ஸ்ரீராமநவமி பூஜை
ஸ்ரீராமநவமி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புனர்பூசம் சுக்லபட்ச நவமி திதியன்று பகலில் செய்திட வேண்டும். ராமரை தாமரை மலர்கள் அல்லது இதழ்களால் அர்ச்சிப்பது மிகச் சிறந்தது நிவேதனத்திற்கு பானகம். பருப்பு வடை, நீர் மோர், பாயசம் செய்தல் வேண்டும்.
பூஜை நன்கு நிறைவேற கணபதியை வேண்டி விக்னேச்வர பூஜை செய்திடவும் பின்னர் ராமரின் படத்துக்கு அல்லது விக்ரகத்திற்கு ஸ்ரீராம ஸஹஸ்ர நாமாவளி அல்லது ஸ்ரீராமாஷ்டோத்தர சத்நாமாவளியைச் சொல்லி, அர்ச்சனை செய்யலாம். இவை தெரியாதவர்கள், ஸ்ரீராம ஜெய்ராம ஜெய ராமா என்று மனமுருகி 108 முறை சொன்னாலும் போதும், பானகம், நீர் மோர் விநியோகம் செய்வது சிறப்பான பலன்தரும்.
ஸ்ரீ ராம மஹா மந்திரம்:
பார்வதி பரமனிடம் கேட்கின்றாள் பிரபோ! இந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.”
ஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய அந்த மகா மந்திரமே “ராம” மந்திரமாகும்.
“ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே’‘
மற்றும்
நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்”
என்று கம்பன் உறுதியுடன் கூறுகின்றார். அதைக் கலிச்சக்ரவர்த்தி ஆஞ்சநேயன் வாயிலாகவும் கூறுகின்றார்.
பானகம் , நீர் மோர் செய்யும் முறைகளை இவ் இணையத்தளத்தில் நைவேத்தியங்கள் என்ற தலைப்பில் கொடுத்துள்ளேன் பார்த்து அறிந்துகொள்ளவும்
சமூக வலைத்தளங்கள் மூலம் தரவப்பட்டது . தொகுத்தவர்களுக்கு நன்றி !
ஸ்ரீ ராமஜெயம்