ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – நுங்கம்பாக்கம்
இறைவன் : பிரசன்ன வெங்கடேஸ்வரர்
தாயார் : பத்மாவதி தாயார்
ஊர் : நுங்கம்பாக்கம்
மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு
- பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி இவ்வூரில் உள்ள குளத்தில் நீராடி இத்தலத்தில் அமைந்துள்ள ஈஸ்வரனையும், தாயாரையும் வணங்கினால் சூளை நோயிலிருந்து விடுபடலாம் என்று கூறி மறைந்தார் ,அவ்வாறே மன்னன் செய்து முடிக்க அவர் நோயிலிருந்து முழுவதும் குணம் அடைந்தார் .அரசன் கனவில் தோன்றிய பெருமாளுக்காக கோயில் கட்ட எண்ணி இவ் அரசன் இவ்வூரில் கண் பெருமாள் கோயில் கட்டப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்படுகிறது . பொம்ராஜபுரம் என்ற ஊர் இப்பொழுது நுங்கம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
- இக்கோயிலின் உள் பிரகாரத்தில் சிறிய வடிவில் ஆஞ்சநேயர் எழுந்தருளுகிறார் ,இந்த பகுதியில் இந்த ஆஞ்சநேயர் மிகவும் பெயர் பெற்றவர் .
- சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் , தாயார் பத்மாவதிக்கு தனி சன்னதி உள்ளது ,மற்றும் சீதா லக்ஷ்மணன் சமேத ஸ்ரீராமர் சன்னதி ,லட்சுமி நரசிம்மர் பெருமாள் ,ஆண்டாள் சன்னதி தனி தனியாக உள்ளது.
- இக்கோயில் சுமார் 400 வருடங்கள் முந்தையது என்று கருதப்படுகிறது
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 -10 மணி வரை , மாலை 5 -8 மணி வரை
செல்லும் வழி
நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்பின்புறம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
அருகில் உள்ள கோயில்கள் :
1 . சுயம்பு வடிவ அசலாத்தம்மன் கோயில்
2 . அகத்தீஸ்வரர் கோயில் – நுங்கம்பாக்கம்
Location :