ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் கோயில் – அரும்பாக்கம்
இறைவன் : சத்ய வரதராஜ பெருமாள்
தாயார் : பெருந்தேவி தாயார்
ஊர் : அரும்பாக்கம் , சென்னை
சென்னையில் உள்ள அரும்பாக்கம் என்ற இடத்தில் இக்கோயிலானது அமைந்துள்ளது . கூவம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . இந்த அரும்பாக்கத்திற்கு புராண பெயராக சத்யபுரி என்று பெயர் இருந்தது .
பெருமாள் சத்ய வரதராஜ பெருமாள் என்ற திவ்ய நாமத்தோடு இங்கு அருள்பாலிக்கிறார் . சத்யபுரி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரின் நாமத்தை முன் பெயரோடு அழைக்கப்படுகிறார் .
பெருமாள் அமர்ந்த கோலத்தில் அர்த்த பத்மாசனமிட்டு அமர்ந்துள்ளார் . வலது மேல் கையில் சக்கரமும் , இடது மேல் கையில் சங்கும் , வலது கீழ் கை அபய ஹஸ்தமாகவும் , இடது கீழ் கை தண்டின் மீதும் உள்ளது . அவர் ஸ்ரீதேவி ,பூதேவி தாயாருடன் உள்ளார் . இங்கு சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் அவர் கையில் உள்ளது .
பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நமக்கு அன்பும், கருணையும் வாரி வழங்குகிறார் . கோயிலை வலம் வரும்போது ஆண்டாள் சன்னதி , விஷ்ணு பாதம் மற்றும் சீதா சமேத ராமர் சன்னதி அவருக்கு எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவைகள் உள்ளன . சக்ரத் ஆழ்வார் யோக நரசிம்மர் சன்னதி உள்ளது.
செல்லும் வழி :
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது .
Location :