ஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை )
பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி வழியில் கேட்டு தெரிந்து எனது பயணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்தேன் . ஒரு சிவன் கோயிலையும் ஒரு பெருமாள் கோயிலையும் கண்டவுடன் என் மனம் மிக பரவசமடைந்தது. இந்த சிறிய ஊரில் இவ்வளவு பழமையான கோயில்களா என்று ஆச்சரியமுற்றேன் ,மீன் சின்னம் வரையப்பட்டுள்ளதால் இது பாண்டிய மன்னர்களால் எழுப்பப்படியிருக்குமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது . பேட்டை என்றும் அகரமேல் கிராமம் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் நசரத்பேட்டை என்ற பெயரோடு மட்டும் இன்று அறியப்படுகிறது . இதனாலேயே இந்த கோயில்களை பற்றி அவ்வளவாக அறியமுடியவில்லை என்பதை வருத்ததோடு பதிவுசெய்கிறேன் . இப்போது பெருமாள் கோயிலை பற்றி பதிவிடுகிறேன் எனது அடுத்த பதிவில் சிவன் கோயிலை பற்றி பதிவு செய்கிறேன் .
மூலவர் : பச்சைவர்ண பெருமாள் ,ஹரித வர்ண பெருமாள்
அம்பாள் : அமிர்தவல்லி தாயார்
ஊர் : அகர மேல் கிராமம் , நசரத்பேட்டை
மாவட்டம் :திருவள்ளூர்
- 1000 வருடங்கள் பழமையான கோயில்
- முதலியாண்டான் அவதார தலம்
- மஹாபாரததோடு தொடர்புடைய தலம்
- பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிக பெரிய உருவமாக ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார் .
- அம்பாள் அமிர்தவல்லி தாயார் சன்னதி தனியாக உள்ளது . மற்றொரு புறத்தில் ஆண்டாள் அம்மையாரின் தனி சன்னதி உள்ளது.
- கொடிக்கம்பத்தில் முன்னே விளக்கு கம்பம் உள்ளது அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோயிலின் சிறப்பை சொல்கிறது .
- எல்லா தூண்களிலும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . கிருஷ்ணர் ,நரஸிம்மர்,ராமானுஜர் ஆகியவர்களின் சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன .
முதலியாண்டான் சன்னதி
- பெருமாள் சன்னதியின் வலது புறத்தில் முதலியாண்டான் சன்னதி உள்ளது . இது இவருடைய அவதார தலமாகும் . சுவாமி ராமானுஜருக்கு இரண்டு முக்கியமான சீடர்கள் ஒருவர் கூரத்தாழ்வார் மற்றொருவர் முதலியாண்டான் ஆவார்கள். இவர் கி.பி 1027 அன்று பிறந்தார் .105 வருடம் வரை வாழ்ந்தார் . கி பி 1132 வருடம் உயிர் பிரிந்தார் .
தல வரலாறு :
மஹாபாரத போரின் போது அஷ்வர்த்தாமா என்ற யானை இறந்ததை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துரோணாச்சாரியாரிடம் உன் மகன் அஸ்வர்த்தாம இறந்துவிட்டதாக கூறினார் அதை நம்ப மறுத்த துரோணாச்சாரியர் தன் சிஷ்யன் யுதிஷ்டரிடம் (தர்மர் ) திருப்பி கேட்டார் அவரும் கிருஷ்ணர் கூறியிருந்த அஸ்வர்த்தாம என்ற யானை இறந்ததை தன் குருநாதரிடம் மெல்லிய குரலில் அஸ்வர்த்தாம இறந்துவிட்டதாக கூறினார் இதைகேட்ட துரோணாச்சாரியார் மிகவும் மனவேதனையும் ,துன்பமும் உற்றார் . இந்த சமயத்தை பயன்படுத்தி கிருஷ்ணரின் ஆணை படி அர்ஜுனனால் துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார் . இந்த போருக்காக அஸ்வத்தமா என்ற யானை இறந்ததற்கும் , தன் குரு இறந்ததற்கும் யுதிஷ்டர் மிக வேதனை பட்டார். இந்த பாவத்திலிருந்து விடுபட நாரத மஹரிஷியின் அறிவுரைப்படி அந்த இடத்தில யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்திலிருந்து பகவான் கிருஷ்னர் பச்சை வண்ண யானையாக காட்சிதந்தார் . இந்த அவதாரத்தை நினைவு படுத்தவே இத்தலத்தில் பச்சை வர்ண பெருமாளாக (சமஸ்கிருதத்தில் ஹரித வர்ண பெருமாள் ) என்று அருள் பாவிக்கிறார்.
திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி
காலை 7 .00 -11 .30
மாலை 4 .30 -8 .30
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு சாலையில் 1 km தொலைவில் நசரத்பேட்டை சிக்னல் வரும் அதன் இடதுபுறத்தில் ஊருக்குள் சென்றால் கடைசியாக சென்று வலதுபுறத்தில் திரும்பினால் கோயில் வரும் . வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையிலும் வரலாம் ,பெங்களூரு தேசிய நெடுஞசாலையிலும் வரலாம் .
அருகில் உள்ள கோயில்கள்
1 . காசி விஸ்வநாதர் கோயில் -நசரத்பேட்டை
2 . வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ) -பூந்தமல்லி
3 . திருக்கச்சி நம்பிகள் ,வரதராஜர் கோயில் -பூந்தமல்லி
4 .ஒத்தாண்டீஸ்வரர் கோயில் -திருமழிசை
5 . ஜெகநாதர் பெருமாள் கோயில் -திருமழிசை
மற்றும் மாங்காடு ,குன்றத்தூர் ,திருவேற்காடு ஆகிய இடங்களில் மிக புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன .
Location Map :