ஸ்ரீ ரங்கநாதர் கோயில் – தேவதானம்
வடஸ்ரீரங்கம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஒரு திவ்ய க்ஷேத்ரம். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் . இங்குள்ள பெருமாள் சாளிகிராம கல்லால் ஆன 18 அடி நீளத்தில் 5 அடி உயரத்தில் ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார் .
முதலில் நாம் ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால் கொடி மரமும், கருடாழ்வார் ஆகியோரை தரிசனம் செய்யலாம் . அடுத்ததாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு உள்ளே சென்றால் துவாரகா பாலகர்கள் நம்மை வரவேற்கிறார்கள் .அவர்களது வலது புறத்தில் பன்னிரு ஆழ்வார்கள் ,மணவாள முனிவர் ,ராமானுஜர் மற்றும் தேசிகர் ஆகியோர் உள்ளனர் .
பின்பு நாம் உள்ளே சென்றால் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் காட்சியளிக்கிறார் .இவரின் நாபின் மீது பிரம்மா உள்ளார் . இறைவனின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் .
அவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . 18 அடி நீளம் 5 அடி உயரத்துடன் காணப்படும் இறைவன் சாளக்ராம கல்லால் செய்யப்பட்டது .
இவ்விடம் தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடம் என்பதால் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது .இவ்வோரின் அழகில் மயங்கிய சாளுக்கிய மன்னன் இந்த இடத்தை பார்த்து அதிசயித்து நின்றான்.
அவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை கண்டு அவர் அழகில் மயங்கி அதைபோல் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தான் ,காவேரி கரையில் ஸ்ரீரங்கம் எவ்வாறு பச்சை பசேலென்று இருந்ததோ அதே போல் இந்த இடமும் இருந்ததால் இங்கேயே பெருமாளுக்கு கோயில் கட்ட தீர்மானித்தான் . அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு ,கதிரடிக்கப்பட்டு காலத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார் . அரசர் பார்க்கும் போது அவரை காணவில்லை . திடீரென அவர் மறைந்தார் , மன்னன் விவசாயியை தேடினார் , களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்து ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் .சாய்கோஇலத்தில் பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து மறைந்தார் .இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன் இவ்விடத்தில் கோயில்கட்ட எண்ணி நேபாள நாட்டில் இருந்து சாளிக்ராம கல்லை கொண்டு வந்து இறைவனுக்கு சிலையை வடித்து வழிபட்டான் . ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெரியதாக பெருமாள் பெரியதாக உள்ளதால் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .
பெருமாளுக்கு இடது புறம் ரங்கநாயகி தாயார் மற்றும் அருகில் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது .
இவ் பெருமாளை அம்மாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து 7 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணக்கஷ்டம் , திருமணத்தடை நீங்கும் ,குழந்தை பாக்கியம் கிட்டும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-ranganathar-temple-devadanam.html
திறந்திருக்கும் நேரம்
காலை 7 .00 – 12 .00 , மாலை 4 .30 – 7 .00 மணி வரை
செல்லும் வழி:
சென்னை மீஞ்சூரில் இருந்து சுமார் 6 km தொலைவில் தேவதானம் உள்ளது . அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து 3 km தொலைவில் உள்ளது . தச்சூர் கூட்ரோடு இருந்து பொன்னேரி வழியாக தேவதானம் 16 km தொலைவில் உள்ளது .