ஸ்ரீ நாகராஜர் கோயில் – நாகர்கோயில்
இறைவன் : நாகராஜன்
தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஊர் : நாகர் கோவில்
மாவட்டம் : நாகர் கோவில் , தமிழ்நாடு
- மூலஸ்தானத்தில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக அருள்தருகிறார் . இன்றும் நாகங்கள் வசிப்பதால் மூலஸ்தானத்தை ஓலை கூரையில் அமைத்துள்ளார்கள் .இதை ஆடி மாதத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சர்களே பிரித்து புது கூரை போடுகிறார்கள் .
- சிவன் கோயில்களுக்கு சண்டி ,முண்டி துவாரபாலகர்களாக இருப்பார்கள் அதை போல் இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள் .
- மூலவர் அமைந்திருக்கும் இடம் எப்போதும் ஈரமாகவேஇருப்பது இங்கு சிறப்பாகும் .மேலும் மூலவரின் பின் புறமுள்ள ஊற்றிலிருந்து எடுக்கப்படும் ப்ரசாதமண் ஆறுமாதம் கருப்பாகவும் ,ஆறு மாதம் வெள்ளை நிறமாகவும் இருந்து வருவது அதிசயமாகும் . இவ் மண்ணையே இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது .
- நாகத்திற்கு தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் இக்கோயிலே பெரியதாகும் . ‘நாகர் கோவில் ‘ என்ற இந்த ஊரின் பெயர் இக்கோயிலை கொண்டே குறிக்கப்படுகிறது .
- இக்கோயின் வாசல் பகுதி மாளிகை போன்று அமைக்கப்பட்டுள்ளது . ‘மகாமேரு’ மாளிகை என்று இதை அழைப்பார்கள் .
- அனந்தகிரிஷ்ணனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது . இவருக்கு முன்னாடி கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது . கொடிமரத்தின் உச்சியில் கருடனுக்கு பதிலாக ஆமை அமைக்கப்பட்டுள்ளது . நாகத்துக்கு கருடன் பகை என்பதால் இவ்வாறு அமைத்துள்ளார்கள்.
- நாகதோஷம் ,காலசர்ப்ப தோஷம் ,தாரதோஷம் ,புத்திர தோஷம் ,மாங்கல்ய தோஷம் போன்ற ராகு ,கேது கிரஹங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும் முக்கியமான தலமாகும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-nagarajar-swamy-temple-nagarcoil.html
அமைவிடம்
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்து செல்லும் வழியில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது .
Location:
இக்கோயிலின் அருகில் தெற்கு ரத வீதியில் ஸ்ரீ கணேஷ் ஐயர் மெஸ் மிகவும் பெயர் போன மெஸ் ஆகும் .