by the Adhinam Srimad Chidambara Swamy.

For more Beautiful Photos please click following link

https://flic.kr/s/aHsmLf6QCX

Leave a Reply