ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோயில் – ஆக்கூர்
மூலவர் : லட்சுமி நாராயணர்
தாயார் : அம்புஜவல்லி தாயார்
உற்சவர் : ஸ்ரீனிவாச பெருமாள்
ஊர் : ஆக்கூர்
மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு
கோயிலின் நுழைவு வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் தீபஸ்தம்பம் மற்றும் பலிபீடம் காணப்படுகிறது . பலிபீடத்தின் நேரே உள்ள மண்டபத்தில் விஷ்ணுவின் தச அவதாரங்களை அழகாக சிலையாக வைத்துள்ளார்கள், பின்பு நாம் இடதுபுறம் திரும்பி சந்நிதானத்திருக்கு உள் நுழைந்தால் கருடபகவான் லட்சுமி நாராயணரை பார்த்து உள்ளார் . கருவறையில் இறைவன் தன் இடது தொடையில் மஹாலக்ஷ்மியை அமர்த்தியவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் . அர்த்த மண்டபத்தினுள் தாயார் அம்புஜவல்லி தரிசனம் தருகிறார் . உற்சவராக ஸ்ரீனிவாசர் உள்ளார் . மற்றும் பகவான் கிருஷ்ணன் குழந்தை வடிவில் காலிங்க நடனம் ஆடியபடி உள்ள உற்சவர் உள்ளார். அதே அர்த்தமண்டபத்தில் லட்சுமி ஹயக்ரீவர் , ஆண்டாள் ஆகியவர்கள் காட்சி தருகின்றனர் .
வரலாறு :
தொட்டாச்சாரியார் கனவில் இறைவன் தான் திருமலை தும்புரு தீர்த்தத்தின் அடியில் இருப்பதாகவும் என்னை எடுத்து இவ்விடத்தில் பிரிதிஷ்டை செய்யுமாறும் சொன்னதால் தொட்டாச்சாரியார் அவர் கனவில் கண்ட இடத்தில் இருந்து மூலவரை கண்டெடுத்து இங்குவந்து பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள் . தொட்டாச்சார்யார் காலம் மஹான் ராமானுஜர் காலத்தை சேர்ந்ததாக கூறுகிறார் . இவ்வூரில் உள்ள சிவன் கோயில் மற்றும் இந்த லட்சுமி நாராயணர் கோயிலும் அவரே நிறுவியதாக கூறுகிறார்கள் .
தாயார் மற்றும் உற்சவர் ஆகியவர்கள் 1970 ஆம் ஆண்டு மஹான் நிகமந்த மஹாதேசிகர் மற்றும் மஹான் ஆக்கூர் ஆண்டவன் அகியோர்களால் நிறுவட்டதாக கூறுகிறார்கள் .
இங்குள்ள கல்வெட்டில் இக்கோயில் சுமார் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கூறுகிறது . இக்கோயிலானது புதுப்பிக்கப்பட்டு 2015 ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள் .
வேண்டுதல் மற்றும் பரிகாரம் :
இக்கோயில் நவகிரஹ தோஷம் நிவர்த்தி தலமாக விளங்குகிறது , மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி பரிகாரம் செய்யப்படுகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/08/sri-lakshmi-narayana-temple-akkur.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 – 10 .00 வரை , மாலை 5 .00 – 8 .00 மணி வரை
செல்லும் வழி :
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 20 km சென்றால் இவ்வூரை அடையலாம் . உத்திரமேரூர் இருந்து சுமார் 24 km தொலைவில் உள்ளது .
Location: