அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் – சிங்கர்குடி / சிங்கிரிக்குடி

ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷண தம்ஷ்ட்ராய தீ மஹி
தந்நோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத்
மூலவர் : நரசிம்மர்
தாயார் : கனகவல்லி தாயார்
தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா ,பிறகு வாமன மற்றும் கருட தீர்த்தம் என ஐந்து வகை தீர்த்தம்
தல விருச்சகம் : வில்வம்
ஊர் : சிங்கர்குடி ,சிங்கிரிக்குடி
மாவட்டம் : கடலூர்

விழாக்கள் : சித்திரை மாதம் பிரமோற்ஸவம், சுவாதி நட்சத்திரம் அன்று தேர் திருவிழா .ஐப்பசி பவித்ர உற்சவம் ,வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு .
- சிங்கவேள்குன்றம் சார்ந்த ஆழ்வார் ஆயிரரூர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது (கி .பி 1051 )
- சோழர்களால் கட்டப்பட்ட கோயில்
- சோழ மன்னர்கள் , கிருஷ்ணதேவராயர் ஆகியவர்கள் இக் கோயிலுக்கு நன்கொடை அளித்ததாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன .
- தல பெருமை :
இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது . இங்கு நரசிம்மர் 16 கைகளுடன் மேற்கு பார்த்து வீற்றியிருக்கிறார் . நரசிம்மர் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக மேற்கு திசையை நோக்கியவாறு இரணியனை வதம் செய்தார் அந்த பிரமாண்ட உருவத்துடன் 16 கைகளுடன் மிக உக்கிரமாக காட்சி அளிக்கிறார் . மற்றும் இடது புறத்தில் இரணியனின் மனைவி நீலாவதி வலது புறத்தில் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள் மற்றும் வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர்,பால நரசிம்மர் வீற்றியிருக்கிறார்கள் .ஒரே இடத்தில 3 நரசிம்மர்கள் காட்சி கொடுப்பது மிக அரிது.

நரசிம்மர் தன் 16 கைகளில் பதாகஹஸ்தம் ,பிரயோக சக்ரம் ,குத்து கத்தி, பானம் ,வில் ,சங்கு ,கதை ,கேடயம் ஆகியவற்றைகளையும் மற்ற கரங்களில் இரணியன் சம்ஹரமான குடலை கிழிப்பது ,மாலையாய் பிடித்திருத்தல் ,இரணியனின் தலையை அழுத்தி பிடித்தல் ஆகியவற்றுடன் காட்சி அளிக்கிறார் .
தல சிறப்பு :
நரசிம்மர் உக்கிர கோலத்தில் லக்ஷ்மியை மடியில் வைத்தோ அல்லது யோக நிலையிலோ எல்லா கோவில்களிலும் காணலாம் ஆனால் இங்கு அவர் 16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிரமாக காட்சி கொடுக்கிறார் .
ஒரே தலத்தில் 3 நரசிம்ஹர் காட்சி கொடுக்கும் தலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது .
பொது :
இத்தலத்தில் 5 நிலை கோபுரம் ,கனகவல்லி தாயார் ,ராமர், 16ஆழ்வார்கள் ,விநாயகர் ,ஆஞ்சநேயர் ஆகியவர்கள் தனி தனி சன்னதியில் வீற்றியுள்ளார்கள் .
நரசிம்மரை வேண்டினாள் கடன் பிரச்சனை ,மனநலம் பாதித்தவர்கள் ,குழந்தை வரம் ,எதிரிகளால் வரும் தொல்லை ஆகியவற்றிகளுக்கு வேண்டி செவ்வாய் கிழமைகளில் மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் .
செல்லும் வழி :
எல்லாரும் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய தலம் இது . ஒரே நாளில் சிங்கர்குடி ,பூவரசன் குப்பம் பூவரகன் ,பரிக்கல் நரசிம்மர் தரிசிப்பது மிக சிறப்பு இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் மிக அருகிலேயே அமைந்துள்ளது .

சிங்கர்குடிக்கு பாண்டிச்சேரியிலிருந்து 10 km தூரம் கடலூர் செல்லும் வழியில் தவளக்குப்பம் என்ற இடத்தில இறங்கி ஆட்டோவில் இக்கோவிலுக்கு செல்லவேண்டும் .கடலூரில் இருந்தும் பாண்டிச்சேரி போகும் வழியில் இறங்கி செல்லலாம் .நிறைய பேருந்து வசதிகள் உள்ளது
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 7 முதல் 12 வரை , மாலை 4.30 முதல் 9.30 வரை
Location: