Sri Sathyanathar Temple – Kanchipuram

ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத சத்யநாதர் கோயில் – காஞ்சிபுரம்

Sri Sathyanathar Temple - Kanchipuram

இறைவன் : சத்யநாதர் , திருகாளீஸ்வரர் , காரைத்திருநாதர்

இறைவி : பிரம்மராம்பிகை

தலவிருட்சம் : காரைச்செடி

தலதீர்த்தம் : இந்திர தீர்த்தம்

புராண பெயர் : கச்சைநெறிக்காரைக்காடு

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில்
        போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
        காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
        நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.


தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் இத்தலமானது 237 வது தலமாகும் . தொண்டைநாட்டு தேவார தலங்களில் இத்தலம் 5 வது தலமாகும் . மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலமானது புத பகவானுக்கு உகந்த தலமாகும் .

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக சுமார் 2 km சென்றால் இக்கோயிலை நாம் அடையலாம் . ஆலயத்தின் முகப்பு நம்மை கோயிலுக்கு அழைக்கிறது . சாலையை விட சிறிது பள்ளத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தை நாம் தரிசனம் செய்து கொண்டே முன் உள்ள   கொடி கம்பம் மற்றும் பலிபீடத்தை தரிசிக்கலாம் . பின்பு நாம் நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியை பெருமானை தரிசனம் செய்யலாம் .  

அப்படியே நாம் கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் வெளிபிரகாரத்தை அடையலாம். இங்கு நாம் இடதுபுறத்தில் நவகிரக சன்னதி மற்றும் புதன் சன்னதியை காணலாம் . அப்படியே நாம் உள் வாயிலை கடந்து உள்ளே சென்றால் கருவறையை சுற்றி உள்ள முதல் பிரகாரத்தை அடையலாம் . முதல் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி ,பெரிய விநாயகர் சன்னதி,நால்வர் ,இந்திரன்,புதன் ,பைரவர் ,சிவலிங்கங்கள், வள்ளி  தெய்வானை சமேத முருகர் சந்நிதி,கெஜலக்ஷ்மி  மற்றும் பெருமாள் சன்னதியை தரிசிக்கலாம் . கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர்,தட்சணாமூர்த்தி ,லிங்கோத்பவர்,பிரம்மன் ,துர்க்கை ஆகியோர்கள் உள்ளார்கள் .

கருவறையில் அன்பும் அருளும் நிறைந்த இறைவன் சத்யநாதர் சுயம்பு மூர்த்தியாக சிவந்த நிறத்தில் காணப்படுகிறார் . சற்று பெரிய லிங்க திருமேனியாக பச்சை வண்ண ஆடை அணிந்து காட்சிகொடுக்கிறார் . அவருக்கு அருகிலேயே இறைவி பிரம்மராம்பிகை  தெற்கு பார்த்தபடி உற்சவ திருமேனியாக  காட்சிதருகிறார் . காஞ்சியில் உள்ள சிவத்தலங்களை  காமாட்சி அம்மனே பொதுவானவர் என்பதால் இங்குள்ள சிவா கோயில்களில் அம்மனுக்கு என்று தனி சன்னதி தனியே இருப்பதில்லை . ஆனால் இக்கோயிலில் உற்சவராக பிரம்மராம்பிகை என்ற திருநாமத்தோடு அம்பாள் உள்ளது ஒரு சிறப்பாகும் . உற்சவ திருமேனியாக இருந்தாலும் இறைவனுக்கு செய்யும் எல்லா பூஜைகளும் தாயாருக்கும் உண்டு . ஆனால் விழா காலங்களில் வெளியே எடுத்து செல்வதில்லை . 

தட்சிணாமூர்த்தி:

ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக் கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி பகவான் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய 4 சீடர் களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இந்தத் தலத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது.

தாய், தந்தையரைப் பிரிந்திருந்த புதன், இந்த தலத்திற்கு வந்து தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்தியநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி காட்சி தந்த சிவபெருமான், உரிய காலத்தில் கிரகப் பதவி கிடைக்கும் என்று அருள்புரிந்தார். இந்த புத பகவான், மூலவரின் வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் 11 .30 மணி வரை , மாலை 4 .00  மணி முதல் இரவு 7 .00 மணி வரை

Photos:

https://alayamtrails.blogspot.com/2024/12/sri-sathyanathar-temple-kanchipuram.html

English:

Lord: Satyanath, Thirukaliswarar, Karaithirunath

God: Brahmarambikai

Thalaviksam: Karaichedi

Talathirtha: Indra Thirtha

Mythological name: Kachanaikaraikadu

City: Kanchipuram

District : Kanchipuram, Tamil Nadu

Sung by: Thirunnasambandar

This temple is the 237th among the 276 Shiva temples that have received Devara song. This place is the 5th place among Thondainat Devar places. And among the Navagraha temples in Kanchipuram, this temple is the auspicious place for Lord Buddha.

From Kanchipuram bus station we can reach this temple by going about 2 km through government hospital. The facade of the temple invites us to the temple. The temple is located in a little depression from the road. We can visit the three-tiered Rajagopuram towards the west and see the flag pole and the altar in front. Then we can have darshan of Lord Nandi in Nandi Mandapam.

Similarly, if we go inside through the tower, we can reach the outside. Here we can see the Navagraha shrine and the Buddha shrine on the left. Similarly, if we pass through the inner gate and enter, we can reach the first prahara around the sanctum sanctorum. In the first prakaram you can visit Nataraja shrine, Great Vinayagar shrine, Nalvar, Indra, Budhan, Bhairava, Shiva lingams, Valli Deivanai Sametha Muruga shrine, Kejalakshmi and Perumal shrine. Goshta Murthas include Vinayaka, Dakshanamurthy, Lingotpavar, Brahman and Durgai.

In the sanctum sanctorum, full of love and grace, Lord Satyanath Swayambu is seen in red color. She wears a green dress as a slightly bigger Linga Thirumeni. Beside him, Goddess Brahmarambika is seen as Utsava Thirumeni looking south. As Goddess Kamakshi is common to Shiva temples in Kanchi, there is no separate shrine dedicated to Goddess in the Shiva temples here. But Ambal with the name Brahmarambikai as Utsavara in this temple is a special feature. Mother has all the poojas done to the Lord even though she is a celebratory bride. But it is not taken out during the festival.

Dakshinamurthy:
Lord Dakshinamurthy in the temple looks a little different. Usually, Lord Dakshinamurthy appears to 4 disciples namely Sanakar, Sanandan, Sanatan and Sanatkumar in the state of enlightenment. But at this place there are 7 disciples near Dakshinamurthy sitting under the kallala tree. It is a different system.

Buddha, separated from his mother and father, came to this place and prayed to Satyanath to grant him a position in the planets. Lord Shiva gave him vision and blessed him that he will get planetary position in due time. This Budha Bhagavan is facing South to the right of the Moolah.

Opening Hours:

6.00 AM to 11.30 AM, 4.00 PM to 7.00 PM

Directions:
It is about 2 km from Kanchipuram Bus Stand via Government Hospital.

செல்லும் வழி :

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக சுமார் 2 km தொலைவில் உள்ளது .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply