Sri Mayuranathar Temple- Mayladuthurai

ஸ்ரீ மயூரநாதர் கோயில் – மயிலாடுதுறை

Sri Mayuranathar Temple- Mayladuthurai

இறைவன் : மயூரநாதர் ,வள்ளலார்

இறைவி : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி

தல விருச்சம் : மாமரம் ,வன்னி

தீர்த்தம் : பிரம தீர்த்தம் ,காவிரி, ரிஷப தீர்த்தம்

புராண பெயர் : மாயூரம்

ஊர் : மயிலாடுதுறை

மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தளங்களில் 39 வது தலம். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 102 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தலத்தை பற்றி பாடியுள்ளார் .

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வந்து வழிபட்டதாலும் மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது .தாயார் அவ்வாறு ஆடிய தாண்டவம் “கௌரி தாண்டவம் ” என்று அழைக்கப்படுகிறது .

அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை  மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.  சிவாலயங்களில் கந்த சஷ்டியின் போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம்.  ஆனால், இத்தலத்தில்  சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுறது.

Sri Mayuranathar Temple- Mayladuthurai

காசிக்கு சமமான ஆறு தலங்களில் இத்தலமும் ஒன்று .இத்தலத்தில் காவேரி துறையில் ஐப்பசி மாத துலா நீராடுதல் மிகவும் விஷமானது .அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிக சிறப்பாகும் .இவ்வாறு நீராடி  இவ் தல இறைவனை வணங்கினால் மோட்சம் கிட்டும் என்று ஐதீகம் .

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு “ என்று கொண்டாடுவார்கள் .ஏனனில் முடவன் ஒருவன் தாமதமாக வந்ததால் தன்னால் அடுத்த ஆண்டு வந்து மூழ்கி செல்வது இயலாது என இறைவனிடம் முறையிட்டான் ,இறைவன் ஈசன் மனமுருகி அவனுக்கு ஒரு நாள் நீட்டிப்பு தந்தார் .அவன் மூழ்கி தன் பாவங்களை போக்கி கொண்டான் .இதனால் முடவன் முழுக்கு என்று பெயர் பெற்றது .

Sri Mayuranathar Temple- Mayladuthurai

இக்கோயில் சோழர்கள் கட்டிய கோயில் ஆகும் .கோயில் சுவர்களில் குலதுங்க சோழனின் பதிவுகள் கல்வெட்டுகளாக உள்ளன .இக்கோயிலில் பராந்தக சோழன் (10 ஆம் நூற்றாண்டு ),இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி 1177 ),மூன்றாம் குலந்துங்க சோழன் (1201 ) ,ராஜராஜ சோழன் (1228 ),மூன்றாம் ராஜராஜ சோழன் (1245 ),சுந்தர பாண்டியன் ,விஜயநகர மன்னர்கள் என பல்வேறு காலகட்டத்தில் மன்னர்கள் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் என்று இந்தியா தொல்லியல் ஆய்வறிக்கையில் கூறியுள்ளார்கள் . 

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் காரணமாக அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின்  தெற்கே தனி சன்னிதி உள்ளது.  தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், “இத்தலத்தில் உள்ள  அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்”  என்ற வரத்தையும் சிவபெருமான் அருளினார்.  லிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கௌரவிக்கும்  விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்படுகிறது.

திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30வரை  மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . ph : 04364-223779,222345
26 .05 .2018 

அமைவிடம் :
சென்னை to நாகப்பட்டினம் போகும் வழியில் மயிலாடுதுறை உள்ளது .கும்பகோணத்திலிருந்து 45 நிமிடங்களில் செல்லலாம் . இக்கோவிலுக்கு முன்னாள் 8 km தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் vaitheeswaran kovil   உள்ளது . இவூரின் பேருந்து நிலையத்தில் இருந்து 5 km  அருகில் திருஇந்தளூர் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது .

Location:

One of Devara hymns place. the main icon is a linga and the presiding deity is called Mayuranathar.becouse the god Parvathi worshipped shine here in the form of a mayura.Thousands of pilgrims converge here during the Thulaa (Libra) festival. A noteworthy feature of the Mayuranathar temple is the daily processional ritual to the banks of the Kaveri throughout the monsoon month of Libra.

More Beautiful photos please click following Link.

https://flic.kr/s/aHsmLge4tw

Leave a Reply