Sri Mallikeswarar Temple- Ashok nagar

ஸ்ரீ தோபாசாமி (எ) மல்லிகேஸ்வரர் கோயில் -அசோக் நகர் (சென்னை )

Sri Mallikeswarar Temple- Ashok Nagar

இறைவன் : மல்லிகேஸ்வரர்

அம்பாள் : மகேஸ்வரியம்மாள்

தல விருச்சகம் : வில்வம்

ஊர் : அசோக் நகர் , சென்னை

மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

Sri Mallikeswarar Temple- Ashok Nagar
  • 500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில் ஆகும் , தோபா சாமி சித்தர் இங்கு தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக குறிப்பு உள்ளது. அவர் கிபி 1780 -1830 வாழ்ந்த மகான்.இவரின் ஜீவ சமாதி வேலூரில் உள்ள சைதாப்பேட்டை என்ற இடத்தில உள்ளது . இவருடைய திருமடம் திருவெற்றியூர் ,திருமயிலை ,திருப்பாப்புலியூர் ஆகிய இடங்களில் உள்ளது .
  • மூன்று அடுக்கு ராஜா கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் மாடம் கருவறை சதுர வடிவில் உள்ளது முதலில் சக்தி கணபதி அடுத்ததாக மல்லிகேஸ்வரர் அடுத்ததாக விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர் அதன் பின் தெற்கு நோக்கி மல்லிகேஸ்வரி தாயார் காட்சி தருகிறார் .
  • பிரகாரத்தில் பக்த ஆஞ்சநேயர் , சீதா சமேத ராமர் , சத்திய நாராயணர் மற்றும் நவகிரஹ சன்னதி ,சனீஸ்வரன் சன்னதி ,பைரவர் சன்னதிகள் தனி தனியாக உள்ளன . ஆஞ்சநேயரை சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ப்ரிதிஷ்டை செய்துள்ளார் .
  • இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று சித்தர் எழுதிய குறிப்பில் உள்ளது .
  • இந்து அறநலத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது .
  • இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் என்னிடம் வேண்டுதலை பற்றி என்னிடம் கூறினார் , இக்கோயிலுக்கு தினமும் வந்து விளக்கு ஏற்றி 7 முறை வலம் வரவேண்டும் தொடர்ச்சியாக 7 நாட்கள் வலம் வந்தால் வேண்டியது கண்டிப்பாக நடக்கும் என்று கூறினார் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 . 30 -10 .30 மணி வரை , மாலை 5 -8 .30 மணி வரை

செல்லும் வழி
அசோக் நகர் பில்லர் அருகில் மெட்ரோ ரயில் அருகில் வடபழனி சாலையில் நுழைவு வாயில் உள்ளது .
தொடர்புக்கு : மணிகண்ட குருக்கள் – 9841335996
வீர்சாமி குருக்கள் : 9444495918

Location

திருச்சிற்றம்பலம்

Leave a Reply