ஸ்ரீ பட்டீஸ்வரம் கோயில் – பேரூர்
இறைவன் : பட்டீஸ்வரர்
தாயார் : பச்சைநாயகி
தல விருச்சகம் : பனை ,புளியமரம்
தல தீர்த்தம் : நொய்யல் ஆறு ,
ஊர்: பேரூர் ,கோயம்பத்தூர்
மாவட்டம் : கோயம்பத்தூர் ,தமிழ்நாடு
- இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது , பின்பு கொங்கு சோழர்களால் 11 -13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இக்கோயிலின் அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் கட்டப்பட்டது . 17 ஆம் நூற்றாண்டில் அழகாதிரி நாயக்கரால் கனகசபை உருவாக்கப்பட்டது , கம்பாச்சாரி என்ற சிற்பியால் மருதமலையில் இருந்து கற்களை எடுத்துவந்து 28 வருடங்கள் கடும் உழைப்பில் இந்த கனகசபை மண்டபம் உருவாக்கப்பட்டது .
- இக்கோயின் முன் உள்ள தெப்பக்குளம் மாத்யம் என்ற அரசனால் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பது ,இவ் குறிப்பு இக் குளத்தில் உள்ள ஒன்று மற்றும் ஆறாம் படிகளில் உள்ளது.
- இக்கோயில் மேலைச்சிதம்பரம் ,காமதேனுபுரம் என்றும் அழைக்கப்படுகிறது .
- பெரும்பாலும் கோயில்களில் நடராஜர் ஆடும் நிலையில் காண்போம் ஆனால் இங்கு அவர் ஆடி முடிக்கும் நிலையில் காணலாம் . திருவாதிரை அன்று சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு சிறப்பாக நடைபெறுகிறது .
- இங்கு உள்ள தலவிருச்சமான இறைவா பனைமரம் நெடும் ஆண்டுகாலமாக அழியாமல் உயர்ந்து நிற்கிறது மற்றும் பிறவா புளி மரம் வெகு ஆண்டுகளாக உள்ளது இதன் விதையை வேறு இடங்களில் விதைத்தாலும் முளைப்பதில்லை . இங்குள்ள கால்நடைகள் இடும் சாணத்தில் புழு தோன்றுவதில்லை . மற்றும் இங்குள்ள நொய்யல் ஆற்றில் இறந்தவர்கள் எலும்புகளை போட்டால் சில நாட்களில் அவைகள் வெண் கற்களாக மாறிவிடுகிறது .
- இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் நமச்சிவாய என்ற மந்திரத்தை கூறி அவர்களுக்கு மோச்சதை தருவதாக ஐதீகம் ஆதலால் இங்கே இறப்பவர்கள் காதுகள் மேல் நோக்கி வைப்பார்கள் .
- வரலாறு : பிரம்மனை போல் படைப்பு தொழிலை செய்ய வேண்டும் என எண்ணி காமதேனு சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது ,லிங்கம் போல் உள்ள புற்றின் மேல் தினமும் பாலை சொரிந்து தவம் இருந்தது அப்போது அதனுடைய கன்று “பட்டி ” விளையாட்டாக புற்றை தன் காலால் இடறி உடைந்துவிட்டது இதைக்கண்ட காமதேனு மனம் வருந்தி சிவனிடம் மன்னிப்பு வேண்டியது அப்போது சிவபெருமான் காட்சி கொடுத்து ‘உன் கன்றின் குளும்படி தழும்பை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் ‘இது முக்தி தரும் இடம் என்பதால் நீ படைக்கும் தலமான திருக்கருகாவூர் சென்று தவம் செய்யுமாறு கூறினார் . உன் நினைவாக காமதேனுபுரம் உன் கன்றி நினைவாக பட்டிபுரி என்றும் எனக்கு பட்டீஸ்வரர் என்றும் விளங்கும் என்று கூறி மறைந்தார் . இன்றும் கன்றின் குளம்படி தழும்பு இறைவனின் மீது உள்ளது ,இவர் சுயம்புவாக காட்சி தருகிறார் .
- இங்கு நாற்று நடும் விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது . சகலமும் நானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் பார்வதி தேவியுடன் மாறு வேடத்தில் நாற்று நடுவதிற்காக சென்றுவிட்டார் போகும் போது நந்தி தேவரிடம் தான் இருக்கும் இடத்தை சுந்தரருக்கு தெரியப்படுத்த கூடாது என்று கூறிவிட்டு சென்றார் ,சுந்தரர் சன்னதியில் வந்து இறைவனை காணாது நந்தி தேவரிடம் கேட்டார் அப்போது அவர் இறைவன் இருக்கும் இடத்தை கூறிவிட்டார் ,நந்தி தன் சொல் மீறியதால் கோபமுற்று தன் மண்வெட்டியால் அவரின் தாடையில் அடித்தார் (இக்கோயிலின் நந்தி இன்றும் தாடை சப்பையாக காணப்படுகிறார் )நந்தி தன் தவறை உணர்ந்து இறைவனை நோக்கி தவம் இருக்க இறைவன் அவருக்கு தாண்டவ தரிசனம் காட்டினார் .
- அருணகிரிநாதர் இக்கோயின் முருகரை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் மற்றும் கச்சியப்ப முனிவர் 18 ஆம் நூற்றாண்டில் இக்கோயின் தலவரலாறு எழுதினார் .
செல்லும் வழி:
கோயம்பத்தூரில் இருந்து 7 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . நிறைய பேருந்து வசதிகள் உள்ளன .
கோயிலின் அருகில் ஐயர் ஹோட்டல் உள்ளது ,பொங்கல் சுவையாக இருக்கும் .
திறந்திருக்கும் நேரம்
காலை 6 .00 -01 .00 வரை ,மாலை 4 .00 -8 .30 வரை
Location:
திருச்சிற்றம்பலம்