ஸ்ரீ கூடல் அழகர் கோயில் – மதுரை
இறைவன் : கூடலழகர்
தாயார் : மதுரவல்லி
கோலம் : வீற்றிருந்த கோலம்
விமானம் : அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் : ஹேம தீர்த்தம் ,சக்கர தீர்த்தம் ,வைகை நதி ,கிருத மாலா நதி
ஊர் : கூடலழகர் ,மதுரை
மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு
மங்களாசனம் : திருமழிசையாழ்வார் , திருமங்கையாழ்வார்
- 108 திவ்ய தேசங்களில் 65 வது திவ்ய தேசமாகும் .
- வைகை நதி இரண்டாக பிரிந்து மதுரையை அரண்போல் சுற்றி மீண்டும் இணைகிறது ஆதலால் திருக்கூடல் என்று அழைக்கப்படுகிறது அதனால் இக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் இறைவனுக்கு கூடலழகர் என்ற திருப்பெயர் அமையபெற்றது.
- நான்கு யுகங்களாக கோயில் கொண்டு இறைவன் நாராயணன் அருள் புரிவதாக கூறப்படுகிறது .கிருதயுகத்தில் பிரம்மனின் மைந்தன் அர்ச்சா வழிபட்டதாகவும் ,திரேதாயுகத்தில் பிருது என்ற மன்னன் வழிபட்டதாகவும் ,துவாபரயுகத்தில் அம்பரீசன் வழிபட்டதாகவும், கலியுகத்தில் புரூரவசு அவரது மகன் இந்திரத்தியும் வழிபட்டதாக கூறப்படுகிறது .
- உலகில் உள்ள அனைத்து கோயில்களிலும் காலையில் பாடுகின்ற பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பாடல் முதன் முதலில் பாடப்பெற்ற தலம் இதுவாகும் .
- பெருமாள் கோயில்களில் 96 விதமான விமானகங்கள் அமைக்கப்படுகின்றன . அதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புனிதமான சிறப்பு வாய்ந்ததாகவும் . 108 திவ்ய தேசங்களில் திருக்கோஷ்டியூர் மற்றும் இத்தலத்தில் மட்டுமே அமைந்துள்ளது . இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது இதில் உள்ள கலசங்கள் 10 அடி உயரம் கொண்டது . இவ் கோபுரத்தின் நிழல் கிழே விழாது . இது மூன்று அடுக்கு நிலையுடன் 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கின்றது .இதன் அமைப்பு ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தின் அமைப்பாகும் .
- கீழ் நிலையில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சிதருகிறார் இக்கோயிலில் விமான அமைப்பு உள்ளது. இதன் மேல் சென்றால்
இரண்டாம் நிலையில் சூரிய நாராயணன் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்தருகிறார் .இவருடன் பிரம்மா,விஷ்ணு ,சிவன் மற்றும் அஷ்டதிக்கு பாலகர்கள் ஓவிய வடிவில் உள்ளனர். இதனால் இதனை ஓவிய கூடம் என்று அழைக்கிறார்கள். அடுத்த மூன்றாம் நிலைக்கு சென்றால் பள்ளிகொண்ட பெருமாள் தேவியருடன் காட்சிதருகிறார் . ஒரே இடத்தில் நின்ற ,அமர்ந்த ,கிடந்த கோலத்தில் பெருமாளை கண்டு ரசிக்கலாம் . - சூரியன் அஷ்டாங்க விமானத்தை கூடிய ரதத்தில் வலம் வருவார் .
இவ் ரதத்தின் சிற்பம் கோயிலின் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது . - பெருமாள் கோயில்களில் நவகிரஹ சன்னதி பெரும்பாலும் இருக்காது
ஆனால் இக்கோயில் நவகிரஹ சன்னதி தனியாக உள்ளது . - இக்கோயிலின் சிற்பவேலைப்பாடுகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-koodal-azhagar-temple-madurai.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .30 – 12 .30 மணி , மாலை 4 -9 மணி வரை
செல்லும் வழி
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது
அருகில் உள்ள கோயில்கள்
1 . இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
2 . மீனாட்சி அம்மன் கோயில்
Location :