ஸ்ரீ பராசக்தீஸ்வரர் கோயில் – செம்பரம்பாக்கம்
இறைவன் : பராசக்தீஸ்வரர்
இறைவி : பராசக்தீஸ்வரி
ஊர் : செம்பரம்பாக்கம்
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவும் தண்ணீரை தரும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, இந்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் மிக பழமையான சிவன் கோயிலை காணும் பாக்கியம் எனக்கு கிட்டியது .
நானும் எனது நண்பர் கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று வந்தோம் .
சமீபத்தில் இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது . அமைதியான ஒரு சூழலில் ஈசன் அமைதியாய் அமர்ந்துள்ளார் . கோயிலுக்கு கோபுரம் இல்லை ஆனால் கோயிலின் கருவறை கோபுரத்தை ஈசனின் லிங்க திருமேனியாய் அமைத்துள்ளார்கள்.
கோயிலுக்கு முன் உள்ள நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் பாலகணபதி சாமி மற்றும் ராகவேந்திரா சாமி இருவருக்கும் சிலைகளை வைத்துள்ளார்கள். கொடி கம்பம் இல்லை , கோயிலின் உள் சென்றால் நந்தி பெருமானை நாம் தரிசிக்கலாம் , பின்பு கருவறையில் ஈசன் சற்று பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் தொழிலில் நாம் மிக பெரிய வெற்றி அடையலாம் என்று கூறுகிறார்கள் . இடதுபுறத்தில் தாயாருக்கு தனி சன்னதி உள்ளதையும் நாம் காணலாம் . இங்குள்ள தட்சணாமூர்த்தி சிலை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது .
கோயிலை மிக அழகாகவும் சுத்தமாகவும் வைத்துள்ளார்கள் , உங்களால் முடிந்தால் நீங்கள் இக்கோயிலுக்கு சென்று பாருங்கள் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 -30 – 10 .30 , மாலை 5 .30 – 8 .00 வரை
செல்லும் வழி
சென்னை பெங்களூர் சாலையில் பூந்தமல்லி தாண்டி சென்றால் செம்பரம்பாக்கம் ஊர் வரும் அங்கு இடதுபுறத்தில் இக்கோயிலின் பலகை இருக்கும் அதன் வழியே உள்ளே சுமார் 2 km சென்றால் இக்கோயிலை அடையலாம்.
Location :
Photos :
https://alayamtrails.blogspot.com/2021/04/sri-parasakthi-iswarar-temple.html