Sri Karaneeswarar Temple – Mylapore,Chennai

ஸ்ரீ காரணீஸ்வரர்  கோயில் – மயிலாப்பூர்

Sri Karaneeswarar temple , Mylapore

இறைவன் : காரணீஸ்வரர்

இறைவி : சொர்ணவல்லி, முப்பெரும்தேவியர்

தீர்த்தம் : தேனு தீர்த்தம்

தல விருச்சம் : நந்தியாவட்டை

சென்னையில் உள்ள கோயில்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வரும் கோயில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் , ஆனால் இந்த மயிலாப்பூர் சுற்றி ஏழு சிவன் கோயில்கள் உள்ளன , இவற்றை சப்த விடங்க சிவ தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன . இந்த கோயில்கள் கபாலீஸ்வரர் கோயிலின் வரலாற்றை தொடர்பு கொண்டது மற்றும் இவை அனைத்தும் பழமையான கோயில்கள் ஆகும் .

சப்த விடங்க சிவ தலங்கள் – மயிலாப்பூர்
1 . காரணீஸ்வரர் கோயில்
2 . தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
3 . வெள்ளீஸ்வரர் கோயில்
4 .விருபாக்ஷீஸ்வரர்  கோயில்
5 . வாலீஸ்வரர் கோயில்
6 . மல்லீஸ்வரர் கோயில்
7 . கபாலீஸ்வரர் கோயில்

இந்த பகுதியில் நாம் காண போகும் தலம், ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் .

ஐந்து அடுக்கு ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாய் நம்மை வரவேற்கிறது . உள் நுழைந்து சென்றால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் . கருவறை முன் சித்தி புத்தியுடன்  விநாயகர் மற்றும் முருகர் சன்னதி உள்ளது . இவர்களை தரிசனம் செய்துவிட்டு நாம் உள் சென்றால் இறைவன் காரணீஸ்வரர் தரிசிக்கலாம் . தாயார் சொர்ணாம்பிகை தனி சன்னதியில் தெற்கு பார்த்து காட்சி தருகிறார் .

இக்கோயிலானது வசிஷ்ட மகரிஷி வழிபட்ட கோயிலாகும் .

தல வரலாறு :
இவ் கோயிலானது சிவபெருமான் அக்னி வடிவில் காட்சி தந்த தலமாகும் . ஒருசமயம் கைலாயத்தில் அம்மை ஈசரிடம் வேதங்களின் உட்பொருளை விளக்குமாறு வேண்டினாள் , பெருமானும் வேத பொருளை கூற , கேட்டு கொண்டிருந்த அம்மை தன் கவனத்தை அருகில் தோகை விரித்தாடும் மயிலின் மீது சென்றது , இதை கண்ட எம்பெருமான் சினம் கொண்டு அன்னையை மயிலாக மாறும்படி சபித்தார் . மயிலாக உருமாறிய பார்வதி தேவி பூலோகம் செல்ல , அவர் கூடவே  மகாலட்சுமியும் , கலைமகளும் தாங்களும் மயிலாக மாறி தேவிக்கு துணையாக பூலோகம் வந்தனர் .
 உமா தேவியார் கபாலீஸ்வரர் கோயிலை தேர்ந்தெடுத்து ஈசனை வழிபட , சரஸ்வதி தேவியார் இந்த காரணீஸ்வரர் கோயிலை தேர்ந்தெடுத்தார் .

உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது.

இக்கோயிலானது 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயிலாகும் . சோழர் கட்டமைத்த கோயில் , ஆனால் இப்போது மறு கட்டமைப்பில் பழைய தடம் இல்லை .

கருவறை கோஷ்டத்தில் விநாயகர் ,தட்சிணாமூர்த்தி ,விஷ்ணு ,பிரம்மா மற்றும் துர்கா உள்ளார்கள். ஆதி காரணீஸ்வரர் அரசமரத்தடியில் உள்ளார். மற்றும் அருணாச்சலேஸ்வரர் தனியாக உண்ணாமலையோடு உள்ளார் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை

செல்லும் வழி :
கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 0 .50 km  தொலைவில் பஜார் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .

Location:

ஓம் நமசிவாய

Leave a Reply