ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில் – சோமங்கலம்
இறைவன் : சோமநாதீஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருச்சம் : சரக்கொன்றை
ஊர் : சோமங்கலம்
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
இக்கோயிலானது சென்னை நவகிரக தளங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகும் . தேவார வாய்ப்பு தலமாகவும் விளங்குகிறது .அப்பர் தன் வாக்கில் இக்கோயிலை பற்றி கூறியுள்ளார் . இக்கோயிலானது சோழர்காலத்தை சேர்ந்ததாகும் .இவ்வூருக்கு சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உண்டு . கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள இக்கோயிலானது 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது .
சோமன் என்ற பெயருடைய சந்திரன் தட்சனின் சாபத்தால் 18 கலைகளையும் இழந்து க்ஷயரோகமுற்று இந்த தலத்தில் உள்ள இறைவனை நோக்கி பெரும் தவம் புரிந்து சிவபெருமான் அருளால் தட்சனின் சாபம் நீங்கி முழு சந்திரனாக உருப்பெற்றான்.
தொண்டை நாட்டை ஆண்டு வந்து சோழமன்னன் தன் நாட்டில் 108 கஜபிருஷ்ட சிவாலயம் அமைத்து திருப்பணி செய்துவந்தான் , அவற்றில் ஒன்றான இத்தலத்தில் திருப்பணிகள் நடைபெறும்போது வேற்றுநாட்டு அரசன் போர்புரிய வரும்போது படைவீரர்கள் ஆலைய பணியில் இருந்ததினால் அரசனால் எதிர்த்து போர் புரிய முடியாமல் சோமநாத ஈஸ்வரரிடம் மன வேதனையுற்று வேண்டும் போது இறைவன் நந்திதேவரை அழைத்து அப்படைகளை விரட்டி மேலும் எந்த இடையூறும் வராதிருக்க ‘கிழக்கு நோக்கியே இருப்பாயாக ‘ என்று ஆணையிட்டதால் நந்திதேவர் இறைவனை நோக்காது , கிழக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். .
இறைவன் அமைப்பு :
இறைவன் கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் பானம் சற்று உயரமாக காட்சிதருகிறார் . சதுர்புஜங்களுடன் கருணை முகத்தோடு தாயார் காட்சி தருகிறார் . சந்திரன் தனி சன்னதியில் அழகே உருவாக காட்சிதருகிறார் . அவர் கையில் அல்லிமலருடன் நின்ற கிழத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள நடராஜருக்கு சதுர தாண்டவ நடராஜர் என்று பெயர் .
கல்வெட்டுகள் :
இங்குள்ள கல்வெட்டுகளில் முதலாம் குலதுங்க சோழன் (கிபி 1070 -1120 ), இரண்டாம் இராஜராஜ சோழன் ( கி பி 1150 -1163 ), மூன்றாம் குலந்துங்க சோழன் ( கி பி 1178 -1216 ) அகையவர்களின் கல்வெட்டுகள் உள்ளன . இங்குள்ள கல்வெட்டுகளில் ஏரி தூர்வாரியது , கோயிலுக்கு நிலங்கள் தானம் அளித்தது , பசு மாடு தானம் கொடுத்தது , காசுகள் கொடுத்தது ,கோயில் விளக்கு எரிய எண்ணெய் கொடுத்தது இவற்றை பற்றி குறிப்புகள் உள்ளன .
சந்திரன் தன் சாபம் நீங்க தீர்த்த குளம் ஒன்றை அமைத்தான்.வினைதீர்த்தான் குளம் என்ற பெயரில் இக்கோயிலின் மேற்கில் உள்ளது . இப்போது தீர்த்தாங்குளம் என்று அழைக்கப்படுகிறது .
பரிகாரம் :
இவ்வாலய இறைவனையும் , சந்திரனையும் சோமவாரம் , பௌர்ணமி ஆகிய தினங்களில் வழிபடுவதினால் சந்திரனால் ஏற்படும் அனைத்து வகையான தோஷங்களும் நிவர்த்தியாகும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/11/sri-somanaadheeswarar-temple-somangalam.html
திறக்கும் நேரம் :
காலை 7 .00 மணி முதல் 10 .30 மணி வரை , மாலை 5 .00 மணி முதல்
7 .30 மணி வரை
Contact detail: சுரேஷ் குருக்கள் : 9962003496
செல்லும் வழி :
சென்னை தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா வழியாக செல்லலாம் . 18S என்ற பேருந்து தமபரத்தில் இருந்து செல்கிறது . குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியில் சென்றால் இக்கோயிலை அடையலாம் . குன்றத்தூரில் இருந்து M89 ,88 ஆகிய பேருந்துகள் செல்கின்றன .
Location: