Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் – திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் )

Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

இறைவன் : பாடலீஸ்வரர் , கன்னிவன நாதர் ,கரையேற்றும் பிரான்

இறைவி : பெரியநாயகி ,தோகையம்பிகை,ப்ரஹநாயகி

தல விருச்சம் : பாதிரி

தல தீர்த்தம் : சிவகர தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ,

புராண பெயர் : பாடலிபுத்திரம் ,சதுர்வேதிமங்கலம் ,கன்னிவனம் ,வடபுலியூர் ,திருப்பாதிரிப்புலியூர்

ஊர் : கடலூர்

மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் ,மாணிக்கவாசகர்

 தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் 18 வது தலமாகும் . தேவார 274 சிவத்தலங்களில் 229 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

தல சிறப்புக்கள் :

பாதிரியை தலவிருச்சமாக கொண்டதாலும் ,புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) வழிப்பட்டதாலும் (பாதிரி + புலியூர் ) இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது .பஞ்சபுலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று .

மங்கண முனிவர் பூஜித்து தான் பெற்ற முயல் வடிவத்திலிருந்து சாப விமோச்சனம் பெற்ற தலம்.

மகேந்திர வர்மன் (கிபி 600 -630 ) சமணர்களின் பேச்சை கேட்டு கல்லால் புனைக்கப்பட்டு கடலில் எறியப்பெற்றார் அப்பர் சுவாமிகள்.

“கற்றுணை பூட்டி ஒரு கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே “ என்று பதிகம் பாடிக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையடைந்த தலம் .

எல்லா கோயில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நதியில் இருக்கும் .ஆனால் இங்கு பள்ளியறை இறைவனின் சந்நதியில் அமைந்திருக்கும் .இறைவியை நாள்தோறும் பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தல சிறப்பு .

ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது .இத்தலத்திற்கு திருப்பணிகளை பல மன்னர்கள் செய்துள்ளார்கள் . தொடக்க காலத்தில் புலவர்கள் பின்பு சோழர்கள் இறுதியாக பாண்டிய மன்னர்கள் செய்துள்ளார்கள்.

தல வரலாறு : ஒருமுறை பார்வதி தேவி தன் திருக்கரங்களால் இறைவனின் கண்களை மூடினாள் ,இதனால் உலகம் இருண்டு அணைத்து செயல்களும் நின்று போயின.இதனை கண்ட தாயார் தன் செயலால் ஏற்பட்ட இன்னல்களை கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டி இறைவனிடம் கேட்டுக்கொண்டார் .இறைவன் ஈசன் தாயாரை பூலோகம் சென்று அங்குள்ள சிவதலங்களில் பூஜிக்கும்படியும் அவ்வாறு பூஜை செய்யும் போது எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார் .அதுபோல் தாயார் பூலோகம் வந்து சிவத்தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்துவந்தார் . அப்போது பாதிரி வனமாக திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண் மற்றும் தோள் துடித்தது ,தாயார் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக தவம் செய்த இடம் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலக்ஷ்மி சந்நிதியை அடுத்து துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில ‘அருந்தவநாயகி’ சன்னதியாக உள்ளது .சந்நதியில் உருவம் ஏதும் இருக்காது .பீடம் மட்டுமே இருக்கும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-padaleeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 , மாலை 4 .00 -8 .30 வரை

செல்லும் வழி:

சென்னையில் இருந்து சுமார் 250 km  தொலைவில் உள்ளது அருகில் பாண்டிச்சேரி உள்ளது . இக்கோயில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ளது . இத்தலத்தின் அருகில் தேவநாத பெருமாள் கோயில் ,ஹயக்ரீவர் கோயில் மற்றும் தேவார பாடல் தலமான திருமணிகுழி  வாமனபுரீஸ்வரர் கோயில் உள்ளது .  

Lord Shiva advised the Lordess to go to earth and pray in shiva sthalas and in whichever sthala the left eye & shoulder vibrates, there the penance should be performed by her. Accordingly, in the course of sthala yatra of  Parvathi, when she came to pray in this sthala the diving occasion of vibration of left eye and left shoulder happened. Lordess  also penanced in the Aruba form ‘Arunthava nayagi’ and married Lord Shiva.

During the period of “King Mahendravarman” (600-630) “Thiru Navukkarasar” (Appar) was tied to a stone and thrown into ocean. “Appar” praised “Lord Shiva” and composed hymns on him. “Lord Shiva” was pleased with his prayers and the stone started floating like a boat and “Appar” reached the shore safely. Even now the place, where he landed on shore known as “Karayeravitta Kuppam” is there as witness.

Location

Leave a Reply