ஸ்ரீ மங்களநாதர் கோயில் – உத்தரகோசமங்கை
இறைவன் : மங்களநாதர்
தாயார் : மங்களேஸ்வரி
தல விருச்சகம் : இலந்தை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
ஊர் : உத்தரகோசமங்கை
மாவட்டம் : ராமநாதபுரம் , தமிழ்நாடு
- மிக பழமையான கோயில் , இக்கோயிலின் பழமையின் குறிக்கும் விதமாக ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது ‘ என்ற பழமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது .
- உத்தரம் – உபதேசம் ,கோசம் -ரகசியம் ,மங்கை -பார்வதி . பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என்ற பெயர் பெற்றது .
- இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இராவணன் காலத்து கோயில் என்பதை குறிக்கின்றன ,இராவணன் மற்றும் மண்டோதிரிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த தலம் இது .
- மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவ காட்சி கொடுத்த தலம் ,திருவாசகத்தில் அதிகமாக இக்கோயிலின் இறைவனை பற்றி பாடியுள்ளார் . திருவாசகத்தில் 38 இடங்களில் இவ் கோயிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார் .
- அருணகிரி நாதர் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார்
- இக்கோயிலில் உள்ள நடராஜர் மூர்த்திக்கு ஆதி சிதம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .
- முழுவதும் விலை உயர்ந்த மரகத்திருமேனி , ஐந்தரை அடி உயரமாக மிக அழகாக காட்சிதருகிறார் . இவருக்கு ஆறு காலபூஜையின் போது இறைவன் தாண்டவம் ஆடுவதாக நம்பப்படுகிறது . இவர் அம்பாளுக்கு முன் ஆடிய நாட்டியதையே சிதம்பரத்தில் ஆடியதாக சொல்லப்படுகிறது .
- நடராஜர் கோயில் செல்லும் வழி அகழி போன்ற அமைப்பு உள்ளது எனவே உள்ளே செல்ல மரப்படிகள் வழியாகத்தான் செல்லவேண்டும் . இறைவன் அக்னியில் மத்தியில் ஆடுவதால் இந்த அமைப்பு என்று கூறப்படுகிறது .
- இவருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நாளில் சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது பின்பு மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படுகிறது ,அடுத்த வருடம் வரும் திருவாதிரை நாளில் மட்டுமே மீண்டும் சந்தனக்காப்பு களையப்படும் .
- தினமும் உச்சிகால நேரத்தில் ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெறுகிறது .
- நடராஜர் சன்னதிக்கு அருகில் சஹஸ்ரலிங்கம் சன்னதி உள்ளது . இக்கோயிலில் 3000 வருடங்கள் பழமையான இலந்தை மரம் உள்ளது .
வியாசகரும் ,காகபுஜண்டரும் இக்கோயில் தவம் செய்தார்கள் என்று கூறப்படுகிறது . - அம்பாள் இறைவனை பூஜித்த தலம்
- பாவ விமோசனம் தரும் தலம்
- தாழம் பூ பூஜைகளுக்கு பயன்படுத்துவதில்லை ,ஆனால் இங்கு இறைவனுக்கு தாழம் பூ சூட்டப்படுகிறது அதுக்கு காரணம் தாழம் பூ சாப விமோசனம் பெற்ற தலம் ஆகும் .
- ராமநாதபுரம் சமஸ்தானத்திருக்கு உரிய கோயிலாகும் . சேதுபதி மகாராஜா அறங்காவலர் ஆவார்கள்.
- இக்கோயில் இலங்கை கண்டி மஹாராஜாக்களால் கட்டப்பட்டு அதன் பிறகு பலரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-mangalanathar-temple.html
செல்லும் வழி :
ராமநாதபுரத்தில் இருந்து 10 km தொலைவில் உள்ளது . அருகில் திருப்புல்லாணி கோயிலுக்கும் செல்லலாம் .
Location: