ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்
இறைவன் : மாசிலாமணீஸ்வரர்
இறைவி : கொடியிடைநாயகி
ஆகமம் : சிவாகமம்
தல விருச்சகம் : முல்லை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
ஊர் : வட திருமுல்லைவாயில்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு
- தேவாரம் பாடல் பெற்ற தொண்டை மண்டல தலங்களில் இந்த ஆலயம் 22வது தலம் ஆகும் .இது தேவார பாடல் பெற்ற ௨௭௪ தலங்களில் 255வது தலமாகும். சுந்தரர் தன பதிகத்தில் இக்கோயிலைப்பற்றி பாடியுள்ளார் .
- வரலாறு : புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான்.அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொறுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார்.அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். .
- சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார் . தொண்டைமான் மன்னரால் வெட்டப்பட்டதால் அதை மறைக்க அவருக்கு சந்தனக்காப்பு இடப்பட்டிருக்கும் .வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று அதை எடுத்து வேறு மாற்றுவார்கள் .
- பாதரச லிங்கம் சன்னதி உள்ளது அவருக்கு எல்லாவித அபிஷேகமும் நடைபெறுகிறது .
- தொண்டைமான் மன்னருக்கு போருக்கு உதவி செய்வதற்காக நந்தி உடன் சென்றதால் அவர் இறைவனின் எதிர் திசையை(கிழக்கு நோக்கி ) நோக்கி வீற்றியிருப்பர்
- இங்கே சிவனே பிரதானம் என்பதால் நவகிரகத்திற்கு தனி சன்னதி இல்லை .
- மன்னருக்கு அவசரமாக காட்சி அளிக்க வேண்டியிருந்ததால் அம்பாள் வலதுபுறத்தில் இருப்பார் மற்றும் இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார் .
- பைரவர் ,சூரியன் ,நக்ஷத்திரங்கள் ,வீரபத்திரர் ,நக்கிரகங்கள் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது ஏனெனில் அனைவரும் தம்வினை நீங்க இவ் பெருமானை வணங்கியதால் தனி வழிபாடு கிடையாது ,இறைவனே இங்கு எல்லாம் ஆவார் .
- இக்கோயிலை சுற்றி 23 கல்வெட்டுகள் உள்ளன . அவைகள் , சிங்கள வீரநாரணன், திருவிழா, தேவதானம், உடையார் அரசு, புழற்கோட்டத்து நாட்டவர், கோயம்பேடு சிவபூதன் வானவர், அய்யலுப்ப கடையார், பிராட்டியார் செம்பியன் மாதேவி, நற்பாக்கிழான் கோற்றளப்பான் சூரியதேவன் உள்ளிட்ட விசயங்களை பற்றி கூறியுள்ளது ..
- வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாட்களில் திருவெற்றியூர் வடிவுடையம்மன் ,மேலூர் திருவுடையம்மன் மற்றும் இவ் ஆலயத்தின் கொடியுடையம்மன் ஆகியவர்களை மூன்று காலங்களில் வழிப்பட்டால் நல்ல பலன் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது . இவ் மூன்று ஆலயங்களையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது .
- இங்குள்ள முருகரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்
- வசிட்டருக்கு தன் தவத்தால் காமதேனு பசு கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன .
- தொண்டைமான் மன்னன் இக் ஆலயத்தை கட்ட குறும்பர்களின் கோட்டையிலுருந்து இரண்டு வெள்ளருக்கு தூண்களை அமைத்தார் அவை இன்றும் மாசிலாமணி ஆலயத்தின் முன்னர் காணப்படுகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/masilamaneeswarar-temple-vada.html
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7.00 – 12.30 ,மாலை 4.30 மணி – 8.30
செல்லும் வழி:
சென்னை முதல் அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் திருமுல்லைவாயில் நிறுத்தத்தில் இறங்கி 1km செல்லவேண்டும் .மற்றும் அம்பத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
Location :