ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
மூலவர் : கோதண்டராமர் ,அபய வேங்கட வரதன்
தாயார் : சீதாதேவி ,அலமேலு மங்கை தாயார்
ஊர் : பொன்விளைந்த களத்தூர்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
- 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும் .
- ஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் இருக்கிறார் ,இங்கு சீதா தேவி இடது புறத்தில் உள்ளார் இது ஒரு அபூர்வ கோலமாகும்,மற்ற எல்லா தலங்களிலும் வலது புறத்தில் இருப்பார் . லக்ஷ்மணர் வலது புறத்தில் இருக்கிறார் .
- அபய வேங்கட வரதர் இக்கோயின் விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றதாகும் , இவர் அபய முத்திரையுடன் தென் முகமாக காட்சிதருகிறார் , ஸ்ரீராமர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் .
- இக்கோயின் உள்ளே திருப்புல்லாணியில் உள்ளது போல் தர்பசயன ராமர் கோயில் உள்ளது. இவருக்கு பின்னால் லக்ஷ்மணர் உள்ளார் .இடது புறத்தில் ஆஞ்சநேயர் மற்றும் சமுத்திர ராஜன் உள்ளார்கள் .
செல்லும் வழி:
செங்கல்பட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது . ஒட்டிவாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது . செங்கல்பட்டில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 -10 .30 மாலை 5 -7 .30
கஸ்தூரி ரங்கன் பட்டாச்சாரியார் : 9443706842
Location Map :
அருகில் உள்ள கோயில்கள் :
1 . லட்சுமி நரசிம்மர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
2 . முன்குடுமீஸ்வரர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
3 . சதுர்புஜர் ராமர் – பொன்பாத கூடம்
4 .வரதராஜ பெருமாள் -அரசர்கோயில்