Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை

Sri Meenakshi Temple-Madurai

இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர்

தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி

தல விருச்சகம் : கடம்ப மரம்

தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை

புராணபெயர் : ஆலவாய் ,கூடல் ,நான்மாடக்கூடல் ,கடம்பவனம்

ஊர் : மதுரை

மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இக்கோயில் 192 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடமாகும் . விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது வீடாகும் .
  • 14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயிலாகும் ,கலையழகும் ,சிற்பங்களும் நிறைந்த கோயிலாகும் . பொற்றாமரைக்குளம் : சிவபெருமானால் ஆதியில் படைக்கப்பட்ட இக்குளம் ‘ஆதி குளம் ‘என்றும் அழைக்கப்படுகிறது .165 அடி நீளமும் ,120 அடி அகலமும் கொண்டுள்ளது இக்குளம் ,இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களை சித்திரமாக வரைந்துள்ளார்கள் ,தெற்கே உள்ள சுவரில் 1330 திருகுறள்களை சலவை கற்களில் பொறித்துள்ளார்கள் . இக்குளத்தில் இருந்துதான் இந்திரன் தான் பூஜிப்பதிற்காக பொன்தாமரை மலரை பெற்றதாக இக்குளத்திற்கு பெருமை உண்டு . இக்குளம் நல்ல நூல்களை தாங்கியும் ஏனைய நூல்களை நீரில் மூழ்கியும் அடையாளம் காணும் தன்மை உண்டு என்பதை சங்க கால நூல்கள் தெருவிக்கன்றன .ஒரு நாரைக்கு இறைவன் அருளிய வரத்தினால் இக்குளத்தில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இல்லாமல் இருப்பது இதுவரை அதிசயம்

ஆயிரங்கால் மண்டபம் : 985 தூண்களை கொண்ட மிக பெரிய மண்டபம் ,எத்திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் .ஏழிசை எழுப்பக்கூடிய இரண்டு தூண்களும் ,சோமசுந்தர் புலவர் வடிவில் வந்து நூல்களை தரம் பிரித்து கொடுத்த சங்கப் புலவர் உலா மண்டபம் ஆகியவை உள்ளது.

அஷ்டசக்தி மண்டபம் : மீனாட்சி சன்னதியில் நுழைந்தால் 18 அடி அகலமும் 25 அடி உயரமும் 46 அடி நீளமும் கொண்ட இந்த அஷ்டசக்தி மண்டபத்தை காணலாம் . இங்குள்ள தூண்களில் அஷ்டலக்ஷ்மி அருள்தருகின்றனர்.

மீனாட்சி நாயக்கர் மண்டபம் : இந்த மண்டபம் 110 தூண்களை கொண்டது .

முதலிப்பிள்ளை மண்டபம் : இந்தமண்டபம் 25 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது .

ஆறுகால் மண்டபம் : அம்மன் சன்னதிக்கு இந்த மண்டபம் உள்ளது .இந்த இடத்தில தான் குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ அரங்கேற்றினார் .

  • இதுமட்டும் இல்லாமல் ஊஞ்சல் மண்டபம் ,திருக்கல்யாண மண்டபம் ,கம்பத்தடி மண்டபம் ஆகியவை உள்ளன
  • இறைவனின் பஞ்சசபைகளில் இக்கோயில் ரஜத(வெள்ளி) சபை ஆகும் .இத்தலத்தில் இறைவன் காலை மாற்றி வலது காலால் ஆடுகிறார். இதை சத்தியாதாண்டவம் என்பார்கள் .
  • இங்குள்ள கருவறைகள் தேவேந்தரானால் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள் ,இக்கருவறைகள் 32 சிங்கங்களும் ,64 சிவகணங்களும் 8 கல்யானைகளும் இவ்விமானங்களை தாங்கி நிற்கின்றன .இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னவர்களால் கட்டப்பட்டது கடைசியில் தேவகோட்டை நகரத்தார்களால் புதிப்பிக்கப்பது .மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி 1570 ஆண்டில் கட்டப்பட்டது ,அதன் பிறகு 1963 ஆம் ஆண்டு சிவங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது .
  • மாணிக்கவாசகருக்காக நரிகளை குதிரைகளாக மாற்றி இறைவன் அரிமர்த்தன பாண்டியனிடம் விற்ற இடம் இது .இறைவன் வந்திகிழவியிடம் பிட்டினை பெற்று கூலியாக வேலை பார்த்து கரையை அடைக்காமல் தூங்கியதால் பாண்டியனிடம் ஈசன் பிரம்படி பெற்றது இவ் இடத்தில் தான் .
  • கி .பி 1330 ஆண்டு முகலாயர்கள் படையெடுப்பில் இருந்து சொக்கநாதரை காக்க அவரை கோயில் ஸ்தானிகர்கள் அவரை கிளி கூண்டில் வைத்து மணலை பரப்பி ,கருவறை வாசலை கல்லால் அடைத்து முன்னாள் உள்ள மண்டபத்தில் மற்றொரு லிங்கத்தை வைத்து காத்துவந்தனர். சுமார் 48 வருடங்கள் கழித்து கம்பண்ணர் முகமதியர்களை வென்று ஆலயத்தில் உள்ள அறையை தோண்டி பார்க்கும் போது லிங்கத்தின் மேல் பூசிய சந்தனம் வாசனையுடன் அருகில் உள்ள வெள்ளி விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் .
  • மிக பெருமை மற்றும் புகழ் மிக்க கோயிலாகும் எப்போதும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருக்கும் கோயிலாகும் ,இங்குள்ள மீனாட்சி மக்களிடையே மிகவும் புகழப்படுபவர் அவரே இவ் மதுரையில் மன்னவனுக்கு குழந்தையை அவதரித்ததால் இவரை இவ் மண்ணின் தெய்வமாக கருதுகிறார்கள் .
  • நக்கீரர் இறைவனை எதிர்த்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ‘ என்று வாதிட இடம் இதுதான்

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-meenakshi-sundareswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 5 – 12 .30 மாலை 4 .00 -10 .00 மணி வரை

செல்லும் வழி:
சென்னையில் இருந்தும் இந்தியாவின் மற்ற இடங்களிலும் நிறைய ரயில் மற்றும் விமானங்கள் உள்ளன . நகரின் நடுவில் உள்ளது .

Location :

Now Mobile phones not allowed inside of temples

Leave a Reply