ஸ்ரீ பாண்டவதூதர் கோயில் – திருப்பாடகம்
இறைவன் : பாண்டவதூதர்
தாயார் : ருக்மணி ,சத்தியபாமா
கோலம் : வீற்றியிருந்த கோலம்
விமானம் : வேத கோடி விமானம் , சக்கர விமானம்
தீர்த்தம் : மத்சய தீர்த்தம்
ஊர் : திருப்பாடகம் , காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மங்களாசனம்: பூத்தாழ்வார்,பேய் ஆழ்வார் ,திருமிழிசையாழ்வார்
,திருமங்கையாழ்வார்
- 108 திவ்யதேசங்களில் 49 வது திவ்யதேசம் ஆகும் , தொண்டை நாட்டு திவ்யதேசமாகும் .
- மூலவர் 25 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
- கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது வாங்கி தரவேண்டும் என்ற எண்ணத்தில் துரியோதனை பார்க்க அவர்களுடைய சபைக்கு சென்றார் . துரியோதனன் அவர்களுக்கு ஒரு பிடி மண்ணையும் தரக்கூடாது என்ற எண்ணத்தில் துரியோதனன் கிருஷ்ணர் அமர்வதற்கு மூங்கிலால் ஆனா ஒரு பொய் ஆசனம் அமைத்து கிருஷ்ணரை கொல்ல அதர்க்கு அடியில் மல்லர்களை ஆயுதபாணியாக வைத்தான் . கிருஷ்ணர் சிம்மாசனத்தில் அமரும்போது பெரிய விஸ்வரூபம் எடுத்து மல்லர்களை அழித்தார்.
- கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது போனதால் பாண்டவ தூதன் என்ற திருநாமம் பெற்றார் .
- அஜூனனின் கொள்ளு பேரன் ஜனமேஜயன் இவ் விஸவரூப தரிசனம் காண இவ்விடம் வந்து தவம் செய்து கிருஷ்ணருடைய விஸ்வரூபத்தை கண்டார் .
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு தலம்.
- நட்சத்திரங்களில் ஒன்றான ரோகினி தேவி ,கிருஷ்ணரை பூஜித்து சந்திரனை மணந்துகொண்டார் . ஞான சக்தியான ரோகினி ,அக்னி சக்தி கொண்ட கார்த்திகை இருவரையம் மணந்த பிறகே ஏனைய நட்சத்திரங்களை சந்திரன் மணந்து கொண்டார் . ஞான சக்தி அளித்த கிருஷ்ணருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரோகினி தினமும் ஸ்வாமியை வழிபடுவதாக ஐதீகம் .
- கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வ பாதயோக சக்திகளை கொண்டு அருள்வதால் இங்கு அடி பிரதட்சணம் ,அங்க பிரதட்சிணம் செய்வோர்களுக்கு எல்லா நரம்புகளுக்கும் பலம் பெரும் .
- இங்கு ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகினி நட்சத்திர தீபம் ஏற்றி தூபம் சாந்தமாகும் வரை ஆலயத்தில் அடிபிரதச்சனமாக வளம் செய்து தியானித்து கண்ணனுக்கு வெண்ணை கலந்த அடை மற்றும் முறுக்கு சீடை பட்சணங்களை பூஜை செய்து ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவேண்டும் .
- கிருஷ்ணரை புதன் ,சனி மற்றும் ரோகினி , அஷ்டமி திதி அன்று வழிபட்டால் சிறப்பு .
- இது சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-pandavathootha-perumal-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 -11 .00 , மாலை 4 .00 – 7 .30 மணி வரை
செல்லும் வழி
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்னே 1 / 2 கி.மீ தொலைவில் உள்ளது.
Location :