Sri Lakshmi Narayana Perumal Temple – Senji , Panambakkam

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் – செஞ்சி

இறைவன் : லட்சுமி நாராயண பெருமாள்

தாயார் : ஸ்ரீ லட்சுமி

ஊர் : செஞ்சி , பாணம்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

இந்த சிறிய கிராமத்தில் இரண்டு பழமையான கோயில்கள் அமைந்துள்ளது , இதற்கு முன் உள்ள பதிவில் இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜனமேஜெய ஈஸ்வரர் கோயில் பற்றி பார்த்தோம் இந்த சிவன் கோயிலுக்கு அருகிலேயே இந்த கரிய மாணிக்க பெருமாள் கோயில் உள்ளது .

மிகவும் பாழடைந்த நிலையில் இக்கோயிலும் உள்ளது . கோயிலின் சுற்று சுவர் இருந்ததெற்கான அடையாளம் மட்டுமே இருக்கிறது . கோயிலானது கருவறை ,அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் இருக்கிறது .

கருவறையில் பெருமாள் தாயாரை தன் தொடையில் அமர்த்தியுள்ளார் . மற்றும் கருவறையின் கோஷ்டத்தில் பச்சை கல்லால் ஆன ‘பரமபத  பெருமாள்’ ஆதிசேஷன் மீது அமர்ந்து மிக ஒய்யாரமாக  நமக்கு காட்சி கொடுக்கிறார் .

பலிபீடமும் , விளக்கு கம்பமும் உள்ளது .

முடிந்தளவு இந்த மாதிரி கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு நாம்  சென்று வந்தால் இவ் கோயில்களுக்கு சிறு வருமானமாவது கிடைக்கும்.  நம்மால் முடிந்த எண்ணெய், அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து உதவுங்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/04/sri-kari-varadhar-perumal-temple-senji.html

செல்லும் வழி :

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் சென்றால் செஞ்சி பாணம்பாக்கம்  என்ற நிறுத்தம் வரும் அங்கிருந்து 3 km  தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . மற்றும் பேரம்பாக்கம் தண்டலம் சாலை சிற்றம்பாக்கம் வழியாக இக்கோவிலுக்கு செல்லலாம் .

Location:

திருச்சிற்றம்பலம் 

Leave a Reply