ஸ்ரீ புண்டரீகாக்ஷன் பெருமாள் கோயில் – திருவெள்ளறை
மூலவர் : புண்டரீகாட்சன் ( செந்தாமரை கண்ணன் )
தாயார் : செண்பகவல்லி
தல விருட்சம்: வில்வம்
தல தீர்த்தம் : மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக
தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம்.
ஊர் : திருவெள்ளறை
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு
மங்களாசனம் : திருமங்கை ஆழ்வார் , பெரியாழ்வார்
ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 4 வது தலமாகும் .
உய்யக்கொண்டான் அவதார தலமாகும் .
இந்த கோயில் போகும் வழியே ஒரு நமக்கு ஒரு புது இன்பத்தை தரும் ஏன்னென்றால் போகும் வழியில் பசுமையான வயல்கள் சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் மற்றும் மயில்கள் கூட்டம் கூட்டமாக தன தோகையை விரித்து ஆடுவதை காணலாம் .
இக்கோயிலும் மிக அழகான கிராமத்தில் வெண்பாறைகளால் ஆன குன்றின்மீது அடர்த்தியான மரங்களும் வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் நந்தவனத்தோடு மயில்கள் அங்கும் இங்கும் சத்தமிட்டு கொண்டே பறந்து செல்லும் அற்புதமான ஒரு சூழ்நிலையில் உள்ளது .
இக்கோயிலானது ஒரு கோட்டை போன்ற அமைப்போடு உள்ளது .இக்கோயிலின் தென் பகுதி மதில்சுவரோடு கல்லாலான அறைகள் உள்ளது . அங்கிருந்து சத்தம் இட்டால் கோயில் முழுவதும் கேட்கும் என்பார்கள் .
வெண்பாறைகள் இங்கு உள்ளதால் இவ்விடத்துக்குப் “திருவெள்ளறை “ என்ற பெயர்
ஏற்பட்டது என்று கூறுகிறார்கள் .
கோயில் அமைப்பு :
முற்று பெறாத 50 அடி உயரம் கொண்ட கோபுரம் பார்ப்பதற்கு மிக உய்யாரமாக இருக்கிறது . இக்ககோபுரத்தை கடக்க நாம் 18 படிகளை ஏறவேண்டும் , இந்த 18 படிகளும் கீதையின் 18 அதிகாரங்களை குறிக்கிறது .
கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலிபீடத்தை நாம் தரிசிக்கலாம் . இக்கோயிலானது மூன்று பிரகாரங்களை கொண்டது . கொடிக்கம்பத்திற்க்கு அடுத்து ஐந்து படிகள் வரும் அவைகள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன அவைகளை கடந்து உள்ளே சென்றால் நாழி கேட்டான் வாசலை அடையலாம் . இந்த நாழி கேட்டான் வாசல் என்பது இந்த வாசலில் நின்றுதான் இரவில் வெளியே சென்று வெகு நேரம் கழித்து கோயிலுக்கு திரும்பிய பெருமாளை , ஏன் இவ்வளவு நேரம் ? என்று தாயார் கேட்டாராம் . இவ் வாயிலை கடந்து நாம்
சென்றால் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தூண்களை கொண்ட மாடங்களை நாம்
காணலாம் , வலது புறத்தில் மிக அழகான சுதைசிற்பங்களை வடித்துள்ளார்கள்.
இரண்டு வாயில்கள் :
இப்போது நாம் இறைவனை தரிசிக்க இரண்டு வாயில்களை காணலாம் . ஒன்று உத்தராயண வாசல் மற்றொன்று தக்ஷிணாயண வாசல். தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயண வாசல் வழியாகவும் சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. பெருமாளை நேரடியாக தரிசனம் பெற இதுதான் சரியான பாதை என்று வகுத்துள்ளார் . இரண்டு வாயில்களும் படிக்கட்டுகளுடன் உள்ளது . அந்த படிக்கட்டுகளை ஏறி சென்றால் நாம் பெருமாள் கருவறை உள்ள மண்டபத்தை அடையலாம் .
புண்டரீகாக்ஷ பெருமாள்
பெருமாள் நாடு நாயகனாக பெரிய திருமேனியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை தருகிறார் . பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர். பெருமாளின் இரு பக்கமும் கருடனும் , ஆதிசேஷனும் மனித வடிவில் இறைவனை வணங்கியபடி நின்றுகொண்டிருக்கிறார்கள் . மூலவருக்கு முன்பாக உள்ள சிம்மாசனத்தில் உற்சவர்கள் ஆன செந்தாமரை கண்ணனும் , பங்கஜவல்லி தாயாரும் சேவை தருகிறார்கள் . பெருமாளின் காலடியில் இடது புறம் பூமாதேவியும் வலது புறம் மார்கண்டயே மகரிஷியும் அமர்ந்த படி உள்ளார்கள் .
தாயார் சன்னதி :
இறைவனை தரிசித்துவிட்டு நாம் வெளியே வந்தால் வலது புறத்தில் தீர்த்த கிணறு உள்ளது அங்கிருந்தே இறைவனுக்கு அபிஷேகத்திற்கு நீர் எடுத்து வருகிறார்கள் பின்பு அருகில் நாம் செண்பகவல்லி தாயார் சன்னதியை அடையலாம் . இக்கோயிலில் தாயாருக்கே முன்னுரிமை உண்டு , விழா காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்னாடி வருவார் . பெருமாளுக்கு செய்யப்படும் அணைத்து பூஜைகளும் தாயாருக்கும் செய்யப்படும் .
தாயார் சன்னதி உள்ள முன் மண்டபத்தின் இடது புறத்தில் உய்யகொண்டாருக்கு தனி சன்னதி உள்ளது . பின்பு நாம் பிரகாரத்தை வலம் வந்தால் முதலில் 8 கைகளை கொண்ட
சக்கரத்தாழ்வாரை தரிசிக்கலாம் பின்பு ஆண்டாள் சன்னதி,நரசிம்மர் சன்னதி அதன் பின்பு
ஆஞ்சநேயர் சன்னதியை காணலாம் .
பின்பு இரண்டாம் பிரகாரத்தை சுற்றினால் நாம் அழகான பூத்து குலுங்கும் செடிகள்,அடர்ந்த மரங்கள் கூடிய நந்தவத்தை காணலாம் , மயில்களின் சத்தம் நம் செவிகளுக்கு தேனாய் இருக்கிறது . மார்க்கண்டேய மகரிஷி மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் வழிபட்ட குகை உள்ளது .சிபி சக்கரவர்த்தி பூமி தேவிக்கும் மார்க்கண்டேய முனிவருக்கும் பெருமாள் நேரிடையாக தோன்றி காட்சி கொடுத்ததாகவும் வரலாறு சொல்கிறது . கங்கை, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய நதிக்கரையோரம் வாழ்க சுமார் நான்காயிரம் அந்தணர்களை சிபி சக்கரவர்த்தி இங்கு அழைத்து வந்து பெருமாளுக்கு சேவை புரிய வைத்ததாக ஒரு செய்தியும் உண்டு. பின்புறம் வசந்தமண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது அதன்
எதிரே குடைவரை கோயில் உள்ளது .
குடைவரை கோயில் :
இக்குடைவரை கோயிலானது ஒரு கை ,கால்கள் சிதைந்த நிலையில் உள்ள வாயில் காவலன் புடைப்பு சிற்பம் உள்ளது , பின்பு அழகிய தூண்களை கொண்ட ஒரு விசாலமான மண்டபம் உள்ளது , மண்டபத்தின் இரு புறமும் கருவறை போன்று அறை குடையப்பட்டுள்ளது ஆனால் உள்ளே வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் இல்லை .
பரிகாரம் :
இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள்
கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல்
நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.
சுவஸ்திக் கிணறு :
இக்கோயின் வெளியே வந்து இடதுபுறமாக கோயிலை வலம் வந்து பின்புறம் சென்றால் இந்த ஸ்வஸ்திக் கிணற்றை அடையலாம் , இது தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .
சுமார் 1200 வருடங்கள் முன்பு அதாவது 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சி காலத்தில் கம்பன் அரையன் என்பவரால் இக்கிணறு வெட்டப்பட்டது என்றும் இக்கிணறு “மார்பிடுகு கிணறு ” என்றும் அழைக்கப்பட்டது . இக்கிணற்றில் “மனித வாழ்க்கையின் நிலையிலாததை உணர்த்தி அறம் செயல்களை செய்வீர் ” என்று பொருள்பட பாடல் வடிவ கல்வெட்டு ஒன்றும் உள்ளது .
இக்கிணறானது ஸ்வாதிக் வடிவில் மிக அழகாக வெட்டியுள்ளார் ,இதுபோல் வேறு எங்கும் காண இயலாது .
More Photos:
https://alayamtrails.blogspot.com/2022/07/sri-pundarikakshan-perumal-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை , மாலை 3 .30 முதல் இரவு 8 .30 மணி வரை
செல்லும் வழி :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
அருகில் உள்ள கோயில்கள் :
1 .ஞீலிவனேசுவரர் கோயில் – திருப்பைஞ்ஞீலி (திருமண தடை பரிகார தலம்) 5 km
தொலைவில் உள்ளது .
2 . உத்தமர் கோயில் – உத்தமர்கோயில் (1 வது டோல் கேட் )
English Summary :
Sri Pundarikakshan perumal temple is situated inThiruvellarai village in Trichy District, It is the Fourth temple in the line of 108 Divyadesams. Thiruvellarai Perumal Temple is also
known as Thiruvallarai or SwethaGiri which means White Hill. Thiruvellarai Perumal Temple is
located on a small hill, The Moolavar idol name is Sri Pundarikaksha Perumal.
The temple has three inscriptions in its two rock-cut caves, two dating from the period of
Nandivarman II and the other to that of Dantivarman. It also has Pallava
sculptural depictions of Narasimha and Varaha, two of the ten avatarss of Vishnu. . A swastika
shaped temple tank built in 800 AD by Kamban Araiyan during the reign of Dantivarman is outside
the temple complex.
Location :