ஸ்ரீ அழகிய மணவாளர் கோயில் (நாச்சியார் கோயில் ) -உறையூர்
இறைவன் : அழகிய மணவாளர்
தாயார் : கமலவல்லி
கோலம் : நின்ற கோலம்
விமானம் : கல்யாண விமானம்
தல தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
ஊர் : உறையூர் , திருச்சி
மாவட்டம் : திருச்சி ,தமிழ்நாடு
- பெருமாளின் மங்களாசனம் சென்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் இரண்டாவது தலமாகும் .
- ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் மற்றும் நாயன்மார்களில் ஒருவரான புகழ் சோழர் மற்றும் சோழ அரசன் கோச்செங்கட்சோழன் ஆகியோர்களின் அவதார தலமாகும் . உறையூர் சோழர்களின் தலைநகராக சிறிது ஆண்டுகள் இருந்துள்ளது .
- எல்லா வைணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசல் கடக்கும் வைபோகம் நடைபெறும் ,ஆனால் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கும் வைபோகம் நடைபெறாது .அதற்க்கு பதில் மாசி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கும் வைபோகம் நடைபெறும் ,அன்று பெருமாளுக்கு பதில் தாயார் மட்டுமே பரமபத வாசலை கடப்பார் .
- மூலஸ்தானத்தில் அழகிய மணவாள பெருமாளும் ,கமலவல்லி தாயாரும் திருமணக்கோலத்தில் நின்றபடி காட்சிதருகிறார்கள் .இத்தலம் தாயார் பிறந்த தலம் என்பதால் இவ் கோயிலை எல்லோரும் “நாச்சியார் கோயில் “என்றே அழைப்பார்கள் .ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை விலகும் .
- வரலாறு : ரெங்கநாதரின் பரம பக்தரான நலங்க சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான் ,அவனுக்கு குழந்தை இல்லாததால் ரெங்கநாதரிடம் வேண்டினான் ,அவனுடைய பக்திக்கு இசைந்த பெருமாள் மஹாலக்ஷ்மியையே குழந்தையாக அவதரிக்க செய்தார். மன்னன் வேட்டைக்கு செல்லும் வழியில் ஒரு குளத்தங்கரையில் தாமரை மலரின் மீது இக் குழந்தை கிடைத்தது .குழந்தைக்கு “கமலவல்லி ” என்று பெயர் சூட்டினார் .அவள் வாழ்ந்து பெரியவள் ஆனவுடன் தன் கனவில் தோன்றிய ரங்கநாதரையே மணப்பதாக கூறி விரதங்கள் செய்து வந்தாள். அவளின் விரதம் எல்லை மீறவே கமலாவல்லியை இனியும் சோதிக்க கூடாது என்று எண்ணி பெருமாள் மணம் புரிவதற்காக அழகிய திருக்கோலத்தில் உறையூர் வந்து கமலவல்லி நாச்சியாரை மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது .
- இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டதாகும் .8 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும் .அதன் பின் பாண்டியர்கள் ,விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -01 .00 வரை ,மாலை 4 .00 -8 .00
தொலைபேசி எண்: 0431 -2762445 /2437605 , 9443188716 /9443307605
அமைவிடம் :
திருச்சியின் ஒரு பகுதியே உறையூர் ஆதலால் எல்லா இடங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன
Location: