ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் -மப்பேடு
இறைவன் : ஸ்ரீ சிங்கீஸ்வரர்
தாயார் : ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள்
தல விருச்சகம் : இலந்தை மரம்
தல தீர்த்தம் : கமல தீர்த்தம்
ஊர் : மப்பேடு
மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு
- மூல நட்சத்திரக்காரர்கள் பரிகார தலம்.
- கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் இக்கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது ,அப்போது இக்கோயின் பிரதான கோபுரத்தின் உச்சியில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது .அதில் சோழ மன்னன் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கிபி 967 ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .
- பின்னர் தொண்டை மண்டலத்தில் சிறந்து விளங்கிய மெய்ப்பேடு என்னும் மப்பேடு கிராமத்தில் கிபி 1501 ல் சைவ வேளாளர் குலத்தில் பிறந்த அரியநாத முதலியார் என்பவர் விஜயநகரை ஆண்ட கிருஷ்ணதேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் அரசவையில் தளவாயாகவும் தலைமை கணக்காளராகவும் ,மெய்க்காப்பாளராகவும் அரியநாத முதலியாரை நியமித்தார் . இவர் தன் செல்வாக்கினை பயன்படுத்தி தான் பிறந்த ஊரான மப்பேடு கிராமத்தில் இந்த சிங்கீஸ்வரர் கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரமும் ,மதில் சுவர் ,அம்மன் கோயில் பதினாறு கால் மண்டபம் ,வசந்த மண்டபம் முதலியவற்றை கட்டி வைத்தார் . இவரது நினைவாக இக்கோயிலின் நுழைவுவாயிலில் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு இடையே நாகம் நிழலில் அரியநாதர் படுத்திருப்பது போல் சிற்பவேலை செய்யப்பட்டுள்ளது .
- வரலாறு : ஆலய தல புராணத்தின்படி அனந்த தாண்டவ நடராஜர்மூர்த்தி திருவாலங்காட்டில் நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக தவறியது .மீண்டும் அந்த நடனத்தை காண மெய்ப்பேட்டில் லிங்கத்தை பூஜித்தால் சிங்கியின் பக்திக்கு இணங்கி சிவபெருமான் மீண்டும் இங்கே நடனம் புரிந்ததால் இறைவன் பெயர் சிங்கி + ஈஸ்வரர் = சிங்கீஸ்வரர் என பெயர் பெற்றார்.
- அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவராக இருப்பதால் இவருக்கு ஸ்ரீ புஷ்பா குஜாம்பாள் என்று பெயர் வழங்கலாயிற்று.
- தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொது மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டதால் இவ்வூர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு-பெண்) என்றும் பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்சமயம் மப்பேடு என்றும் அழைக்கப்படுகிறது.
- இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் சுமார் 5௦௦௦ வருடங்களுக்கு முற்பட்ட வீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. இச்சன்னதி முன் ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப்பாடினார் என்பது ஐதீகம். இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இங்கு வந்து இசை பயிற்சி மேற்கொண்டு இறைவனை வழிபட்டால் இசைத்துறையில் பெரும்புகழை அடையலாம் என்பது ஐதீகம். ஆஞ்சநேயர் மற்றும் சரஸ்வதி மூலநட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இக்கோவில் மூலநட்சத்தரகாரர்களின் வழிபாடு தலம் ஆகும்.
- இக்கோவிலில் உள்ள துர்க்கையின் கீழ் மகிஷனின் உருவம் உள்ளதால் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை ராகுகாலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்.
- கொடிமாத்திற்கு அருகிலுள்ள நந்தியையும்,மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதில் எதிரிலுள்ள நவ வியகரான கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்து வழிபட்டால் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-singeeswarar-temple-mappedu.html
திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி:
காலை 6 .00 -10 .00 மணி வரை மாலை 5 .30 -7 .30 வரை
செல்லும் வழி :
சென்னையில் இருந்து பேரம்பாக்கம் வழியாக திருவள்ளூர் செல்லும் வழியில் சுமார் 25 km தொலைவில் இக்கோயில் உள்ளது . ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் வழியாகவும் செல்லலாம்.
Location :
நான் தரிசித்த நாள் : 28 .04 .2019
ஓம் நமசிவாய